அகில உலகப்பெண்கள் தினம்
பதிந்தவர் kalyanakamala மேல் மார்ச் 8, 2008
அகில உலகப்பெண்கள் தினமான இன்று சாதாரணமாக குடும்பத்திலிருக்கும் பெண்களாகட்டும் மற்றும் பணி செய்யும் பெண்களாக இருக்கட்டும் என்ன செய்யலாம்?
நம்ம கலாசாரத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்.
அதில் பெண்களின் பொறுப்புக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம் அல்ல்லது மற்றொரு பெண் கிடைத்தால் விவாதிக்கலாம்.
.
நமது பெண்ணை அல்லது நமது சகோதரிகளை மற்ற பெண்களை மதிக்கச் சொல்லித் தரலாம். அவர்கள் வீட்டு ஆண்களையும் அவர்கள் மூலமே (சச்சரவின்றி) பெண்ணை மதிக்கிறவர்களாக நடக்கச் செய்யலாம்.
மற்றும் நமது அண்டைஅயல் வீட்டிலிருக்கும் பெண்களை நாம் மதிக்கிறோமா என்றும் ,அவர்கள் சுதந்திரத்தை நாம் தடை செய்யாமல் அனுமதிக்கிறோமா என்று சிந்திக்கலாம்.
பெண்கள் முன்னெற்றத்தை தடை செய்யாத வகையில் ஆண்களை (முக்கியமாக நமது மகன்களை மற்றும் அண்ணன் தம்பிகளை)வாழ சொல்லிக்கொடுக்கலாம்.
மற்ற நமக்குத்தெரிந்த நம்மை மதிக்கிற பெண்களையும் அவர்களின் வீட்டு ஆண்களை பெண்ணை மதிக்கிறவர்களாக வாழக்கற்று கொடுக்கச் சொல்லலாம்.
நாம் பார்க்கிற ஆண்களிடம் சின்ன சின்ன செயல்கள் மூலம் நாமும் மதிப்பிற்குரியவர்கள்தான் என்று எண்ணும்படி நடந்து கொள்ளலாம்.
. சந்திக்கிற சாமன்ய பெண்களிடம் சில பல பெண் உரிமைகளை அவளுடைய குடும்பம் பாதிக்காத வகையில் நடை முறைப்படுத்த சொல்லித் தரலாம்.தனக்கென்று ஒரு சுற்று வட்டத்தையும் நண்பர்களையும் ஏற்படுத்திக்கொள்ளவும் சிறிய வேலை வாய்ப்புக்களையும் பற்றி விவாதிக்கலாம்.
இது அவர்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காமல் இருப்பது மிக முக்கியம்.
குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்களும் கண்ணும் கருத்துமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.அதை எடுத்துச்சொல்லி அவர்களுக்குப்புரிய வைக்க வெண்டும்.
இந்தச் செயல்களை செய்யும்போது சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஒரு போதும் கை விடக்கூடாது என்ற முடிவோடு ஈடுபடவேண்டும்.
ஜயராமன் சொன்னார்
அம்மணி,
/// நம்ம கலாசாரத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம். ///
அது எப்படீங்க, கலாசாரத்தை திரும்பிப்பார்க்குறது? அதாவது, நம்ப கலாசாரத்தை நம்ப பின்னாடி விட்டுட்டோம்னு சொல்றீங்க. அதானே.
/// மற்ற பெண்களை மதிக்கச் சொல்லித் தரலாம். ///
/// பெண்ணை மதிக்கிறவர்களாக நடக்கச் செய்யலாம் ///
/// பெண்கள் முன்னெற்றத்தை தடை செய்யாத வகையில் …. வாழ சொல்லிக்கொடுக்கலாம். ///
/// பெண்ணை மதிக்கிறவர்களாக வாழக்கற்று கொடுக்கச் சொல்லலாம். ///
//// …. நாமும் மதிப்பிற்குரியவர்கள்தான் என்று எண்ணும்படி நடந்து கொள்ளலாம். ///
என்னங்க நீங்க, ஏதோ காப்டன் விஜயகாந்த் மாதிரி அடுக்கிக் கிட்டே போறீங்க.
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால், வெறுமே மொக்கையாக இல்லாமல் இதெல்லாம் என்ன மாதிரி நடவடிக்கைகள் என்று கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். இல்லைன்னா, நம்ப பிரதிபா பாட்டீல் பேச்சு மாதிரி கேட்டுக்கிட்டு போகவேண்டியதுதான்….
நன்றி
ஜயராமன்
kalyanakamala சொன்னார்
திரு ஜயராமன் அவர்களுக்கு
முதலில் என் பதிவைப் பொறுமையுடன் படித்து பதிலும் எழுதியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.இன்டெர்னெட் வரை வந்தவர்களுக்கு நான் எழுதியது புரியாமல் போக வாய்ப்பில்லை.பெண் சுதந்திரம் என்பது ஒரு நுண்ணிய விவகாரம்.பல சமயங்களில் குடும்பத்தின் ஒரு அங்கம் அது.சமுதாயத்தின் அமைப்பு அப்படி.முதலில் பெண் பெண்ணை மதித்தால்தான் பெண் சுதந்திரம் கிடைக்கும். பெண் நினைத்தால்தான் ஆணை, பெண்ணை மதிக்கிறவனாக மாற்ற முடியும். இது ஒரு சமாதானமான(அகிம்சா முறை என்று வேண்டுமானால் வைத்துகொள்ளலாம்) முறை.
அடிப்படை நிலையிலேயே புரிதல் இருந்து விட்டால் மேல் நிலைக்குச் சட்டென்று வந்து விடலாம் என்பது என் கருத்து. நமது பெண்கள், சகோதரிகள், நம்மை மதிக்கிற பெண்கள் மூலம் இதை நடைமுறைப்படுத்த முயல்வது எளிய முறை என எனக்குத்தோன்றியது. ப்ரதிபா பாடில் பேச்சொடு என் பதிவை ஒப்பிட்டதற்கு நன்றிகள்.
அன்புடன்
கமலா
arasezhilan, trichy சொன்னார்
தோழமை வணக்கம் !
கமலா அவர்களுக்குத் தோழமையுடன் அரசெழிலன் வனக்கம்
மனநலமருத்துவர் உருத்திரன் அவர்களின் வலைப்பதிவு வழியாக உங்களின் வலைப்பதிவு இணைப்பினைப்பெற்று பார்த்தேன்.நல்ல முயற்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.
உங்களின் மின்னஞ்சல் முகவரியும் அஞ்சல் முகவரியும் தெரிவியுங்கள் . நான் நடத்திவரும் நாளைவிடியும் இதழினை உங்களுக்கு அனுப்ப வேண்டும்.
பெண்ணியம் தொடர்பான சில வலை முகவரிகளுக்கான இணப்பினைக்கொடுத்துளேன்.
இவை தவிர்த்து வேறு ஏதேனும் தங்களுக்குத் தெரிந்தால் அருள்கூர்ந்து அறியத்தருக!
தோழமையுடன்,
பி.இரெ. அரசெழிலன்
mobile 94433 80139
97885 43772
soundr சொன்னார்
nice thought.
and to mention, the article is balanced.
it doesnt expect for any drastic change, but visions for infusing changes slowly with considerable care and caution.
kamala சொன்னார்
thankyou for ur positive approach towards my article
mr soundr !
kamala