Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

திருமணமாம் மறுமணம்……..

பதிந்தவர் kalyanakamala மேல் செப்டம்பர் 16, 2009

இந்த வூக் குண்டோர் என்கீற 107 வயதான மலேசியாவைச் சேர்ந்த அம்மா தன்னுடைய 37 வயது மொஹம்மது என்கிற கணவனை விவாகரத்து செய்து விட்டு 23 வது தடவையாக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறார்களாம்.
காரணம் மொகம்மது போதை மருந்து உட்கொள்பவராம். அவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடிவு செய்து புன‌ர்வாழ்வு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து இருக்கிறாரம். அவர் அந்த போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டால் தன்னை விட்டுப்போய் விடுவார் என்று பயமாம் இந்த அம்மாவுக்கு.
உலகத்திலே எதுக்குத்தான் கல்யாணம், எதுக்குத்தான் விவாகரத்து என்று காரணம் இல்லாமல் போய்விட்டது.wook kundor

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 3 மறுமொழிகள் »

எங்க வீட்டு PEACH BLOSSOM!

பதிந்தவர் kalyanakamala மேல் செப்டம்பர் 15, 2009

PEACH BLOSSOM

மெல்பர்ன் நகரத்தில் எங்கள் வீட்டுல வளர்ந்திருக்கிற ஒரு Peach  செடியைக் கொத்து கொத்தான பூக்களுடன் படம் எடுத்துப்போட்டிருக்கிறேன். இதே போல நகரம் முழுவதும் பூக்களும் பழங்களும் பூத்தும் காய்த்தும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

செப்டம்பர் ,அக்டோபர், ந‌வம்பர் இங்கு மெல்பர்ன் நகரம் கொள்ளை அழகுடன் பூத்துக் குலுங்குகிறது!பொன் வண்டொன்று வந்து இளமையான பெண்ணின் முகத்தில் மட்டுமல்லாது எல்லோர் முகத்திலும் மோதுகிறது!(இதை மற்ற நாட்டிலிருக்கும் நன்பர்கள் என்ன ஈயடிக்கிறாயா? )என்று விளையாட்டாகக் கேட்கிறார்கள்.‌தட்ப வெப்பமும் நன்றாக இருக்கிறது.
எந்த வீட்டுக்குப் போனலும் அவர்கள் வீட்டில் பழுத்த பழங்களை தருகிறார்கள். வித‌விதமான பூக்கள் . வித‌ விதமான பழங்கள். வித விதமான மனிதர்கள்.
கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கிறது.இனிமையான அனுபவம்.
வருகிற வாரம் நவரத்திரிப் பண்டிகை வேறு . விதவிதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகும்  நமது இந்தியர்கள்.. விருந்துகளுக்கு பட்டியலிடும் நமது பெண்கள். அதை ரசித்து மகிழும் நமது ஆண்கள். விருந்து என்றாலே பெண்கள்தான் பட்டியலிடுவார்களா என்று கேட்காதீர்கள். ஆண்களும் பங்கேற்கிறார்கள். நமது பெண்கள் முன்னின்று நடத்துகிறார்கள்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »

சுறுசுறுப்பாக்கும் டானிக்!

பதிந்தவர் kalyanakamala மேல் ஆகஸ்ட் 28, 2009

சொக்கன் எழுதிய கைதட்டல்கள் படித்தேன்!மிக அழகாக எழுதியிருந்தார்.ஊக்குவிக்கும் அன்பான புகழ்ச்சியையும், மற்றவர் செயலால் நாம் அடைந்த  சந்தோஷத்தை வெளிக்காட்டி அவரை மகிழ்விப்பதையும் பற்றி எழுதியிருந்தார்!
உணர்வுப்பூர்வமாக என்னால் அதை அணுக முடிந்தது. ஏனெனில் பல சமயங்களில் அதன் நன்மையான விளைவுகளை நான் எதிர்கொண்டிருப்பதுதான் காரணம்.
நான் இப்போது வந்து இருப்பது ஆஸ்திரேலியாவில் என் மகள் வீட்டில். மகளும் மருமகனும் பேரன் பேத்தியும்  மெல்பர்ன் நகரமும் கேட்கவா வேண்டும் அருமையான வாழ்க்கைத் தரத்துக்கு.
 என் வரவுக்காகக்  காத்திருந்தவர்கள் என் பேரக்குழந்தைகள். கிட்டத்தட்ட எனக்கு அவர்கள் நண்பர்கள்.ரொம்ப கரிசனத்தோட கவனித்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்.என்னோடுதான் தொலைக்காட்சி பார்ப்பார்கள். பேரன் 13 வயது. பேத்தி 9 வயது.

இந்த தடவை நான் மெல்பர்ன் வந்தடைந்ததும் கொஞ்சம் குளிரினால் மூட்டு பிடித்துக் கொண்டிருந்ததால் தாங்கித்தாங்கி  நடந்தேன். என் பெண் நல்ல ஒரு டாக்டர்கிட்ட காட்டலாம் என்று சொன்னாள்.நான் வயகிறது இனிமே எலும்பெல்லாம் வளரப்போகிறதில்லை. மேற்கொண்டு தேயாமல் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்.அதைப் பார்த்த பேரன் போன தடவை என்னோட கிரிக்கெட் ஆடின உனக்கு அதற்குள் வயசெல்லாம் ஆகாது நீ இன்னும் யங்க் உமன்தான்.என் அம்மாவுக்கு உன் வயதில் ஃபிரண்ட் இருக்காங்க. அவங்க ஜாலியத்தான் பேசுவாங்க. நீ ஒண்ணும் கிழவி இல்லை என்று சொல்லிவிட்டான். எனக்கு ஆச்சரியமாயிருந்தது என்னவோ உண்மைதான்.
நேற்று க்ளென் போயிருந்த போது நான் மூட்டு வலியால் காரிலிருந்து இரங்கக் கொஞ்சம் கஷ்டப்பட்ட போது என் 9வயது பேத்தி பாட்டி நீயும் உன் பேரனும் இந்த ஊரில அம்மா பிள்ளைன்னு சொன்னாக்கூட ஒண்ணும் அதிசயமாக இருக்காது என்று சொன்னாள்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
என்ன இப்படி திரும்பத் திரும்ப பசங்க நம்மை வயசானவங்களாக ஏத்துக்க மாட்டேங்கிறாங்க?
யோசித்தபடி  இன்னைக்கு காலையில் எழுந்து பிள்ளைகளும் பெரியவங்களும் வெளியே போனபோது என்னுடைய நாளை நான் பிளான் பண்ணிக்கொண்டிருந்த போது ஒரு ஃபிரண்டிடமிருந்து போன். அந்த ஃபிரண்ட் பேச்சினிடையே இன்று 19 டிகிரி வெயிலடிக்கப் போரது என்று சொன்னாள்.
பேசி முடித்து விட்டு  சரி வெய்யிலில் நல்ல லாங்க் வாக்கிங்க் போகலாம்னு கிளம்பினேன்.
அங்கெங்கெ காரவான் வைத்துக்கொண்டு கிளம்பும் என்னொத்த பெண்களைப் பார்த்ததும் (பின் மண்டையில் பேரப்பசங்களோட காமெண்ட்ஸ்)வேகமாக மூட்டி வலி முழங்கால் வலி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு நடக்கத் தொடங்கினேன்.சின்னப்பிள்ளைகளானாலும் ஊக்கம் அவர்கள் வார்த்தையால் கிடைத்ததை மறுக்க முடியாது

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 5 மறுமொழிகள் »

பெண் என்றால்…………

பதிந்தவர் kalyanakamala மேல் ஜூலை 29, 2009

                                   puthiya paravai

இன்னைக்குக் காலையில் ஒன்பது மணியிருக்கும்.

TVஐப்போட்ட‌ போது பொதிகை சானலில் பழய பாடல்களிலிருந்து பாடல்கலள் ஒலிபரப்பாகிகொண்டிருந்தது.முன்னாள் முதல்வர்கள் இருவரும் (ஜெயலலிதாவும் எம்ஜீஆரும்தான்)சுசீலா சௌந்தரராஜன் பாட்டுக்கு ந‌டித்துக் கொண்டிருந்தர்கள் .

நான் எப்பவுமே ஜெயலலிதாவின் அழகை ரசிப்பவள்.ரொம்ப மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது சட்டென சமயலறையில் அவசர நிலை ஏற்பட்டு போகும் நிலை ஏற்பட்டது. திரும்பி வந்தால் கன முடையாக என் கணவர்(கண்ணா அவர்?)தொலைக்கட்சியை மூடியிருந்தார். சரி ஏதோ நம்ம ரசிப்பதை கவனிக்காமல் வீணாக தொலைக்காட்சி ஓடுவதாக நினைத்து மூடிவிட்டார் என நினைத்து விடாப்பிடியாக இன்று          எப்படியும் ஒருகை பார்த்துடணும் என்ற வேகத்தில் 9.30க்கு ஜயா சானலில் போட்டு விட்டு, மின்விசிறி போட்டுக் கொண்டு தொலைக்கட்சி முன் நாற்காலியில் செட்டிலாகிவிட்டேன்.    திரும்பவும் இனிமையான பழய.பாடல்கள் அதே ரசிப்பு.முணுமுணுப்புகள் திசை திருப்புதலுக்கான முயற்சிகள், கொஞ்சம் மெதுவாகத்தான் அந்த TV ஐ வைத்துக்கேளேன் என்பது போன்ற அதிருப்தியைத் தெரிவிக்கும் பல செயல்களையும் புறக்கணித்து விட்டு சரோஜாதேவியின் அபினயத்தை ரசித்ததுக்கொண்டிருந்தேன்.

வாயில் மணி அடித்தது. குப்பைக்காரன் வந்தால் ஓடிப்போய் கதவைத்திறக்கும் கணவர் இப்போ கல்லு மாதிரி உட்கார்ந்திருந்தார்.தொலைக்கட்சி நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்து விட்ட படியால் நான் போய் படு பவ்யமாக கதவைத் திறந்தேன். எங்கள் குடிருப்பு சங்கதிலிருந்து வந்த ஒரு சுற்றரிக்கையுடன் வாட்சுமேன் நின்றிருந்தார்.கையெழுத்தைப்போட்டு அவர் கொடுத்த சுற்றரிக்கையை திருப்பிக்கொடுத்து விட்டு அவர் கொடுத்த ஒரு பேப்பருடன் வந்து திரும்ப சோஃபாவில் சங்கமானேன்.

காலனியில் ந‌டக்கவிருக்கும் பலவித நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டு பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்கள்.jayalalitha
                 நான் தொலைக்கட்சியை மூடிவிட்டு நிகழ்ச்சிகளைப்பற்றி ய நினைவில் சில பல பாரதியார் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தேன்.
கொஞசம் நேரம் பொறுமையாக இருந்த என்கணவர் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தார்.
என்ன நீ போய் கூச்சமில்லாமல் பாடி பரிசு வாங்கப்போகிறாயா? என்றார்.
வந்த‌‌ கோப‌த்துக்கு அள‌வே இல்லை// நான் எதுக்கு கூச்ச‌ப்ப‌ட‌ணும்? பார‌தியார் பாட‌லைப்போய் பாட‌ற‌த்துக்கு நான் எதுக்கு கூச்ச‌ப்ப‌ட‌ணும்? கூச்ச‌ப்ப‌டும்ப‌டியாக‌ நிறைய‌ செய‌ல்க‌ளைச்செய்கிற‌வ‌ர்க‌ள் கூச்ச‌மில்லாம‌ல் செய்கிறார்க‌ள். பெருமைப்ப‌டும்ப‌டி நான் செய்கிற‌ செய‌லுக்கு நீங்க‌ள் கூச்ச‌ப்ப்ட‌ச்சொல்கிறீர்க‌ளா?//என‌ நான் சொன்ன‌வுட‌‌ன் இல்லை ராக‌மெல்ல‌ம் அவ்வ‌ள‌வு ச‌ரியாக‌ இல்லை அதான் சொன்னேன் என்றார். ஆனால் சொன்ன‌து என்ன‌வொ நான் போய் பாடுவ‌து அவ‌ருக்கு ச‌ரியாக‌த்தோன்ற‌வில்ல.
             இப்படி விளையாட்டாக சொல்பவைகூட பெண்களை துன்புறுத்தும் ஒரு சொல்லகவே இருக்கிறது. அது எங்களை எவ்வளவு துன்புறுத்தும் என்பது பற்றிக்கொஞ்சம்கூட கவலையும் இல்லை.
 பெண் என்றால் ஆண்களின் சந்தோஷத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவளாகவும் தனக்காக எதுவும் இல்லாமல்  வாழ்பவளும் ம‌ட்டும்தான் என்ப‌து ம‌ன‌தில் படிந்திருக்கிறது.

                     இப்படி சுயத்தை இழக்கக்கூடது என பல மனனல நிபுணர்களும் பெண்ணுரிமை யாளர்களும் சொன்னாலும் பெண் தானாகக்கொஞ்சம் போரடத்தான் வேண்டியிருக்கிறது.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 3 மறுமொழிகள் »

சீனாச்சீமை

பதிந்தவர் kalyanakamala மேல் ஜூலை 13, 2009

PearlsCity
grand hyatt
grand hyatt

சீனா என்றால் ஜனத்தொகை,பாம்புக்கறி மட்டுமே நினைவுக்கு வரும் நமக்கு நிஜ சீனவில் பல உயர்வான விஷயங்கள் இருப்பதைக் காட்டவே இந்தப்பதிவு!
சீனா என்றால் அதன்  வளர்ச்சி இன்று அதிகமாகப்  பேசப்படுகிறது.சீனா என்றால் அதன்  வளர்ச்சி இன்று அதிகமாகப்  பேசப்படுகிறது.சீனாவில் உள்ள ஷங்காய் நகரம் முழுவதும் வழ வழன்னு சாலைகள் ,வானை முட்டும் பலமாடிக்கட்டடங்கள்,ரவிவர்மா சித்திரத்தில் அல்லாமல் நிஜமாக நம்மவர்கள் பார்த்திராத மஞ்சள் நிற மெல்லிய  மினுமினுக்கும் (என்னதான் சாப்பிடுவார்களோ?பச்சை டீ குடிக்கிறார்களே அதனாலேயா இந்த அழகு மென்மை?)பெண்கள்.

 கலராக விற்பனை செய்யப்படும் முத்துக்கள். பல டிசைன்களில் பல கலர்களில் பல விலைகளில் சரம் சரமாக தொங்க விட்டு விற்பனை செய்யும் கடைகளைக்கொண்ட pearl tower. pearl in strings

முத்து விற்பனை செய்யும் பெண்களின் முகத்தில் எப்பவும் இருக்கும் புன்னகை கடவுள் இவர்களுக்குத்தந்த வரமோ!புன்னகையுடன் உழைப்பது ஒரு சிறந்த கலைதான்!
435272587-edt-ph-4-20090706-231211

grand hyatt  ஹோட்ட‌ல் உல‌க‌த்திலேயே உய‌ர‌மான‌ க‌ட்டிட‌த்தில் உள்ள‌து.காரில் சாலைக‌ளில் வ‌ழுக்கி பிர‌யாண‌ம் செய்து grand hyatt ஹோட்ட‌லை அடைந்தால்அத‌ன் பிர‌ம்ம‌ன்ட‌ம் ந‌ம்மை விய‌க்க‌ வைக்கிற‌து. என்ன‌ சுத்த‌ம்?உல‌கின் பழைய‌ நாக‌ரீக‌ம்வ‌ள‌ர்ச்சி அடைந்து வின‌யாமாக‌வும் விருந்தின‌ர் உப‌ச‌ரிப்பாக‌வும் முழுமை பெற்றுள்ள‌தோ?புன் முறுவ‌லும் ,வ‌ர‌வெற்பும் க‌ல‌க்குன்ற‌ன‌
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சிங்கப்பூரிலும்,துபாயிலும் மூக்கைப்பிடித்துக்கொண்டு ஒடிய‌ நாம் இங்கு கண்ணைக்கட்டிக்கொண்டு ஓட வேண்டியிருந்தது.உரித்த பாம்பும் உரித்த தவளையும் கனவில் கூட பயமுறுத்தும் போலத்தோன்றியது.ஈசல் வறுவல் வேறு!  ந‌ல்ல வேளை grand hyatt ஹோட்ட‌லில்  கிடைத்த சான்ட்விச்சும் காப்பியும் ஐஸ் கிறீமும் நம்மைப்பிழைக்க வைத்தன.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | Leave a Comment »

கடவுள் மாதிரி…….

பதிந்தவர் kalyanakamala மேல் ஜனவரி 21, 2009

நான் பல கால்கட்டங்களில் // கடவுள் மாதிரி//என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்தும் மற்றவர் பிரயோகிக்கும்போது கேட்டும் பார்த்திருக்கிறேன்.
அதன் உண்மையான அர்தத்தை உணர கடவுள் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார்.
பாத்ரூம் அழுக்கானதால் சுத்தம் செய்யணும்னு தோணித்து.சுத்தம் செய்யற திரவம் இல்லாததால் கொஞ்சம் தடுமாறின போது வீட்டு வாசலிலேயே ஒரு சேல்ஸ்மேன் (கடவுள் மாதிரி வந்து)நல்ல கிளீனிங் திரவம் என்று கூறி ஒரு திரவத்தை விற்க நானும் என் கணவரின் விருப்பமில்லாமல் வாங்கினேன் அந்த சேல்ஸ் மேனின் நடைமுறை விளக்கத்தைக் கேட்டு. அவர் சட்டென்று என் வீட்டு வாயிற்படியிலிருந்த விளக்கு வைக்கும் இடத்திலிருந்த எண்ணைய்க் கரையை மிக எளிமையாக அந்த திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து காட்டினார்.

நானும் அதே முறையில் என் பாத்ரூமை அந்த திரவத்தை வைத்து சுத்தம் செய்தேன். பாத்ரூம் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது.
என் கணவரும் வாஷ் பேசின் போன்றவற்றை சுத்தம் செய்து விட்டு //எப்படி உன்னால் அப்படி இதை வைத்து கிளீன் பண்ண முடிந்தது?//என்றுகேட்டார்.

நான் சொன்னேன் //அந்த திரவம் கடவுள் மாதிரி !அதன் துணையுடன் என் மனமும் கையும் உழைத்தன போல //என்று.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 5 மறுமொழிகள் »

நானும் ஒரு பட்டாம்பூச்சி!

பதிந்தவர் kalyanakamala மேல் ஜனவரி 11, 2009

bfபட்டாம்பூச்சி விருது கொடுத்த ஸ்ரீராம் என்னை திக்கு முக்காட வைத்து விட்டார். முதலில் நான் சொல்லிப் பெருமை பட்டுக்கொண்டது என் கணவரிடம். இரவு 10 மணிக்கு மேல். தூக்கக்கலக்கத்தில் வந்து படித்து விட்டு சந்தோஷம் என்று மிகவும் ஃபார்மலாகச்சொல்லி விட்டுப் (பின்ன எப்படிச்சொல்வார் என்கிறீர்களா?)போய் TV பார்க்க ஆரம்பித்து விட்டார். மறுநாள் என் மகனிடம் சொன்னேன் . பார்த்து விட்டு சரியென்றான். எப்பவுமே அவனுக்கு ஏதோ ஒரு பயம் அம்மாவை கொஞ்சம் தூக்கிப்பேசி விட்டால் கைமீறிப்போய் விடுமென்று ஏனென்று தெரியவில்லை. ஆனால் பெரிய ஆபத்தான சமயங்களில் உபயொகப்படுத்திக் கொள்வான். இது ஒரு மகன்களாதிக்கம் கேஸ்
அடுத்தது மறுநாள் காலை கணினி முன் உட்கார்ந்து பெண்ணைப்பிடித்தேன். பட்டாம்பூச்சி பரிசைச் சொன்னேன். அந்தப் பக்கத்தில் ஒரே சந்தோஷக்குரல்கள்.
பேரன் பேத்தி எல்ல்லோரும்  இஙிலீஷ் மொழிபெயர்ப்புடன்(மகள் மொழி பெயர்த்துச் சொல்ல)ஒரே சந்தோஷ சாம்ராஜ்யம்.
பரவாயில்லையே அம்மா உன் பிளாக் நல்லாதான் போயிருக்கு போல! என்றாள் மகள். பேரன் பேத்திகள் வாழ்த்தினார்கள்.

சேவியர்,ஜெயஸ்ரீ மற்றும் விஜய்கோபல்ஸ்வாமிக்கு நான் இந்தப்பட்டாம்பூச்சி விருதைக் கொடுக்க விரும்புகிறேன்!
1.அலசல் ‍‍http://xavi.wordpress.com  ‍: இந்த பிளாக்கில்  சேவியர் மிக நல்ல பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறார். கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பின்னூட்டங்களும் பதிவுகளும்.

2.தாளிக்கும் ஓசைhttp:http://mykitchenpitch.wordpress.com/: நல்ல எழுத்து நடை . நல்ல சாப்பாடு. ரசனையுள்ள பெண் எழுதும் பதிவுகள்.

3.விஜயகோபலசாமி பக்கங்கள் http://vijaygopalswami.wordpress.com:  கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பதிவுகள். நல்ல சிந்தனையாளர் ஆனால் விளையாட்டாக தகவல்களைத்தரும் விதம் நம்மைக் கவரும். இளைய தலை முறையினருக்கு ஒரு நல்ல முன் மாதிரி.

இவர்கள் வலைத்தளத்தில் ஏற்கெனவே நிறைய பரிசுகள் வாங்கி இருக்க நிறைய சான்ஸ் இருக்கு!
புகழ் மிக்க எழுத்தாளர்கள். இவர்கள் எழுத்துக்குக்கிடைக்கும் பின்னூட்டத்தை வைத்துத்தான் சொல்கிறேன்.

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி  லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவர்களும் இந்தப் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில்  மூன்று விதிகளைக் கடைபிடிக்கணும்.

1. இவர்கள் மூன்று பேருக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கணும்.

2. விருது கொடுக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

3.விருது கொடுக்கக்கப் பட்டவர்கள் வலைத்தளத்துடன் link  செய்து கொள்ளவும்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 5 மறுமொழிகள் »

உன்னைச்சொல்லிக் குற்றமில்லை….

பதிந்தவர் kalyanakamala மேல் ஜனவரி 9, 2009

சோஃப்பாவில் உட்காருமுன் அனிச்சையாக சுவிட்சைத்தட்டினேன். ஃபான் சுற்ற வில்லை. ரெகுலேட்டரை திருகிப்பார்த்தேன் உஹும் ஃபான் நகரவில்லை. சலிப்புடன் இடம் மாறி மற்றொரு சோஃபாவில் உட்கார்ந்து காப்பி குடித்து விட்டு செருப்பை அணிந்து கொண்டு தெரு முனையிலுள்ள எலெக்ட்ரிகல் ஷாப்பூக்குப் போனேன். ஷாப் உரிமையாளர் புத்தகதிலிருந்து முகத்தைத் திருப்பி என்ன என்பது போலப் பார்த்தார்.
வீட்டுல ஒரு ஃபான் ஓடவில்லை ஒரு எலெக்ட்ரீசியனைக்கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்களேன் என்றேன்.சரி அனுப்பறேன்னார்.
சரியாக மாலை 4 மணிக்கு இரண்டு பையன்கள் 17 அல்லது 18 வயதுக்குள்தான் இருக்கும் வந்தார்கள். எலெக்ட்ரிகல் ஷாப்பில் அனுப்பினார் ஃப்பான் ரிப்பேராமே என்று கேட்டார்கள். ஃபானை கை காட்டினேன்.
ஒரு ஸ்டூலைப்போட்டு ஃப்பான் நடுவிலிருந்த குண்டுப் பகுதியைக் ஒருவர் கழட்ட  இன்னொருவர் ஸ்டூலைப் பிடித்தவாறு நின்றிருக்க  ஃப்பான் ரிப்பேர் நடந்தது. ரெகுலேட்டரை சரிபார்த்தார். ஃப்பான் ஒட ஆரம்பித்ததும் என் கணவர் இன்னொருவரிடம் பாத்ரூம் லைட் சுவிட்சை சரிபண்ணச் சொல்ல அவர் பாத்ரூம் பக்கம் போனார். இத்ற்குள் என் வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருவர் கிச்சனிலிருந்த என்னிடம் வந்து பையன்கள் வீடு முழுக்க நடமாடுகிறார்கள். செல் ஃபோன்கள் மற்றும் வாட்சுகளாஈப்பத்திரமாக எடுத்து வை. காணாமல் போனால் அப்புறம் கஷ்டமாயிடும் என்றார்.
பையன்கள் வேலை முடித்து ஃப்பான் கண்டென்சருக்கு 75 ரூபாய் சஸ்விட்சுக்கு 15 ருபாய் 30 ரூபாய் லேபர் என்று கணக்கு சொல்லி பணம் வாங்கிக்கொண்டு போனர்கள்.
அவர்கள் போன பின் வாட்சு செல்போன்கள் எல்லாம் பத்திரமாக இருந்தன. அவைகளோடு அவர்கள் விட்டுப்போன ஒரு ஸ்குரூடிரைவரும் கிடைத்தது. மாலை மணி நாலே முக்கால்.ஸ்குருடிடரைவரை எடுத்து மேலும் கீழும் திருப்பிப் பார்த்து விட்டு உறவினர் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார்.
மறுநாள் வாசல்மணி  சத்தம்.எலெக்ட்ரீசியன் பையன் //சார் ஸ்குரு டிரைவர் விட்டுட்டுப்போயிட்டேன்.
இங்கதானே சார் விட்டேன்? சாயந்திரமெல்லாம் டென்ஷனாயிட்டேன் சார்//
இங்கதான் இருக்கு. எடுத்துக்கொடுத்தேன்.
// தாங்ஸ் சார்//
போய் விட்டான்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »

சாக்கடை நாற்றம்

பதிந்தவர் kalyanakamala மேல் டிசம்பர் 5, 2008

மாலை நாலு மணி சுமாருக்கு எங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல தரமான பள்ளியின் பக்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். பெண்களும், பையன்களும் கூட்டம் கூட்டமாக பேசியபடியும் ,விளையாட்டாக ஓடித் துரத்தியபடியும், ஒருவர் தோள் மேல் மற்றொருவர் கை போட்டுக்கொண்டு நடந்தபடி பேசிக்கொண்டும் மாணவர்களுக்கான தனியான வாழ்க்கைப் பருவத்தை மற்றவர்களை (தங்களுடைய‌தை)அசை போடச்செய்யும் வகையில் சென்று கொண்டிருந்தனர்.

ஒரு திருப்பத்தில் திரும்ப யத்தனித்த போது மிகக்கொடுமையான சாக்கடை வாடை அடித்தது. மாணவர்களும் மற்றவர்களும் அந்த சாக்கடை வாடையால் அருவருப்படைந்து மற்றவர்களையும் எச்சரித்து

//அங்க போகாதீங்க!சாக்கடைத் தண்ணீர் !ஜாக்கிர‌தை!//

என்று குரல் எழுப்பி எச்சரித்தனர்.எல்லொரும் அந்த திருப்பத்தை தவிர்த்து அடுத்த திருப்பத்தை நோக்கி நடக்க யத்தனித போது ஒரு சிறுவன் அங்கு வேலை செய்யும் மாந‌கராட்சி துப்புரவுத் தொழிலாளர் அந்த சாகடையைச் சீர் செய்யும் பணியில் ஈடு பட்டிருப்பதைப் பார்த்து

//பாவம்டா அந்த தொழிலாளி நாம் எல்லாம் அந்தப்பக்கம் போவதையே தவிர்க்கிறோம். வாடை தாங்கலை ஆனால் அந்ததொழிலாளி அதற்குள் இறங்கி எப்படி வேலை செய்யறார்//

என்று பரிதாபப்பட்டான்.

அந்த சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். அப்படி முன் பின் தெரியாத மற்றவருக்காக இரக்கப்படும் மனது கொஞ்சம் வயதானால் எப்படி மறைகிறது. ஆணாதிக்கம் என்ற எப்படி நுழைகிறது. எப்படி ?எப்படி?
எப்படி என்று எழும் என் கேள்விக்கு எனக்கு பல ப‌தில்கள் கிடைத்தாலும் மனம் கொஞ்சம் தடுமாறியது என்னவோ உண்மைதான்.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 9 மறுமொழிகள் »

கல்யாணம் கச்சேரி….

பதிந்தவர் kalyanakamala மேல் செப்டம்பர் 5, 2008

போன வாரம் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன்.மறுநாள் திருமணம்.முதல் நாள் மாலை வரவேற்பு. வரவேற்பு நடந்தது. பின் நிச்சயதார்த்தம் என்ற சடங்கும் நடந்தது.மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மிகவும் நன்றாகப் (PHD)படித்தவர்கள். அவர்களுடன் கூடப் படித்தவர்கள், மற்றும் மணமகளின் தங்கையுடன் வேலை செய்பவர்கள் (தங்கையும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவர்)எல்லொரும் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் (மிக நாகரீகமாக அல்லது ஃபாஷனாக என்றும் கூறலாம் உடை உடுத்தி யிருந்தவர்கள் நடனமாடத் தொடங்கினார்கள். பின்னணியில் ஒரு சினிமாக் கூத்துப்பாட்டு.

நானும் என் பக்கத்து வீட்டு பெண்மணியும் நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டு நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கிழவர்கள் முதல் இளையவர்கள் வரை யாரும் அதை விரும்பாததாகத் தோன்ற வில்லை.
நடனம் உச்ச கதியில் போய்க்கொண்டிருந்தது. சிறு வயதுப் பெண்களாதலால் உடை எல்லாம் உயர்செருப்பு, பான்டு, மிக ஃபாஷனான சல்வார் என்ற ரீதியில் இருந்தன.
பாடல்களும் //அப்படிபோடு// டைப்தான்.

கூட்டம் கொஞ்சம் ஈடுபாடுகாட்டியவுடன் நடனம் சுறுசுறுப்பாகியது.

திடீறென்று பின்னாலிருந்து ஒரு பெரியவரின் குரல் எல்லொரும் பயப்படும்படி கேட்டது.
// ந‌ல்லா ஆடுங்கடி! தெருவுல போய் நின்று ஆடுங்க. வெக்கம் மானம் ஒன்றும் இல்லாத கழுதைகளா!இதனால்தான் மழை இல்லை, பஞ்சம் வருது. பெண் பெண்ணாக இல்லாமல் இப்படி ஆடுறிங்களே சுனாமி வரது இதனாலதான்.//என்பது போல வசை மாறிப் பொழிந்தார்.
கூட்டத்திலிருந்தவர்கள் பலர் திருதிரு என்று விழித்தார்கள். சிலர் விக்கித்துப் போயிருந்தார்கள்.சிலர் அப்பவே நினைத்தேன் இதெல்லாம் என்ன கூத்தென்று என்று சொன்னார்கள்.

நான் பக்கத்திலிருந்த என் நண்பியிடம் //இந்தப் பெரியவர் கொஞ்சம் அந்தப் பெண்ணின் தாய் தந்தையரிடம் சொல்லி நடனத்தை நிருத்தச் சொல்லியிருக்கலாமே //என்றேன் .

 ஆனால் அவரோ //நல்ல வேளை நாம் இன்னும் முன்னால் போய் உட்கார்ந்து தாளம் போட்டு ரசிக்காமல் விட்டோமே. அந்தப் பெரியவர் நம்மையும் செர்த்து திட்டியிருப்பார் //என்றார். அவர் சொன்னது எனக்குச் சிரிப்பு வந்தாலும் உண்மை என்று தோன்றியது.

இருவரும் வாயைத் திற‌க்காமல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (வீட்டில் சாப்பாடு கிடையாது)வீட்டை நோக்கி நடந்தோம்.
அந்தப்பெண்கள் அந்தக் கூட்டத்தில் தலை குனிந்து நின்ற காட்சி மறக்க முடியாததாக இருந்தது.

.... இங்கே பதியப்பட்டது Uncategorized | 16 மறுமொழிகள் »