Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

எங்கிருந்தாலும் வாழ்க!

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 26, 2007


 

நான் இரன்டு வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா போகும் சந்தர்பம் கிடைத்தது.அங்கு சில காலம் தங்கி இருந்தேன். ஆஸ்திரேலியா ஆங்கிலேயர்களின் பாதிப்புபு மிக்க நாடு.பல நாடிகளிலிருந்தும் பல் வேறுதுறையைச் சேர்ந்தவர்கள் அங்கு குடியுரிமை பெற்று வாழ்வதால் பல நாட்டு மக்களைக்கொன்ட ஒரு சமுதாயம் அங்கு இருக்கும். நம் நாட்டிலிருந்து பழக்கவழக்கங்கள், உணவு முறை, உடைகள் ,கலசாரம், மொழி சீதொஷ்ண நிலை என்று எல்லா விதத்திலும் மாறு பட்ட ஒரு நாடு.

நான் சென்றிருந்தது மெல்போர்ன் நகரம்.தமிழ் நாட்டில் ஊட்டி பொல மெல்போர்ன் நகரமும் குளிர் மிக்க‌ நகரம்.முதலில் எனக்கு கொஞச‌ம் குழப்பமாகவே இருந்தது.போகப்போகப் பழகி விட்டது.

நான் ஒரு நாள் அங்கு இருக்கும் ஒரு பல்பொருள்சிற‌ப்பு அங்காடிக்குப் போயிருந்தேன். அங்கு தள்ளுபடி விலைப் பிரிவில் இருந்த பொருட்களை பார்வையிட்டுக்கொன்டு இருந்தேன்.என் கையில் ஒரு எவெர்சில்வர் கறிவடிகட்டி வைத்திருந்தேன்.அங்கு வந்த ஒரு ஆங்கிலேயர் ஒருவர் என்னைப்பார்த்து என்ன கறி பண்ணப்போகிறீர்கள் வென்டைக்காயா அல்லது கத்தரிக்காயா என்று நட்புடன் ஆங்கிலத்தில் விசாரித்தார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாகப்போய் விட்டது.என் புடவையையும் என் நடை உடை பாவனைகளையும் வைத்து என்னை அவர் இனம் கண்டு கொண்டது வியப்பாகவே இருந்தது.

நான் என் வீட்டுக் குழந்தைகளுடன் அடிக்கடி அங்கு இருக்கும் பூங்கா ஒன்றுக்கு போவது வழக்கம்.ஒரு நாள் அப்படிப் போகும்போது ஒரு இந்தொனிஷியப்பெண்ணை சந்தித்தேன். அவளும், அவளுடைய குழந்தைகளுடன் விளையாட வந்திருந்தாள்.அவள் என்னுடன் பேசிக்கொண்டிருக்க அவள் குழந்தைகள் விளையடிக்கொன்டிருந்தனர்.மணி சரியாக 5/30ஆனதும் அவள் பரப்பாக வீட்டுக்குப்போக வேன்டும் என கிளம்பினாள். நான் இவ்வளவு நேரம் பேசிக்கொன்டிருந்த அந்தப்பெண் இப்போது ஏன் அவசரப்படுகிறாள் என்று எண்ணி அவளையே கேட்டேன். அவள் என் கணவர் வீடு திரும்புகிற நேரம். அவரிடம் வீட்டு சாவி இல்லை. என்னிடம் உள்ளது என்று கூறினாள். நான் அவளிடம் நீ என்ன படிப்பு படித்திருக்கிறாய் என்று கேட்டேன். அவள் முதுனிலை பொருளதாரம் படித்திருப்பதாகக் கூறினாள்.வேலைக்குப்பொக வில்லையா என்று சாதாரணமாக‌ விசாரித்தேன்.தானும் வேலைக்குப் போனால் வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகள் படிப்பு என்று எவ்வளவோ வேலைகள் பார்ப்பதற்கு கஷ்டமாயிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தாள். என் முன்னே நின்றது ஒரு படித்த, ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு பெண்ணாக க‌ண்ணுக்குத்

தெரியவில்லை.

சுயந‌லமில்லாத தான் என்ற மமதை இல்லாத நல்ல ஒரு மனைவியும் பொறுப்பான ஒரு குடும்பத்தலைவியும் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.என்னுடன் பேசிவிட்டு அவசரம் அவசரமாக தன் இரன்டு குழந்தைகளையும் கையைப்பிடித்து அழைத்துக்கொன்டு வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணை என்னால் மறக்கவே முடியவில்லை

Advertisements

7 பதில்கள் to “எங்கிருந்தாலும் வாழ்க!”

 1. அடுத்த முறை வரும் போது, மறக்காமல் எங்க வீட்டுக்கும் வரவும் 🙂

 2. உங்கள் சிறுகதையைப் படித்தென். மிக அழகாக நல்ல ஈழத்தமிழில் எழுதியிக்கிறீர்கள். ஆனால் அது கதையல்ல ஒரு குடும்பத்தின் சரித்திரம்.எனக்கு பல ஈழத்தமிழர்களைத் தெரியும். பல ஈழத்தமிழர்கள் எண்பதுகளில் இந்தியாவிலும் குடியேறினார்கள்.அதில் அறிமுகமாகி இப்போது நல்ல நிலமையில் ஆஸ்திரெலியாவின் பெர்த் நகரில்வாழும் திருமதி சாந்தா ஜெயராஜ் அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
  அவர்கள் மூலம் ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளின் தீவிரத்தை நான் அறிவேன்.கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைத்திறப்பார் என்பதற்கேற்ப உங்களுக்கெல்லம் தைரியம் என்ற கதவை கடவுள் திறந்து விட்டார்.
  நிச்சயம் அடுத்த முறை மெல்போர்ன் வரும்போது உங்களைச்சந்திக்கிறேன்.
  அன்புடன்
  கமலா

 3. Priya said

  சில நல்ல விஷயங்களைக் காதுக் கொடுத்து கேக்கும் போது நாமும் அதே விசயங்களை செய்வோம்.இன்றைய வாழ்க்கை முறையை ஒப்பிடும் போது என் தோழிகள் பலரும் (ஏன் ஒரு சில நேரங்களில் நானும் கூட தான்) நல்ல வேலை கை நிறைய சம்பளத்தை விட யாரும் தயாராக இல்லை.அது மட்டும் இல்லாமல் புகுந்த வீட்டில் மரியாதை இருக்காது என்பது மாதிரியும் நினைக்கிறார்கள்.இன்னும் ஒரு சில படிகள் மேலே போய் Settle (இருக்க ஒரு வீடு,கார் ,இன்ன பிற) ஆன பிறகு தான் குழந்தை என்னும் திட்டமுடன் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்பதில் தான் பிரச்சனையே. காசு,பணம் சேர்ப்பதில் குறியாய் இருக்கும் நாம் குடும்பம் ,சந்தோஷசம் என பலதைத் தொலைத்துவிட்டோம்.

  நல்ல பதிவு.பலர் இதை உணர்ந்தால் சரி தான்

 4. திருமணம் என்பது ரொம்பவும் அனுசரித்துப்போக வேன்டிய ஒரு விஷயம்தான். ஒத்துக்கொள்கிறேன். காலம் மாறுகிறது. பெண்கள் படித்து விட்டர்கள். ஆண்களும் தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேன்டும்.பெண்களும் புரிந்து கொள்ள வேன்டும்.வசதிகளைப் பெருக்கிகொள்ள வேலைக்குப்போகிறறேன் என்கிறீர்கள். எல்லாம் சரிதான்.ஆனால் பிரச்சினை என்று வந்தால் வக்கீல்களை விட போலீசை விட மாமனார் மாமியார் மற்ற உறவினர்களை மதிக்கப் பழகலாம்.எந்தப் ப்ரச்சினையுமே விரைவில் வந்து விடும். ஆனால் போவது மெதுவாகத்தான் போகும். அதை வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு எடுத்துச்சொல்லவென்டும்.திருமணம் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. இரன்டு குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் வாழ்க்கை.இதை மனதில் வைத்துக்கொன்டு வாழவும் மற்றவர்களுக்கும் சொல்லவும்.இப்படி நினைத்து நாங்கள் கொடுத்த விலை நிறையவே இந்த குடும்பத்தைக் காப்பதற்கு.

 5. soundr said

  m.phil paditha yen manaiviyai naan vaelaiku sella anumathikkaathathu, ithanaal thaan. [i know i’m commented as a male chauvinist in my back for this]
  i dont want her being a staff to someone
  but a queen of my humble family.
  a worthy post, that could be hardly frequented in blogs.
  a must go through for everyone about to get married and just married.

 6. ஓஒ!அப்படி நினைக்கிறீற்களா? உங்கள் மனைவி ஒத்துப் போனால் வீடு சொக்கம்தான்!
  கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: