Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

பிள்ளை வருவான்………….

நீங்க கீழ்பாக்கம் கார்டனில் இறங்கப்போரீங்களா? குரல் கேட்டு நிமிர்ந்தேன். ந‌டுத்தர வயது,எளிமையான சிரித்த முகம். நின்று கொண்டு பயணித்த பெண்மணியிடமிருந்துதான் குரல் வந்திருந்தது.
 
  “இல்லையே நான் வெஸ்ட் டிப்போ போகிறேன்”.

“அப்படியா?” சமாளிக்க முடியாத ஏமற்றம் குரலில் தொனித்தது.

” பஸ்ஸுல‌ நின்னுட்டு வர முடியல்லிங்க! காலை வலிக்குது”.
“அப்படியா”  என்று எழுந்து இடம் கொடுக்கும் நிலை எனக்கு இல்லை. பயணம் வெகு தூரம்.

“பிள்ளைங்க ஆட்டோல போன்னுதான் சொல்லுறாங்க.முப்பது ரூபாய் தானேங்கிறாங்க,எனக்குதான் முப்பது ரூபாய்க்கு வேற உபயோகமாக எதாவது வாங்கலாம்னு தொணுது”

நான் கேட்காமலேயே விளக்கம்.

என்னையறியாமல் என் கண்கள் அந்தப் பெண்மணியை சோதனையிட்டன. கவரிங்
வ‌ளையல்கள், ஏதோ ஒரு சங்கிலி எளிமையான தோற்றம்.
கண்களில் ஒரு சோகமும் கூடவோ? நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
முப்பது ரூபாயை பெரிய விஷயமாக இல்லாமல் தூக்கிப்போட முடியும்
 வர்க்கமாகத் தோன்றவில்லை.

இரண்டு நிறுத்ததுக்குப்பின் அந்தப்பெண் இறங்கி இருக்கணும் ,அப்புறம் அவளைப் பார்க்க வில்லை.
மனம் வட்டமிட்டது அவளை. அவள் ஏன் அப்படி வலியப் பேசினாள். விடை தெரியாமல் பெண்டுலம்போல மனம் ஊசலாடி நின்றே போனது. 
 இரண்டு  நாட்கள் கழித்து அதே வழியில் பயணம். போக்குவரத்து நெரிசலில் பஸ் தட்டுத்தடுமறி நின்று நடந்து போகிறது.

  “அம்மா” என்ற கூப்பிடும் ஆண்குரல் கேட்டு அனிச்சையாகத் திரும்பினேன். வாலிப வயதுப்பையன்,கூட அதே பெண்மணி.

“என்ன பண்ணுவீங்களோ தெரியாது,எனக்கு துட்டு வெணும்.”

 “போகவர பஸ்ஸுக்குத்தான் இருக்கு”இது பெண்மணி.

“அதையாவது கொடுங்க!ஏதோ சமாளிச்சுக்கிறேன்.”இது அவன்.

கொடுத்து விட்டு பஸ் கிளம்பும் முன் அதை பின்னுக்குத் தள்ளி விட்டு நடக்கத்தொடங்கினாள் அவள்.

2 பதில்கள் to “பிள்ளை வருவான்………….”

  1. kunthavai said

    நிஜமாக நடந்ததா. இதெல்லாம் ரெம்ப அநியாயம்.

  2. hm……………

kalyanakamala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி