Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 20, 2013

ஒரு மனிதனைச் சந்தித்தேன்! ஒரு இந்தியன் பேசுவதைக்கேட்டேன்!ஒரு இஸ்லாமிய சகோதரன் ராமாயணத்தை ரசிப்பதை ரசித்தேன்..

என்ன ஒரு ஆழமான அறிவு ,தேர்ந்த கல்வி,இலக்கிய ஞானம்? இலக்கியத்தை இலக்கியமாகப் பார்த்து வாழக்கற்றுக் கொள்கிற பக்குவம் இதே போல‌ எததனை பேருக்கு இருக்கும்?இலக்கிய வாதிகள் அனைவருமே இப்படித்தானா? அப்படி ஏற்க மனம் மறுத்தது.
மதுரை ஆன்டாள்புரம் அக்ரிணி வளாகத்தில் நடந்த மதுரை கம்பன் கழகத்தில் பேசிய திரு. அப்துல் சமது அவர்கள் பேச்சைக் கேட்ட எவரும் அவருடைய பேச்சின் வீச்சை மறக்க முடியாது. இந்து-இஸ்லாமிய வேறுபாட்டையே களைந்து விடும் வீச்சு ! நிஜமான ஒரு சமத்துவ வழியைப் புரிய வைத்தார்.காலத்துக்கும் தேவையான பேச்சு பணிவோடு கலந்து இயல்பாக வெளி வந்தது சிறப்பு.

கம்பனும் உமறு புலவரும் என்ற தலைப்பில் பேசிய அவர் கண்ட ராமனை எத்தனை இந்துக்கள் கன்டிருப்பார்கள் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியே!கம்பன் எந்த காரணத்துக்காக ராமனைப் பாடினானோ அந்த காரியம் நிறைவேறி விட்டதாகத் தோன்றியது எனக்கு.

பிற மததை மதிக்க வேண்டும் என்று பேசுகிற அளவுக்கு அவரவர்களே நடப்பதில்லை. ஆனால் அப்துல் சமது அவர்கள் ராமாயணத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் புளகாங்கிதம் அடைந்திருப்பது நமக்கு அவரது பேச்சிலிருந்து தெளிவாகப் புரிந்தது.

நீதிபதி திரு மு. மு. இஸ்மாயில் போன்ற பல இஸ்லாமியப் பெரியோர்கள் இந்து இலக்கியங்களைப் பற்றி எழுதி இருக்கிறர்கள் . ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் சமீபத்தில் காணவில்லை.

கம்ப‌ ராமாயணத்தின் வழி வந்ததுதான் சீறாப்புரணம் என்பது தெரிந்த உண்மையானாலும் அவர் சொல்லிய விதம் மனத்தை நெகிழவைத்தது.ராமனையும் முகம்மது நபிகளையும் ஒன்றாகப் பார்க்கிற பக்குவம் அவரிடம் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

அரை மணி நேரப்பேச்சுக்கு எழுதிவைத்துப்பேசுவோர் நடுவில் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேல் மடை திற‌ந்த வெள்ளம் போலப்பேசியது மனதில் இருப்பதைச் சொல்வதால்தான் சாத்தியமானது.

நான் என்பதில்லாமை கடவுளை அடையும் வழி என்பது திரு அப்துல் சமதுவின் பேச்சின் சிகரம் என்றால் மிகையாகாது.
வந்திருந்த அனைவரையும் கூறும் இடம் மறந்து அதன் பொருளில் மயங்க வைத்த அப்துல் சமதுவைப்போல் பத்து பேர் நமது இந்தியாவில் இருந்தால் பல இரத்த ஆறுகள் வற்றிப்பொகும் என்பது பொய்யில்லை!

Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »

பயணம்……………….

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 17, 2012

பின்னிரவுப்பொழுது குடந்தை ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. மெதுவே எழுந்து கையில்தயாராக இருந்த சின்னப் பையுடன் இறங்கி மெதுவே தயக்கத்துடன் நடக்கையில் மனம் மிகவும் துவண்டிருந்தது. சொந்த ஊர் சொந்தமண் தான் ஆனாலும் எந்த தொடர்பும் இல்லாமல் போயே விட்டதே! வே ற்று மனிதர்கள் நிறைந்த இடத்தில் இருந்த சுதந்திரம் கூட இல்லமல் போய்விட்டது.

எத்தனை முறை அம்மாவும் அப்பாவும் இங்கு வழியனுப்பியிருப்பர்கள்? கண்களில் கண்ணீர் ததும்ப அம்மா பிடித்து பிரியா விடை கொடுப்பது நினைவுக்கு வருவபளாய் தலயை குலுக்கிக்கொண்டாள்.
அம்மா! இனி அம்மாவே இல்லை. இந்த முடிவு இன்னிக்குதான் என்னை பாதிக்குதா? இதுனாள் வரை அம்மாவுடன் என்ன உறவு உனக்கு இருந்தது?””யாரோ மனதுக்குள் பிறான்டினார்கள். \

அந்த நாள் ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிவு செய்து நடத்திக்காட்டியது யாரோட செயல்? நாந்தனா?
இல்லை கமாலும் நானும் வேறு யொசனையே இல்லாமல் (வேற யொசனை வந்து தடை படாமல் நடக்கணும்னு வேகத்துடன் யாரையும் பற்றி யோசிக்காமல் செய்தது நினைவுக்கு வர தலையைக்குலுக்கிக்கொண்டாள்.
நேற்று போனில் கமால் சொன்னபோது இந்தச்செய்தி மனதுக்கு பிடிபடவே சில நிமிடங்கள் ஆயிற்று. கமால்போனில் என்னிடமிருந்து பதில்வராததால் கிளம்பி போய் பார்திட்டு வந்திடு! வரணும்னுனதானே தகவல் சொல்லியிருக்காங்க‌ என்றான். அவன் சொன்னதுன் நியாயமாகப்பட்டது
.ஆனாலும் மனதில் ஒரே திகில் . எதையாவது மீதி வைக்கணும்னு எண்ணமே இல்லாமல் யாரைப்பற்றியும் சிந்திக்காமல் போயிட்டு இப்ப போகறது எதுக்காக? அவங்களும் ஏன் தகவல் சொல்றாங்கன்னு தெரியல்லே. பலதடவை நாம் செய்தது சரியான்னு மனசு விவாதம் பண்ண்ணிய பொதெல்லாம் அறிவு வாழ்க்கை என்னோடதுன்னு ப்ரதிவாதம் பண்ணி ஜெயித்தது என்னவோ உண்மை தானே? இப்ப நடப்பதன் நியாயம் புரியாமல்தான் கனவுல நடப்பது போல ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டது போல கால் நடந்தது.
ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஆடோ பிடித்து ஊ ர் பேர் சொல்லி பயணிக்கத்தொடங்கியது ஆட்டோக்காரர் தனிய இந்த மூணு மணி வேளையில் வரும் பெண்ண்மணியை வியப்புடன் பார்த்தது எல்லாமே கனவு போல் ந‌டக்க ஆட்டோ பயணிக்கத்தொடங்கியது.
இந்த மரங்களும் சாலையும் ஒருகாலத்துல சொர்க்கமாக இருந்திருக்கு. இப்ப இந்தக்காற்று கசந்தது. வயிற்றைக்கலக்கியது. அனாவசியமாக வாழ்கையைத் திரும்பிப் பார்க்கிறோமோ?மனக்குரங்கு கேட்டது?
இதோ அக்கிரஹாரத்துக்குள்ள நுழையும் ஆட்டோ சத்தம் மிகவும் பயமுறுத்துகிற‌து. இதயமமோ படபடத்து வெடித்து விடுமென தோணறது.
யார் யார் இருப்பார்கள்? அம்மா….. முடிந்து விட்ட அம்மா படுத்த நிலையில், அப்பா வெறுப்புப் பார்வையுடன்,அண்ணா மனைவியுடன் பிள்ளைகளுடன் அப்புறம் மனம் ஒரு நடுக்கத்துடன் பிரேக் போடுகிறது……
நான் போன போது விவரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்த கௌரி இப்போ அங்கு வந்திருப்பாளோ? மாதவன் அடுத்த தெருதானே அவனுக்கு அங்கே இருப்பானோ? திகிலடிக்கும் மனதுக்குள் ஒரு சின்ன நம்பிக்கை இவர்கள் அவ்வளவு ஏமாளிகள் இல்லை. கௌரியையும் மாதவனையும் அகற்றியிருப்பர்கள். அவனும் விலகி இருப்பான்.மாதவன் தொடர்பிலேயே இருக்க சந்தர்ப்பம் இல்லை.மனம் சூழ்னிலைக்கு உள்ளே வந்து கணக்குப்போட்டு நிம்மதி அடைந்தத.து.
\\\
ஆட்டோ வீட்டு வாசலில் நிற்கும் சத்தத்தில் உள்ளிருந்த அண்ணா வந்து வெற்றுப் பார்வையுடன் பார்க்க உள்ளே போகும்போது…………………தன் .காலடிச்சத்தமே இடி முழக்கம் மதிரி ஒலித்தது காதில். நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அப்பா ஒரு வெற்றுப் பார்வை வீசினார். அந்த பார்வையில் அவளுடைய‌அப்பா இல்லவே இல்லை.
அண்ணனினின்குழந்தைகள் போலும் இரன்டு சிறு பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.ஒரு பையனும், ஒரு பெண்ணும்.அண்ணி இது வேறு என்ன வினோதம் என்பது போல ஒரு பார்வையுடன். சுற்றிலும் இரத்த பந்தங்கள் ஆனாலும் யாரும் அடுத்தவீட்டுக்காரன் போலகூட பார்க்கவில்லை. விளக்க முடியாத ஒரு பார்வை. எதிர்பார்த்ததுதான் என்றாலும் நேர்கொள்வது கஷ்டமாயிருந்ததது.
காலும் கையும் கட்டி பட்டுப்புடவையுடன் அம்மா படுத்த நிலையில்.   உயிர் இருந்தால்    அம்மா  என்ன செய்திருப்பாள் ?

கோபத்தில் வெடித்திருப்பளா இல்லை ஆதுரத்தில் அணைத்திருப்பளா தெரியவில்லை. யோசிக்க விடாமல் அவள் மரணம் உதவியது.அம்மாவைத் தொட்டு அழலாமா? ஒரு நிமிடம்தான் அந்த யோசனை அறவே அகன்றது.
மௌனம் ……மௌனம்…………….மஹத்தான மௌனம்……உதவியது நேர்கொள்ள  .  ”ஒரு சம்ப்ரதாயத்துக்கு சொன்னது என்ன இவள் துலுக்கச்சி குடத்துல தண்ணி கொண்டுவந்து குளிப்பாட்டப் போராளா?இல்லை பிண்டம் பொங்கப்போறாளா? என்னமோ துலுக்கனோட ஓடிப்போயிட்டு சேதி சொன்னவுடன் வந்து இருக்காள்.அடுத்த தெருவுல குழந்தையும் ஆம்படையானும் தவிக்கறா ,குழந்தையை காப்ப‌கத்துல விட்டுட்டு ஒடிப்போனாள் துலுக்கனோட”. மாமா சித்தப்பாவின் காதில் முணுமுணு த்தார்.

வருத்தப்பட ஒண்ணுமேயில்லை. எதிர்பார்த்ததுதான்.அழ, பேச, கதற ,பகிர ஒண்ணுமேயில்லை…
இங்க உனக்கு ஒண்ணுமேயில்லை என்றது அந்த மயான அமைதி. ஒண்ணுமேயில்லை என்று போனவதானே என்ன இருக்கும் இங்க?
வாயைக்கையால் மூடி ஒரு பாட்டம் குமுறிய மனதை கொட்டியது அழுகை.
மெல்ல நடந்து முக்கூடலில் நின்று திரும்பி அம்மாவை அப்பாவை தீர்க்கமாய்ப் பார்த்து .பெருமுச்சு விட்டு சுதாரித்துக்கொண்டு வாயைப்புடவையால் பொத்திக்கொண்டு வெளியே வந்து திரும்பி இடக்கை பக்கம் போகும் தெருவில் இருக்கும் கௌரியை உருவகப்படுத்தமுடியாமல் ஏதொ ஒரு சிறு பெண்ணின் உருவத்தை மனதில்கண்கள் கொள்ளா  நீருடன் பேணி சீவி சிங்காரித்து வளர்த்து பெரியவளாக்கி முப்பது செகன்டில் பத்து வருடம் நடத்தி விட்டு, வந்த ஆட்டோவிலேயே திரும்பும் போது குடந்தை மா ந‌கரம் விழித்துக்கொள்ள தொடங்கி மணீக்கூன்டு கடிகாரம் நான்கு மணியைத்தொட்டது.

Posted in Uncategorized | Leave a Comment »

ம‌றுபடியும் ……………

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 4, 2012

மறுபடியும்  வந்தேன்………

ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் எழுதலாம்னு ஒரு ஆசை. நம்ம சகோதர‌ர்கள் அதான் நம்ம  வாசகர்கள் ஆதரிக்கணும்!

Posted in Uncategorized | Leave a Comment »

திருமணமாம் மறுமணம்……..

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 16, 2009

இந்த வூக் குண்டோர் என்கீற 107 வயதான மலேசியாவைச் சேர்ந்த அம்மா தன்னுடைய 37 வயது மொஹம்மது என்கிற கணவனை விவாகரத்து செய்து விட்டு 23 வது தடவையாக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறார்களாம்.
காரணம் மொகம்மது போதை மருந்து உட்கொள்பவராம். அவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடிவு செய்து புன‌ர்வாழ்வு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து இருக்கிறாரம். அவர் அந்த போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டால் தன்னை விட்டுப்போய் விடுவார் என்று பயமாம் இந்த அம்மாவுக்கு.
உலகத்திலே எதுக்குத்தான் கல்யாணம், எதுக்குத்தான் விவாகரத்து என்று காரணம் இல்லாமல் போய்விட்டது.wook kundor

Posted in Uncategorized | 3 Comments »

எங்க வீட்டு PEACH BLOSSOM!

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 15, 2009

PEACH BLOSSOM

மெல்பர்ன் நகரத்தில் எங்கள் வீட்டுல வளர்ந்திருக்கிற ஒரு Peach  செடியைக் கொத்து கொத்தான பூக்களுடன் படம் எடுத்துப்போட்டிருக்கிறேன். இதே போல நகரம் முழுவதும் பூக்களும் பழங்களும் பூத்தும் காய்த்தும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

செப்டம்பர் ,அக்டோபர், ந‌வம்பர் இங்கு மெல்பர்ன் நகரம் கொள்ளை அழகுடன் பூத்துக் குலுங்குகிறது!பொன் வண்டொன்று வந்து இளமையான பெண்ணின் முகத்தில் மட்டுமல்லாது எல்லோர் முகத்திலும் மோதுகிறது!(இதை மற்ற நாட்டிலிருக்கும் நன்பர்கள் என்ன ஈயடிக்கிறாயா? )என்று விளையாட்டாகக் கேட்கிறார்கள்.‌தட்ப வெப்பமும் நன்றாக இருக்கிறது.
எந்த வீட்டுக்குப் போனலும் அவர்கள் வீட்டில் பழுத்த பழங்களை தருகிறார்கள். வித‌விதமான பூக்கள் . வித‌ விதமான பழங்கள். வித விதமான மனிதர்கள்.
கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கிறது.இனிமையான அனுபவம்.
வருகிற வாரம் நவரத்திரிப் பண்டிகை வேறு . விதவிதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகும்  நமது இந்தியர்கள்.. விருந்துகளுக்கு பட்டியலிடும் நமது பெண்கள். அதை ரசித்து மகிழும் நமது ஆண்கள். விருந்து என்றாலே பெண்கள்தான் பட்டியலிடுவார்களா என்று கேட்காதீர்கள். ஆண்களும் பங்கேற்கிறார்கள். நமது பெண்கள் முன்னின்று நடத்துகிறார்கள்.

Posted in Uncategorized | 1 Comment »

சுறுசுறுப்பாக்கும் டானிக்!

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 28, 2009

சொக்கன் எழுதிய கைதட்டல்கள் படித்தேன்!மிக அழகாக எழுதியிருந்தார்.ஊக்குவிக்கும் அன்பான புகழ்ச்சியையும், மற்றவர் செயலால் நாம் அடைந்த  சந்தோஷத்தை வெளிக்காட்டி அவரை மகிழ்விப்பதையும் பற்றி எழுதியிருந்தார்!
உணர்வுப்பூர்வமாக என்னால் அதை அணுக முடிந்தது. ஏனெனில் பல சமயங்களில் அதன் நன்மையான விளைவுகளை நான் எதிர்கொண்டிருப்பதுதான் காரணம்.
நான் இப்போது வந்து இருப்பது ஆஸ்திரேலியாவில் என் மகள் வீட்டில். மகளும் மருமகனும் பேரன் பேத்தியும்  மெல்பர்ன் நகரமும் கேட்கவா வேண்டும் அருமையான வாழ்க்கைத் தரத்துக்கு.
 என் வரவுக்காகக்  காத்திருந்தவர்கள் என் பேரக்குழந்தைகள். கிட்டத்தட்ட எனக்கு அவர்கள் நண்பர்கள்.ரொம்ப கரிசனத்தோட கவனித்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்.என்னோடுதான் தொலைக்காட்சி பார்ப்பார்கள். பேரன் 13 வயது. பேத்தி 9 வயது.

இந்த தடவை நான் மெல்பர்ன் வந்தடைந்ததும் கொஞ்சம் குளிரினால் மூட்டு பிடித்துக் கொண்டிருந்ததால் தாங்கித்தாங்கி  நடந்தேன். என் பெண் நல்ல ஒரு டாக்டர்கிட்ட காட்டலாம் என்று சொன்னாள்.நான் வயகிறது இனிமே எலும்பெல்லாம் வளரப்போகிறதில்லை. மேற்கொண்டு தேயாமல் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்.அதைப் பார்த்த பேரன் போன தடவை என்னோட கிரிக்கெட் ஆடின உனக்கு அதற்குள் வயசெல்லாம் ஆகாது நீ இன்னும் யங்க் உமன்தான்.என் அம்மாவுக்கு உன் வயதில் ஃபிரண்ட் இருக்காங்க. அவங்க ஜாலியத்தான் பேசுவாங்க. நீ ஒண்ணும் கிழவி இல்லை என்று சொல்லிவிட்டான். எனக்கு ஆச்சரியமாயிருந்தது என்னவோ உண்மைதான்.
நேற்று க்ளென் போயிருந்த போது நான் மூட்டு வலியால் காரிலிருந்து இரங்கக் கொஞ்சம் கஷ்டப்பட்ட போது என் 9வயது பேத்தி பாட்டி நீயும் உன் பேரனும் இந்த ஊரில அம்மா பிள்ளைன்னு சொன்னாக்கூட ஒண்ணும் அதிசயமாக இருக்காது என்று சொன்னாள்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
என்ன இப்படி திரும்பத் திரும்ப பசங்க நம்மை வயசானவங்களாக ஏத்துக்க மாட்டேங்கிறாங்க?
யோசித்தபடி  இன்னைக்கு காலையில் எழுந்து பிள்ளைகளும் பெரியவங்களும் வெளியே போனபோது என்னுடைய நாளை நான் பிளான் பண்ணிக்கொண்டிருந்த போது ஒரு ஃபிரண்டிடமிருந்து போன். அந்த ஃபிரண்ட் பேச்சினிடையே இன்று 19 டிகிரி வெயிலடிக்கப் போரது என்று சொன்னாள்.
பேசி முடித்து விட்டு  சரி வெய்யிலில் நல்ல லாங்க் வாக்கிங்க் போகலாம்னு கிளம்பினேன்.
அங்கெங்கெ காரவான் வைத்துக்கொண்டு கிளம்பும் என்னொத்த பெண்களைப் பார்த்ததும் (பின் மண்டையில் பேரப்பசங்களோட காமெண்ட்ஸ்)வேகமாக மூட்டி வலி முழங்கால் வலி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு நடக்கத் தொடங்கினேன்.சின்னப்பிள்ளைகளானாலும் ஊக்கம் அவர்கள் வார்த்தையால் கிடைத்ததை மறுக்க முடியாது

Posted in Uncategorized | 5 Comments »

பெண் என்றால்…………

Posted by kalyanakamala மேல் ஜூலை 29, 2009

                                   puthiya paravai

இன்னைக்குக் காலையில் ஒன்பது மணியிருக்கும்.

TVஐப்போட்ட‌ போது பொதிகை சானலில் பழய பாடல்களிலிருந்து பாடல்கலள் ஒலிபரப்பாகிகொண்டிருந்தது.முன்னாள் முதல்வர்கள் இருவரும் (ஜெயலலிதாவும் எம்ஜீஆரும்தான்)சுசீலா சௌந்தரராஜன் பாட்டுக்கு ந‌டித்துக் கொண்டிருந்தர்கள் .

நான் எப்பவுமே ஜெயலலிதாவின் அழகை ரசிப்பவள்.ரொம்ப மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது சட்டென சமயலறையில் அவசர நிலை ஏற்பட்டு போகும் நிலை ஏற்பட்டது. திரும்பி வந்தால் கன முடையாக என் கணவர்(கண்ணா அவர்?)தொலைக்கட்சியை மூடியிருந்தார். சரி ஏதோ நம்ம ரசிப்பதை கவனிக்காமல் வீணாக தொலைக்காட்சி ஓடுவதாக நினைத்து மூடிவிட்டார் என நினைத்து விடாப்பிடியாக இன்று          எப்படியும் ஒருகை பார்த்துடணும் என்ற வேகத்தில் 9.30க்கு ஜயா சானலில் போட்டு விட்டு, மின்விசிறி போட்டுக் கொண்டு தொலைக்கட்சி முன் நாற்காலியில் செட்டிலாகிவிட்டேன்.    திரும்பவும் இனிமையான பழய.பாடல்கள் அதே ரசிப்பு.முணுமுணுப்புகள் திசை திருப்புதலுக்கான முயற்சிகள், கொஞ்சம் மெதுவாகத்தான் அந்த TV ஐ வைத்துக்கேளேன் என்பது போன்ற அதிருப்தியைத் தெரிவிக்கும் பல செயல்களையும் புறக்கணித்து விட்டு சரோஜாதேவியின் அபினயத்தை ரசித்ததுக்கொண்டிருந்தேன்.

வாயில் மணி அடித்தது. குப்பைக்காரன் வந்தால் ஓடிப்போய் கதவைத்திறக்கும் கணவர் இப்போ கல்லு மாதிரி உட்கார்ந்திருந்தார்.தொலைக்கட்சி நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்து விட்ட படியால் நான் போய் படு பவ்யமாக கதவைத் திறந்தேன். எங்கள் குடிருப்பு சங்கதிலிருந்து வந்த ஒரு சுற்றரிக்கையுடன் வாட்சுமேன் நின்றிருந்தார்.கையெழுத்தைப்போட்டு அவர் கொடுத்த சுற்றரிக்கையை திருப்பிக்கொடுத்து விட்டு அவர் கொடுத்த ஒரு பேப்பருடன் வந்து திரும்ப சோஃபாவில் சங்கமானேன்.

காலனியில் ந‌டக்கவிருக்கும் பலவித நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டு பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்கள்.jayalalitha
                 நான் தொலைக்கட்சியை மூடிவிட்டு நிகழ்ச்சிகளைப்பற்றி ய நினைவில் சில பல பாரதியார் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தேன்.
கொஞசம் நேரம் பொறுமையாக இருந்த என்கணவர் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தார்.
என்ன நீ போய் கூச்சமில்லாமல் பாடி பரிசு வாங்கப்போகிறாயா? என்றார்.
வந்த‌‌ கோப‌த்துக்கு அள‌வே இல்லை// நான் எதுக்கு கூச்ச‌ப்ப‌ட‌ணும்? பார‌தியார் பாட‌லைப்போய் பாட‌ற‌த்துக்கு நான் எதுக்கு கூச்ச‌ப்ப‌ட‌ணும்? கூச்ச‌ப்ப‌டும்ப‌டியாக‌ நிறைய‌ செய‌ல்க‌ளைச்செய்கிற‌வ‌ர்க‌ள் கூச்ச‌மில்லாம‌ல் செய்கிறார்க‌ள். பெருமைப்ப‌டும்ப‌டி நான் செய்கிற‌ செய‌லுக்கு நீங்க‌ள் கூச்ச‌ப்ப்ட‌ச்சொல்கிறீர்க‌ளா?//என‌ நான் சொன்ன‌வுட‌‌ன் இல்லை ராக‌மெல்ல‌ம் அவ்வ‌ள‌வு ச‌ரியாக‌ இல்லை அதான் சொன்னேன் என்றார். ஆனால் சொன்ன‌து என்ன‌வொ நான் போய் பாடுவ‌து அவ‌ருக்கு ச‌ரியாக‌த்தோன்ற‌வில்ல.
             இப்படி விளையாட்டாக சொல்பவைகூட பெண்களை துன்புறுத்தும் ஒரு சொல்லகவே இருக்கிறது. அது எங்களை எவ்வளவு துன்புறுத்தும் என்பது பற்றிக்கொஞ்சம்கூட கவலையும் இல்லை.
 பெண் என்றால் ஆண்களின் சந்தோஷத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவளாகவும் தனக்காக எதுவும் இல்லாமல்  வாழ்பவளும் ம‌ட்டும்தான் என்ப‌து ம‌ன‌தில் படிந்திருக்கிறது.

                     இப்படி சுயத்தை இழக்கக்கூடது என பல மனனல நிபுணர்களும் பெண்ணுரிமை யாளர்களும் சொன்னாலும் பெண் தானாகக்கொஞ்சம் போரடத்தான் வேண்டியிருக்கிறது.

Posted in Uncategorized | 3 Comments »

சீனாச்சீமை

Posted by kalyanakamala மேல் ஜூலை 13, 2009

PearlsCity

grand hyatt
grand hyatt

சீனா என்றால் ஜனத்தொகை,பாம்புக்கறி மட்டுமே நினைவுக்கு வரும் நமக்கு நிஜ சீனவில் பல உயர்வான விஷயங்கள் இருப்பதைக் காட்டவே இந்தப்பதிவு!
சீனா என்றால் அதன்  வளர்ச்சி இன்று அதிகமாகப்  பேசப்படுகிறது.சீனா என்றால் அதன்  வளர்ச்சி இன்று அதிகமாகப்  பேசப்படுகிறது.சீனாவில் உள்ள ஷங்காய் நகரம் முழுவதும் வழ வழன்னு சாலைகள் ,வானை முட்டும் பலமாடிக்கட்டடங்கள்,ரவிவர்மா சித்திரத்தில் அல்லாமல் நிஜமாக நம்மவர்கள் பார்த்திராத மஞ்சள் நிற மெல்லிய  மினுமினுக்கும் (என்னதான் சாப்பிடுவார்களோ?பச்சை டீ குடிக்கிறார்களே அதனாலேயா இந்த அழகு மென்மை?)பெண்கள்.

 கலராக விற்பனை செய்யப்படும் முத்துக்கள். பல டிசைன்களில் பல கலர்களில் பல விலைகளில் சரம் சரமாக தொங்க விட்டு விற்பனை செய்யும் கடைகளைக்கொண்ட pearl tower. pearl in strings

முத்து விற்பனை செய்யும் பெண்களின் முகத்தில் எப்பவும் இருக்கும் புன்னகை கடவுள் இவர்களுக்குத்தந்த வரமோ!புன்னகையுடன் உழைப்பது ஒரு சிறந்த கலைதான்!
435272587-edt-ph-4-20090706-231211

grand hyatt  ஹோட்ட‌ல் உல‌க‌த்திலேயே உய‌ர‌மான‌ க‌ட்டிட‌த்தில் உள்ள‌து.காரில் சாலைக‌ளில் வ‌ழுக்கி பிர‌யாண‌ம் செய்து grand hyatt ஹோட்ட‌லை அடைந்தால்அத‌ன் பிர‌ம்ம‌ன்ட‌ம் ந‌ம்மை விய‌க்க‌ வைக்கிற‌து. என்ன‌ சுத்த‌ம்?உல‌கின் பழைய‌ நாக‌ரீக‌ம்வ‌ள‌ர்ச்சி அடைந்து வின‌யாமாக‌வும் விருந்தின‌ர் உப‌ச‌ரிப்பாக‌வும் முழுமை பெற்றுள்ள‌தோ?புன் முறுவ‌லும் ,வ‌ர‌வெற்பும் க‌ல‌க்குன்ற‌ன‌
டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சிங்கப்பூரிலும்,துபாயிலும் மூக்கைப்பிடித்துக்கொண்டு ஒடிய‌ நாம் இங்கு கண்ணைக்கட்டிக்கொண்டு ஓட வேண்டியிருந்தது.உரித்த பாம்பும் உரித்த தவளையும் கனவில் கூட பயமுறுத்தும் போலத்தோன்றியது.ஈசல் வறுவல் வேறு!  ந‌ல்ல வேளை grand hyatt ஹோட்ட‌லில்  கிடைத்த சான்ட்விச்சும் காப்பியும் ஐஸ் கிறீமும் நம்மைப்பிழைக்க வைத்தன.

Posted in Uncategorized | 1 Comment »

கடவுள் மாதிரி…….

Posted by kalyanakamala மேல் ஜனவரி 21, 2009

நான் பல கால்கட்டங்களில் // கடவுள் மாதிரி//என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்தும் மற்றவர் பிரயோகிக்கும்போது கேட்டும் பார்த்திருக்கிறேன்.
அதன் உண்மையான அர்தத்தை உணர கடவுள் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார்.
பாத்ரூம் அழுக்கானதால் சுத்தம் செய்யணும்னு தோணித்து.சுத்தம் செய்யற திரவம் இல்லாததால் கொஞ்சம் தடுமாறின போது வீட்டு வாசலிலேயே ஒரு சேல்ஸ்மேன் (கடவுள் மாதிரி வந்து)நல்ல கிளீனிங் திரவம் என்று கூறி ஒரு திரவத்தை விற்க நானும் என் கணவரின் விருப்பமில்லாமல் வாங்கினேன் அந்த சேல்ஸ் மேனின் நடைமுறை விளக்கத்தைக் கேட்டு. அவர் சட்டென்று என் வீட்டு வாயிற்படியிலிருந்த விளக்கு வைக்கும் இடத்திலிருந்த எண்ணைய்க் கரையை மிக எளிமையாக அந்த திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து காட்டினார்.

நானும் அதே முறையில் என் பாத்ரூமை அந்த திரவத்தை வைத்து சுத்தம் செய்தேன். பாத்ரூம் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது.
என் கணவரும் வாஷ் பேசின் போன்றவற்றை சுத்தம் செய்து விட்டு //எப்படி உன்னால் அப்படி இதை வைத்து கிளீன் பண்ண முடிந்தது?//என்றுகேட்டார்.

நான் சொன்னேன் //அந்த திரவம் கடவுள் மாதிரி !அதன் துணையுடன் என் மனமும் கையும் உழைத்தன போல //என்று.

Posted in Uncategorized | 5 Comments »

நானும் ஒரு பட்டாம்பூச்சி!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 11, 2009

bfபட்டாம்பூச்சி விருது கொடுத்த ஸ்ரீராம் என்னை திக்கு முக்காட வைத்து விட்டார். முதலில் நான் சொல்லிப் பெருமை பட்டுக்கொண்டது என் கணவரிடம். இரவு 10 மணிக்கு மேல். தூக்கக்கலக்கத்தில் வந்து படித்து விட்டு சந்தோஷம் என்று மிகவும் ஃபார்மலாகச்சொல்லி விட்டுப் (பின்ன எப்படிச்சொல்வார் என்கிறீர்களா?)போய் TV பார்க்க ஆரம்பித்து விட்டார். மறுநாள் என் மகனிடம் சொன்னேன் . பார்த்து விட்டு சரியென்றான். எப்பவுமே அவனுக்கு ஏதோ ஒரு பயம் அம்மாவை கொஞ்சம் தூக்கிப்பேசி விட்டால் கைமீறிப்போய் விடுமென்று ஏனென்று தெரியவில்லை. ஆனால் பெரிய ஆபத்தான சமயங்களில் உபயொகப்படுத்திக் கொள்வான். இது ஒரு மகன்களாதிக்கம் கேஸ்
அடுத்தது மறுநாள் காலை கணினி முன் உட்கார்ந்து பெண்ணைப்பிடித்தேன். பட்டாம்பூச்சி பரிசைச் சொன்னேன். அந்தப் பக்கத்தில் ஒரே சந்தோஷக்குரல்கள்.
பேரன் பேத்தி எல்ல்லோரும்  இஙிலீஷ் மொழிபெயர்ப்புடன்(மகள் மொழி பெயர்த்துச் சொல்ல)ஒரே சந்தோஷ சாம்ராஜ்யம்.
பரவாயில்லையே அம்மா உன் பிளாக் நல்லாதான் போயிருக்கு போல! என்றாள் மகள். பேரன் பேத்திகள் வாழ்த்தினார்கள்.

சேவியர்,ஜெயஸ்ரீ மற்றும் விஜய்கோபல்ஸ்வாமிக்கு நான் இந்தப்பட்டாம்பூச்சி விருதைக் கொடுக்க விரும்புகிறேன்!
1.அலசல் ‍‍http://xavi.wordpress.com  ‍: இந்த பிளாக்கில்  சேவியர் மிக நல்ல பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறார். கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பின்னூட்டங்களும் பதிவுகளும்.

2.தாளிக்கும் ஓசைhttp:http://mykitchenpitch.wordpress.com/: நல்ல எழுத்து நடை . நல்ல சாப்பாடு. ரசனையுள்ள பெண் எழுதும் பதிவுகள்.

3.விஜயகோபலசாமி பக்கங்கள் http://vijaygopalswami.wordpress.com:  கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பதிவுகள். நல்ல சிந்தனையாளர் ஆனால் விளையாட்டாக தகவல்களைத்தரும் விதம் நம்மைக் கவரும். இளைய தலை முறையினருக்கு ஒரு நல்ல முன் மாதிரி.

இவர்கள் வலைத்தளத்தில் ஏற்கெனவே நிறைய பரிசுகள் வாங்கி இருக்க நிறைய சான்ஸ் இருக்கு!
புகழ் மிக்க எழுத்தாளர்கள். இவர்கள் எழுத்துக்குக்கிடைக்கும் பின்னூட்டத்தை வைத்துத்தான் சொல்கிறேன்.

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி  லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவர்களும் இந்தப் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில்  மூன்று விதிகளைக் கடைபிடிக்கணும்.

1. இவர்கள் மூன்று பேருக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கணும்.

2. விருது கொடுக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

3.விருது கொடுக்கக்கப் பட்டவர்கள் வலைத்தளத்துடன் link  செய்து கொள்ளவும்.

Posted in Uncategorized | 5 Comments »