Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

பள்ளிப் பருவம்

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007


நான் சிறுபெணணாக பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று நினைத்துபார்க்கையில் சிரிப்புத்தான் வரும். நான் ஒன்பதாம் வகுப்புப்படித்துக்கொன்டிருந்தேன். அப்போது எனக்கு பிறந்த நாள் வந்தது.பள்ளிப்பருவத்தில் பிறந்த நாள் என்பது மிகப்பெருமையன விஷயம்.ரொம்ப உற்சாகமாக நான் பள்ளியில் சக மாணவிகளுடன் உலவிவிட்டு படு மும்முரமாக வகுப்பு நடக்கும் சமயம் ஒரு திடீர் திருப்பம் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்.பள்ளியில் வெலை செய்யும் செவகர் என்னை தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாக வந்து தெரிவித்தார். அப்போதெல்லம் தலமை ஆசிரியர் கூப்பிடுவது என்பது மிக பயமுறுத்தும் விஷயம். பாராட்டுவதாக இருந்தால்  வகுப்பின் நடுவில் கூப்பிட்டு பாராட்ட மாட்டர்கள் என்பது எல்லொரும் அறிந்ததே.எனக்கு எப்படி எதிர்கொள்வது இந்த விஷயத்தை என்று இருந்தது.
சமாளித்துக்கொன்டு தலைமையசிரியர் அறையை நோக்கிப்பொனேன். அங்கே தலைமை ஆசிரியர் மற்றும் ஒருகுமாஸ்தா தபால்காரர் மூன்று பெரும் என் வருகைக்காக  காத்திருந்தனர்.எனக்கு மனதில் பயம். ஆனலும் நாம் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையும் இருந்தாலும் இந்த மதிரி ஒரு சூழ்னிலை புதிது ஆகையால் பதற்றமக இருந்ததது.
தலைமை ஆசிரியர் என்னைக்கன்டதும் உனக்கு எத்தனை அண்ணன்கள் என்று இயல்பாகக்கேட்டார்கள். எனக்கு உண்மையிலே ஒரு அண்ணன் தான். எஙு உண்மையைக்கூறினேன் ஒரு அண்ணன் என்று.  பின் அண்ணான் என்ன செய்கிறார் எங்கு படிக்கிறார் போன்ற விவரங்களைக்கேட்டார்.  நானும் பயம் எதுவில்லாமல் உண்மையைக்கூறினேன். கையில் ஒரு பார்சலை எடுத்துக்காட்டி இதை அனுப்பியது யார் என்றும் உனக்கு இன்று பிறந்த நாளா என்றும் கேள்விக்கணைகளைத்தொடுத்தார். பார்சலை வாங்கிப்பார்த்த நான் அதன் மேல் இருந்த முகவரியைப்பர்த்தவுடன் தெம்பாகிவிட்டென்.அது எனது பெரியப்பா பிள்ளை (அண்ணன்முறைதான்) அனுப்பிய பார்செல்தான்.பிறந்த நாளுக்காக நினைவு வைத்துக்கொன்டு என் அண்ணன் எனக்கு அனுப்பிய பரிசை சரியாக பிறந்த நாள் அன்று நான் என் கையால் வாங்கிக்கொள்ள வெண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் என்பள்ளி விலாசத்துக்கே அவர் அனுப்பிய பரிசு இன்னொரு நல்ல எண்ணம் கொண்ட என் தலைமை ஆ சிரியரின் கைகளில் மாட்டிக்கொன்டு என்னைப்பார்த்து சிரித்தது.பள்ளிக்கு பரிசு வருகிறதா உன் அப்பவிடம் பேசிக்கொள்கிறேன் என்று மிரட்டி விட்டுச்சென்றார் போஸ்டு மேன்.தலைமை ஆசிரியருக்கு என்னைப்பற்றி மிக நல்ல அபிப்பிராயம்.இருந்தாலும் இதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம்.போஸ்டுமேனுக்கு நல்ல குடும்பப்பெண் எந்த தவறுகளிலும் மாட்டிக்கொள்ளக்கூடது என்ற நல்ல எண்ணம்தான். நிறைய பெருடைய நல்ல எண்ணங்கள் என் பிறந்த நாளில் வெளிப்பட்டது என்னை பயப்படுத்தியது என்னவோ உண்மைதான்

Advertisements

3 பதில்கள் to “பள்ளிப் பருவம்”

 1. பள்ளியில் தலைமையாசிரியர் கூப்பிட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்வது இயல்புதான்.
  சம்பவத்தை அழகாக விவரித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

 2. kadugu said

  நம்மை 4 பேர் கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வாலேயே தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. இப்போதெல்லாம் அந்த உணர்வு பெரும்பாலும் யாருக்குமே கிடையாது. கடற்கரை பக்கம் போனால் வரம்புமீறல்கள், சாலை ஓரத்தில் நின்று பணம் பறிக்கும் போக்குவரத்து காவலர், வீட்டுக்கு பக்கத்து டீக்கடையிலேயே புகை பிடிக்கும் மாணவர்கள்........

  கடுகு

 3. தவறுகள் நியாயப்படுத்தப்படாத காலங்கள் என்றும் கூறலாமோ?இந்த அளவு குடும்பத்தில் தனி மனித உரிமை பேசப்படவில்லையோ? வளருகின்ற‌ சூழ்னிலையோ? இப்படி பல காரணங்கள்தான் நம்மை உருவாக்கி உள்ளன என்று தோன்றுகிறது.
  நன்றி கடுகு!வருகைக்கும் கருத்துக்கும்!
  அன்புடன்
  கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: