Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for செப்ரெம்பர், 2007

எங்கிருந்தாலும் வாழ்க!

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 26, 2007

 

நான் இரன்டு வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா போகும் சந்தர்பம் கிடைத்தது.அங்கு சில காலம் தங்கி இருந்தேன். ஆஸ்திரேலியா ஆங்கிலேயர்களின் பாதிப்புபு மிக்க நாடு.பல நாடிகளிலிருந்தும் பல் வேறுதுறையைச் சேர்ந்தவர்கள் அங்கு குடியுரிமை பெற்று வாழ்வதால் பல நாட்டு மக்களைக்கொன்ட ஒரு சமுதாயம் அங்கு இருக்கும். நம் நாட்டிலிருந்து பழக்கவழக்கங்கள், உணவு முறை, உடைகள் ,கலசாரம், மொழி சீதொஷ்ண நிலை என்று எல்லா விதத்திலும் மாறு பட்ட ஒரு நாடு.

நான் சென்றிருந்தது மெல்போர்ன் நகரம்.தமிழ் நாட்டில் ஊட்டி பொல மெல்போர்ன் நகரமும் குளிர் மிக்க‌ நகரம்.முதலில் எனக்கு கொஞச‌ம் குழப்பமாகவே இருந்தது.போகப்போகப் பழகி விட்டது.

நான் ஒரு நாள் அங்கு இருக்கும் ஒரு பல்பொருள்சிற‌ப்பு அங்காடிக்குப் போயிருந்தேன். அங்கு தள்ளுபடி விலைப் பிரிவில் இருந்த பொருட்களை பார்வையிட்டுக்கொன்டு இருந்தேன்.என் கையில் ஒரு எவெர்சில்வர் கறிவடிகட்டி வைத்திருந்தேன்.அங்கு வந்த ஒரு ஆங்கிலேயர் ஒருவர் என்னைப்பார்த்து என்ன கறி பண்ணப்போகிறீர்கள் வென்டைக்காயா அல்லது கத்தரிக்காயா என்று நட்புடன் ஆங்கிலத்தில் விசாரித்தார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாகப்போய் விட்டது.என் புடவையையும் என் நடை உடை பாவனைகளையும் வைத்து என்னை அவர் இனம் கண்டு கொண்டது வியப்பாகவே இருந்தது.

நான் என் வீட்டுக் குழந்தைகளுடன் அடிக்கடி அங்கு இருக்கும் பூங்கா ஒன்றுக்கு போவது வழக்கம்.ஒரு நாள் அப்படிப் போகும்போது ஒரு இந்தொனிஷியப்பெண்ணை சந்தித்தேன். அவளும், அவளுடைய குழந்தைகளுடன் விளையாட வந்திருந்தாள்.அவள் என்னுடன் பேசிக்கொண்டிருக்க அவள் குழந்தைகள் விளையடிக்கொன்டிருந்தனர்.மணி சரியாக 5/30ஆனதும் அவள் பரப்பாக வீட்டுக்குப்போக வேன்டும் என கிளம்பினாள். நான் இவ்வளவு நேரம் பேசிக்கொன்டிருந்த அந்தப்பெண் இப்போது ஏன் அவசரப்படுகிறாள் என்று எண்ணி அவளையே கேட்டேன். அவள் என் கணவர் வீடு திரும்புகிற நேரம். அவரிடம் வீட்டு சாவி இல்லை. என்னிடம் உள்ளது என்று கூறினாள். நான் அவளிடம் நீ என்ன படிப்பு படித்திருக்கிறாய் என்று கேட்டேன். அவள் முதுனிலை பொருளதாரம் படித்திருப்பதாகக் கூறினாள்.வேலைக்குப்பொக வில்லையா என்று சாதாரணமாக‌ விசாரித்தேன்.தானும் வேலைக்குப் போனால் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகள் படிப்பு என்று எவ்வளவோ வேலைகள் பார்ப்பதற்கு கஷ்டமாயிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தாள். என் முன்னே நின்றது ஒரு படித்த, ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு பெண்ணாக க‌ண்ணுக்குத்

தெரியவில்லை.

சுயந‌லமில்லாத தான் என்ற மமதை இல்லாத நல்ல ஒரு மனைவியும் பொறுப்பான ஒரு குடும்பத்தலைவியும் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.என்னுடன் பேசிவிட்டு அவசரம் அவசரமாக தன் இரன்டு குழந்தைகளையும் கையைப்பிடித்து அழைத்துக்கொன்டு வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணை என்னால் மறக்கவே முடியவில்லை

Advertisements

Posted in Uncategorized | 7 Comments »

எனது அருமை இந்தியா

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 25, 2007

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெருமைப்படவும் வைத்தது.என் மகளும் அவளுடைய குழந்தைகளும் வெளி நாட்டிலிருந்து வந்திருந்தனர்.என் மகளுக்கு பெரியவன் மகன் மற்றும் சின்னவள் மகள். மகனுக்கு பதினோரு வயது மற்றும் மகளுக்கு ஏழு வயது ஒவ்வொரு வருட‌மும் அவர்கள் வரும்போது நான், என் கணவர், என் பெண், மற்றும் பேரக்குழந்தைகள் அனைவரும் எங்கள் குல தெய்வத்தின் கொவிலுக்கு சென்று வழி படுவது வழக்கம். குலதெய்வத்தின் கொவில் கும்பகோண‌த்துக்கு அருகில் உள்ளது.

நாங்கள் இந்த வருடமும் வழக்கம்போல் எங்கள் காரில் சென்னையிலிருந்து கும்பகோணத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கினோம்.

கார் பாதி தூரம் சென்றிருக்கும். நாங்கள் காலையில் கிளம்பும் முன் சாப்பிட்டதுதான். ஆகையால் எல்லலோருக்கும் பசித்தது.

நாங்கள் கையில் எடுத்துப்போயிருந்த உணவு வகைகளை சாப்பிட்டோம்.சாப்பிடுவதற்கு பேப்பர் தட்டுகள் எடுத்துப்போயிருந்தோம். மற்றவர்களுக்கு முன் நான் சாப்பிட்டு முடித்து விட்டேன். ஆகையால் கார் கண்ணாடியை இறக்கி பேப்பர் தட்டை நான் வெளியே தூக்கி எறிந்தேன். என் பேத்தி அழ ஆரம்பித்து விட்டாள்.விக்கி விக்கி ஒரே அழுகை. அவள் சாப்பிடவும் மறுத்து விட்டாள். அழுகைஅதிகமாகி நாங்கள்  மெதுவாக என்னவென்று மிகக் கஷ்டப்பட்டு அழுகையின் காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம்.தேம்பிக்கொன்டே என்னை கைகளால் காட்டி நீ இந்தியாவை ஏன் அழுக்கு ஆக்குகிறாய். னான் இந்தியாவை ரொம்ப நேம்படிசிக்கிறேன்.வழ்க்கையில் வெற்றி அடையாத ஏழை சகோதரர்கள் பலர் இந்த ரோடுகளின் ஓரங்களில் வாழ்கிறார்கள். நீ அவர்களை துன்பப்படுத்துகிறாய் என்று ஒரே அழுகை ( I love india . You are making it dirty. My unsucessfull brothers and sisters are living in the road sides.Why are you troubling them? dont you have sympathy over them?)எனக்கு இந்த அனுபவம் மிக நெஞ்சைத் தொடுவதாகவும் ஆச்சரியாமாகவும் இருந்தது.என் பெண் சட்டென்று காரைப் பின்னால் கொஞ்சம் தூரம் போக‌ச்சொல்லி அந்த பேப்பர் தட்டை எடுத்து ஒரு பாலிதின் கவருக்குள் போட்டு விட்டு மற்றவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அவர்கள் தட்டையும் கவருக்குள் போட்டு போகும் வழியில் எங்காவது குப்பைத்தொட்டி இருக்கும் போட்டு என்றுவிடலாம் என்று

ன்ன பின்தான் அவள் சமாதானமானாள்.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | 3 Comments »

இன்பம் சேர்க்க மாட்டாயா?

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 24, 2007

 

வாழ்க்கையில் துன்பம் வந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேன்டும்.பொதுவாக துன்பம் என்று வந்து விட்டால் நமக்கு மட்டும்தான் துன்பம் என்று நினைத்து செயலிழந்து பொகக்கூடாது.மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு துணிவு வேன்டும். இவர்கள் என்ன நினைப்பபார்களோ என்று தயங்கக்கூடாது .அத‌ற்காக எல்லோரிடமும் சொல்லிப் புலம்புவதிலும் பயனில்லை. நமக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு நபரிடம் சொல்லிக் கலந்தாலோசிக்கலாம்.அவர்கள் அவர்களுக்குத்தெரிந்த எதாவது ஒரு வழியைச்சொல்லலாம்.அதை முயற்சி செய்யலாம், அதுவெ நல்ல வழியாக‌க்கூட அமைந்து விடலாம்.அது அப்படி தீர்வு காணும்படி அமையா விட்டாலும் எதாவது ஒரு சின்ன யுக்தியை கையாள நமக்கு உற்சாகத்தை அளிக்கலாம். நம்மொடு இந்த பிரச்சினையைப்பறிப் பேச ஒருவர் இருக்கிறார் என்பதே ஒரு பெரிய தெம்பு .பெரும்பாலும் மனச்சோர்வே துயரங்களைப் பெரிதாக்குகிறது.துயரம் வந்து விட்டது இனி மீளவே முடியாது என்று இடிந்து போய் உட்காராமல்

தீர்த்துக்கொள்வது என்ற நிலைக்கு பகிர்ந்து கொள்ளும் பழக்கம்தான் முதல் படி.எல்லொருக்கும் ஏதொ ஒரு வகையில் குழப்பம் அல்லது துன்பம் இருக்கும்.தனக்கு மட்டுதான் இப்படி வந்துள்ளது என்று நினைத்து எப்பொதும் சோகமாக அல்லது வழ்க்கையில் பிடிப்பில்லமல் நடப்பது தேவையில்லாதது.மிக எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும் என்று மற்றவர் நினைக்கும் பிரச்சினைகளைக்கூட‌ நமக்கென்று வந்து விட்டால் செயலிழந்து போகிறோம். கடவுளை வேன்டிக்கொள் நல்ல தீர்வு கிடைக்கும் என்று பெரியவர்கள் கூருவர்கள். கடவுளிடம் கூறும்போதே ந‌ம்மிடமும் ஒரு முறை நாமாகவே சொல்கிறோம் அல்லவா? நம்ம் உள் ம‌ன‌தெ கூட‌ இன்னொரு ஆளின் இட‌த்தில் இருந்து தீர்வுக்கு யோச‌னை வ‌ழங்க‌க்கூடும்.

ஆக‌வே மா‌ற்றி மா‌ற்றி எதாவது யுக்திகளைக் கையாள வேன்டும்.மனமிடிந்து போகக்கூடது,துன்பமாகவே ஒருவரின் வாழ்க்கை பூராவும் இருந்த்து விடாது. இன்பமனதாகவேயும் இருக்காது.துன்பத்துக்கப்புறம் இன்பம் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையெ நிஜம்.

Posted in Uncategorized | 1 Comment »

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 24, 2007

தமிழைப்பற்றிப் பேச்சு வந்தவுடன் எனக்கு என் பள்ளிப்பருவம்தான் ஞாபகம் வருகிறது. நான் (1967க்கு முன்) பள்ளியில் படித்த நாட்களில் எனக்கு தன்டபாணி தேசிக‌ர் என்னும் த‌மிழ் ஆசிரிய‌ர் இருந்தார்.அவ‌ர் எங‌ள் எல்லொரையும் தூய‌ த‌மிழில் பேசச்சொல்லி மிக வற்புறுத்துவார்.இலக்கணபாடங்களை மிக அழகாக உவமையுடன் எடுதுக்கூறுவார்.கையெழுது கூட எப்படி எழுதுவது என்று மிக அழகக எடுத்துக்கூறி எழுத வைப்பார்.அவருக்கும் சமசஸ்க்ருத ஆசிரியருக்கும் அடிக்கடி விவாதம் வந்து விடும்.மாணவிகளில் சிலர் அந்த த‌மிழ் ஆசிரியரின் தீவீர பகதைகள் என்றால் மிகை ஆகாது.

வீட்டில் எல்லொரும் வெறுப்படையும் வகையில் தமிழ் ஆசிரியரைப்பற்றியும் அவர் கூறிய கருத்துக்களையும் விலா

வாரியாகப்பெசுவது வழக்கமாயிருந்தது.இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

உறவினர்களுக்குக் கடிதம் எழுதும்போது நான் கமலா என்று கையெழுத்திடாமல் செந்தாமரை என்று கையெழுத்து போடுவேன் என்றால் எவ்வளவு தீவிரமக நாங்கள் தமிழ் மீது பற்று வைத்திருந்தோம் என்று புரியும்.உறவினர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கும் அளவுக்கு இந்த த‌மிழ் பற்று இருந்தது என்றால் மிகையாகாது.

அப்பிடி இருந்த என்னை இந்த சென்னை மாந‌கரம் இப்பிடி மாற்றி விட்டது.

முதலில் சென்னை வந்தவுடன் நான் கற்றுக்கொன்ட முதல் சொல் கிருஷ்ணாயில்.மண்ணெண்ணை என்று அழகாக சொல்லிக்கொன்டு சென்னை வந்த என்னை கெரொசின் என்ற ஆங்கில‌ வார்த்தையின் திரிபான கிருஷ்ணாயில் பிடித்தது முதலில்.கொஞ்சம் கொஞ்சமாக சென்னைத்தமிழ் பயின்றோம்

மெதுவாக சென்னை வாசியாகி சென்னைத்தமிழுக்கு பழக்கப்பட்ட எங்களை

திரும்ப நல்ல தமிழ் கற்றுக்கொள் என்று சொன்னல் எப்பிடி திடீரென்று மாறுவது .இருந்தாலும் உயிருக்கு நேரான தமிழை திரும்பப்பெற முயற்சி செய்ய வேன்டாமா என்ன?

 

Posted in Uncategorized | Leave a Comment »

யாரைக் குறை சொல்வது..

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

ஆன்கள்தான் தவறுகளுக்கு மூலகாரணம் என்று முடிவுகட்டிவிட்ட இன்னாட்களில் பெண்களின் விபரீதமான போக்கு பயமுறுத்துவதாக இருக்கிறது.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மனதைத்திகில் படுத்துகிது.என் நன்பர் ஒருவருக்குத்தெரிந்த ஒரு மனிதர் மன வெருபாடுகாரனமக மணமுறிவு ஆனவர்.வெலினாட்டில் வேலை பார்ப்பவர். இணையதலதில் மருமணத்துக்காக விளம்பரம் செய்திருந்தார். விருப்பம் தெரிவித்து பலபெண்கள் மெயில் அனுப்பி இருந்தார்கள்.இந்தியா வரும்போது எல்லொரையும் சந்தித்து ஒரு பெண்ணை முடிவு செய்யலாம் என தீர்மானித்து இருந்தர்.
ஒரு நாள் இந்தியவிற்கு வரவும் செய்தார்.ஒரு குரிப்பிட்ட பெண் மட்டும் ஏர் போர்டிலேயெ சந்திப்பதகக்கூறி ஒரு செல்பொனும் வெளி நாட்டிலிருந்தே வாங்கிவரச்சொல்லி இருக்கிறார். நண்பரும் பெண் பார்க்க நன்றாக இருந்ததால் செல்போனுடன் வந்து இறங்கினார்.ஏர்போர்டில் சந்தித்த பெண் நண்பரை தன் வேட்டுக்கு அழைதுச்சென்று செல்போனை எடுதுக்கொன்டதுடன் நில்லாமல் பியூட்டி பார்லருக்குப்போக 2000 ரூபாய் பணம் கெட்டிருக்கிறார். நண்பர் இல்லாத கொடுமை என்று நினைத்தும் தன் மீது அளவற்ற காதலால் நம்பிக்கை என்று நினைது கொடுத்திருக்கிறார்.
னண்பரின் இரக்க மனப்பான்மையையெ துருப்பாக எடுத்துக்கொன்டு அந்தப்பெண் ஒரு வாரத்துக்கும் மேல்   நண்பரின் பெற்றோரையும் சந்தித்து நயமாக குடும்பப்பெண் போல நாடகமாடி நண்
பரின் பணத்தை தண்ணீர் போல செலவழித்துவிட்டு ,கடைசியில் தனக்கு மூன்று லஷம் ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறாள் அந்தபu3021?பெண். நண்பர் விழித்துக்கொன்டார்.மூன்று லஷம் கொடுத்தவர் யார் எனக்கெட்டு அந்தப்பெண் காட்டிய நபரை ஒரு வழியக்கிவிட்டு அதுவும் செட் அப் என்று தெரிந்து கொன்டு விட்டால் போதும் என்றுதலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து பெற்றோர்களை எச்சரித்து விட்டு ஓர் திரும்பினார்.கல்யாண இணயதளங்களைக்குட நம்பி இறங்கமுடியாத நிலை.இப்படியும் பெண்களா?யாரைக்குற்றம் சொல்வது?

Posted in பொது | குறிச்சொல்லிடப்பட்டது: | 7 Comments »

பள்ளிப் பருவம்

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

நான் சிறுபெணணாக பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று நினைத்துபார்க்கையில் சிரிப்புத்தான் வரும். நான் ஒன்பதாம் வகுப்புப்படித்துக்கொன்டிருந்தேன். அப்போது எனக்கு பிறந்த நாள் வந்தது.பள்ளிப்பருவத்தில் பிறந்த நாள் என்பது மிகப்பெருமையன விஷயம்.ரொம்ப உற்சாகமாக நான் பள்ளியில் சக மாணவிகளுடன் உலவிவிட்டு படு மும்முரமாக வகுப்பு நடக்கும் சமயம் ஒரு திடீர் திருப்பம் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்.பள்ளியில் வெலை செய்யும் செவகர் என்னை தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாக வந்து தெரிவித்தார். அப்போதெல்லம் தலமை ஆசிரியர் கூப்பிடுவது என்பது மிக பயமுறுத்தும் விஷயம். பாராட்டுவதாக இருந்தால்  வகுப்பின் நடுவில் கூப்பிட்டு பாராட்ட மாட்டர்கள் என்பது எல்லொரும் அறிந்ததே.எனக்கு எப்படி எதிர்கொள்வது இந்த விஷயத்தை என்று இருந்தது.
சமாளித்துக்கொன்டு தலைமையசிரியர் அறையை நோக்கிப்பொனேன். அங்கே தலைமை ஆசிரியர் மற்றும் ஒருகுமாஸ்தா தபால்காரர் மூன்று பெரும் என் வருகைக்காக  காத்திருந்தனர்.எனக்கு மனதில் பயம். ஆனலும் நாம் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையும் இருந்தாலும் இந்த மதிரி ஒரு சூழ்னிலை புதிது ஆகையால் பதற்றமக இருந்ததது.
தலைமை ஆசிரியர் என்னைக்கன்டதும் உனக்கு எத்தனை அண்ணன்கள் என்று இயல்பாகக்கேட்டார்கள். எனக்கு உண்மையிலே ஒரு அண்ணன் தான். எஙு உண்மையைக்கூறினேன் ஒரு அண்ணன் என்று.  பின் அண்ணான் என்ன செய்கிறார் எங்கு படிக்கிறார் போன்ற விவரங்களைக்கேட்டார்.  நானும் பயம் எதுவில்லாமல் உண்மையைக்கூறினேன். கையில் ஒரு பார்சலை எடுத்துக்காட்டி இதை அனுப்பியது யார் என்றும் உனக்கு இன்று பிறந்த நாளா என்றும் கேள்விக்கணைகளைத்தொடுத்தார். பார்சலை வாங்கிப்பார்த்த நான் அதன் மேல் இருந்த முகவரியைப்பர்த்தவுடன் தெம்பாகிவிட்டென்.அது எனது பெரியப்பா பிள்ளை (அண்ணன்முறைதான்) அனுப்பிய பார்செல்தான்.பிறந்த நாளுக்காக நினைவு வைத்துக்கொன்டு என் அண்ணன் எனக்கு அனுப்பிய பரிசை சரியாக பிறந்த நாள் அன்று நான் என் கையால் வாங்கிக்கொள்ள வெண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் என்பள்ளி விலாசத்துக்கே அவர் அனுப்பிய பரிசு இன்னொரு நல்ல எண்ணம் கொண்ட என் தலைமை ஆ சிரியரின் கைகளில் மாட்டிக்கொன்டு என்னைப்பார்த்து சிரித்தது.பள்ளிக்கு பரிசு வருகிறதா உன் அப்பவிடம் பேசிக்கொள்கிறேன் என்று மிரட்டி விட்டுச்சென்றார் போஸ்டு மேன்.தலைமை ஆசிரியருக்கு என்னைப்பற்றி மிக நல்ல அபிப்பிராயம்.இருந்தாலும் இதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம்.போஸ்டுமேனுக்கு நல்ல குடும்பப்பெண் எந்த தவறுகளிலும் மாட்டிக்கொள்ளக்கூடது என்ற நல்ல எண்ணம்தான். நிறைய பெருடைய நல்ல எண்ணங்கள் என் பிறந்த நாளில் வெளிப்பட்டது என்னை பயப்படுத்தியது என்னவோ உண்மைதான்

Posted in பொது | 3 Comments »

படிப்பது இராமயணம்..

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

ஒரு நாள் கடுமையான தலைவலி. தாங்க முடியவில்லை.தனியே அவதிப்பட்டுக்கொன்டிருக்கிறோம். சட்டென்று பக்கத்தில் ஒருவர் மத்திரை ஒன்றை எடுத்துக்கொடுத்து தண்ணீர் கொடுத்தால் தேவலையாகிவிடும். ஆனால் இந்த சிறிய செயலை செய்து கொள்ளத்தெரியாமல் அவதிப்படுவது பெரும்பலும் நடக்கும் விஷயம்தான்.இந்த குறிப்பிட்ட மேற்கோள் இது மிகச்சிறிய விஷயம்,ஆனால் பெரிய பெரிய விஷயஙளில் கூட இதே அளவு உதவி இருந்தால் பெரிய தீர்வுகள் கிடைக்கும்.சின்ன மற்றும் பெரிய ப்ரச்சினைகளுக்கு மற்றவர் ஒரு சிறிய கைத்தூக்கல் தூக்கி விட்டால்பிரச்சினை தீர்ந்து விடும்.அனுமனுக்கு ஒரு ஜாம்பவான் இருந்ததால்தான் சுந்தரகான்டம் ராமாயணத்தில் உருவாயிற்று.அனுமனைக் கடலைத்தான்ட வைக்க ஜாம்பவனின் ஒரு சிரு ஊக்கம்தான் காரனமாயிற்று.அனுமன் கடல் தாண்டாவிட்டால் ராமாயணம் ஏது? ஒவ்வொருவீட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் பல ஜாம்பவான்கள் இருந்தால் நன்றாயிருக்குமே!ஒவ்வொருவரும் ஜாம்பவனாக மாறுவதைத்தான் ராமாயணம் எதிர் பார்க்கிறது.ஏன் மாற முடியவில்லை?ஏன் செய்யவில்லை? ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வில்லை?மனதால்,உடம்பால்,வார்த்தையால் உதவுவது என்பது பழக்கம்தான் காரணம்.பழக்கப்படுத்திகொள்வோம் பிரதி பலன் எதிர் பார்க்காமல் உதவுவதை.

Posted in பொது | 2 Comments »

Hello world!

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 2 Comments »