Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for ஒக்ரோபர், 2007

ஊரெங்கும் தீபாவளி

Posted by kalyanakamala மேல் ஒக்ரோபர் 31, 2007

தீபாவளி சமயம். யாரைப்பர்த்தாலும் துணிகள் வாங்குவது பற்றிப் பேசுகிறார்கள்.வீட்டில் நானும் என‌து கணவரும் மட்டும்.என்ன துணி வாங்குவது?எங்க‌ளுக்கு எல்லாம் பார்த்து ச‌லித்து விட்ட‌து.
          நான் ம‌ட்டும் க‌டைத்தெரு ப‌க்க‌ம் போனேன்.ஒரெ கூட்ட‌ம். ம‌க்க‌ள் கூட்ட‌ம் தாங்க‌வில்லை. புட‌வைக்க‌டையில் ஒரு த‌ம்பதி தன் இரு பிள்ளைகளோடு துணியெடுக்க வந்திருந்தனர்.ஒரு புடவை தேர்ந்தெடுத்து என்னிடம் அதைப்பற்றி கருத்து கேட்டனர். நன்றாகவேயிருந்தது புடவை. நல்லா இருக்கு என்று சொன்னேன். அவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் சந்தோஷ‌ம்.மிக‌வும் ஈடுபாட்டோடு புட‌வை செல‌க்ஷ‌ன் செய்தார்க‌ள்.அடுத்து ஒரு ந‌டுத்த‌ர‌ வ‌ய‌து பெண். ம‌ண‌மான‌வரா‌ இல்லையா‌என்று தெரிய‌வில்லை சுமார் இரன்டு மணி நேரம் இரன்டு புடவை தேர்வு செய்தார். என்னொடு கலந்தாலோசனை பண்ணி ரொம்ப பழகினவர் போல நடந்து கொன்டார்.இப்படி ரொம்ப மும்முரமாக புடவை நான் வாங்கி ரொம்ப காலமாகி விட்டது.சின்ன வயதில் என் அண்ணன் ஏதோ மலிவான விலையில் பாவடை வாங்கிவிட அதைக்கட்ட மறுத்து அழுது அடம் பிடித்து அப்பா பட்டுப்பாவடை வாங்கி வந்து சர்பிரைசாகத் தந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி நாள்.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் ஒரு முறை தீபாவளிக்கு புடவை எடுத்து வந்த நிகழ்வு மனதில் ஒட விட்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.அப்போது நான் என் மகளை வயிற்றில் சுமந்து கொன்டிருந்தேன். ஐந்து மாதம்.என் மகனுக்கு இரன்டரை வயது. நானும் என்கணவரும் கடைக்குப்போனோம்.எனக்கு அப்போது பத்தொன்பது வயதிருக்கும்.என் கணவர் அலுவலகத்தில் தீபவளிக்கு நான்கு நாள் முன்னால் போனஸ் கொடுத்தாலே பெரிய விஷயம்.சம்பளத்தில்  துணி வாங்கி விட்டு அட்ஜஸ்ட் பண்ணுகிற நாட்களும் உன்டு.அப்போது என்ன பண்ணினோம் என்று நினைவில்லை.சம்பளமா போனசா என்று நினைவில்லை.ஊதாப்பூ கலரில் கட்டம் போட்ட பட்டுப்புடவை ஒன்றை தேர்வு செய்து எடுத்து வந்தோம்.உலகமே மிக மகிழ்ச்சியாக இருப்பதாகப்பட்டது.அந்தப் புடவைக்கு ஏற்றார்போல் கண்ணாடி வளையல்கள், பொட்டு என்று வாங்கி அணிந்த அந்த தீபாவளியில் கிடைத்த சந்தோஷம் தனிதான்.
        பிறகு குழந்தைகள் தீபாவளியை மிக மகிழ்ச்சியாக பல வருடங்கள் கொண்
டாடினார்கள்.அவர்களுக்காகவே வாழ்ந்த நாட்கள். பிள்ளைகள் தீபாவளியை மிகவும் ஆவலாக எதிர் பார்ப்பார்கள். இனிப்பு காரம் செய்வதற்கு, அவர்களே என்னென்ன செய்யவெண்டும் என்று முடிவு செய்வார்கள்.பால் கேக் செய் என்று பெண்ணும், அம்மா குலப்ஜாமூன் செய்யேன் என்று பிள்ளையும் மிக்சர் செய்து விடு என்று கணவரும் மிக எதிர் பார்ப்போடு சொல்வார்கள். முதல் நாள் கணவர் உருளைக்கிழங்கு வாங்கிவர சிப்ஸ் செய்யும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு கொள்வார்கள்.ஐந்து கிலோ உருளைக்கிழங்கை
கழுவி சீவி திரும்பவும் கழுவி என் பிள்ளையும் பெண்ணும் உதவி செய்ய செய்திதாள்களில் பரப்பிக்காய வைத்து ஈரம் உலர்ந்ததும் எடுத்து எண்ணையில் போட்டு வறுத்து எடுத்து ஒரு பெரிய டப்பா நிறைய நிரப்பிப் பார்ப்பதில் கன்ட ஆனந்தமே தனிதான்.
தீபாவளி அன்று என் பிள்ளை 4 மணிக்கு முன்னே பட்டாசுச் சத்தம் கேட்டு எழுந்து அம்மா தீவாளி வந்து விட்டது என்று வெகுளித்தனமாகக் கூறுவது மிக மகிழ்ச்சி அளிக்கும். எழுந்து அனைவரும் குடும்பமாகக் கூடி எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பட்டாசு விட்டு மகிழ்வது எல்லாம் திரும்ப வராத நாட்கள் என்று அப்போது தெரியவில்லை.
நினைவுகளில் இனிக்கும் அந்த தீபாவளியை அவர்கள் தங்கள் குழந்தைகளோடு கொன்டாடட்டும். நாம் அதைப்பார்த்து ரசிப்போம்.

Advertisements

Posted in Uncategorized | 5 Comments »

Posted by kalyanakamala மேல் ஒக்ரோபர் 25, 2007

1965 ஆம் வருடம்.ஹிந்தி எதிர்ப்பு தீவிரமாக‌ இருந்தது.பள்ளியில் எங்கள் தமிழாசிரியர் தினமும் மூளைச்சலவை செய்து கொன்டிருந்த நாட்கள்.(சலவை செய்யாவிட்டாலும் வெள்ளையாகவே இருந்தது மூளை)படிப்பு தவிர எதுவுமே தெரியாத நாட்கள்.தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது.

தொலை பேசியும் கிடையது.ிகவும் எளிமையான காலம். மின் விசிறிகூட பகல் வேளையில் உபயோகித்ததில்லை. இன்றைய குழந்தைகள் படித்தால் சிரிப்பர்கள்.

காலையில் ஆறு மணிக்கு மேல் ஒரு நாள் கூட எழுந்தது கிடையாது.காலையில் எழுந்து அண்ண‌ன் ,தம்பி,தங்கை,படிப்பு தவிர வேறு எதிலும் மனது சிதறாத நாட்கள்.தினசரிகளைப் பார்த்து தெரிந்து கொன்ட வெளியுலகத் தகவல்கள். எதிர் காலத்தில் என்னவாகப் போகிறாய் என்று யாராவது கேட்டால் அரசியல்வாதியாகப் போகிறேன் என்று நேரு,காந்தி, காமராசர், அண்ணாவை நினைத்துக்கூறும் வெள்ளையான பதில்.பள்ளியின் இலக்கியக் கூட்டங்களில் போடு போடென்று போட்டு எல்லொர் மனதையும் கவர்ந்த நாட்கள்.

அப்பா கொடுத்த‌ நானூறு ரூபாயில் ஒரு மாத காலம் ஓட்டி (ஏழு பேர் சாப்பாடு சாப்பிட்டு ,வீட்டு செலவுகள் செய்து ,இரன்டு பசு மடுகளை பராமரித்துத் தெரிந்துகொன்ட பொருளாதாரம். தெரு முனையில் முனிசிபாலிடிக்கார‌ர்க‌ள் காட்டிய‌ செய்திப்ப‌ட‌ தொகுப்பைப் பார்த்துத் தெரிந்து கொன்ட‌ சுய‌ சுகாதார‌ம்.

வீட்டுக்கு வந்த உற‌வின‌ரை அம்மா‌ அப்பாவுட‌ன் உப‌ச‌ரித்து, பெரியம்மா‌ தலைவாரிப் பூச்சூட்டிவிட சித்தி இனிப்பு செய்து பரிவொடு கொடுக்க ,நாங்கள் அவர்களுக்கு ஏகப்பட்ட அன்பைப் பரிசாக அளிக்க வீடு கொண்டாட்டமாயிருக்கும்.அம்மா சமைக்க வேன்டுமெ என்று முகம் சுளிக்க மாட்டள். அப்பா செலவாகிறதேயென்று முணுமுணுக்க மாட்டார்.உறவுகள் இனிப்பாயிறுந்த காலம். ஒருவருக்கொருவர் நல்லது கெட்டதுகளைப் பெரியவர்கள் பறிமாரிக்கொண்டனர்.ஆலோசனைகள் இலவசமாகக் கிடைத்த காலம். மனித வளமேம்பாடு க‌ற்றுக்கொடுக்க தனியாக‌ தொழில் முனைவோர் தேவையில்லாமல் இருந்தது.

உணவே மருந்தாய் மருந்தே உணவாய் இருந்த காலம்.எவ்வளவுதான் இருந்தாலும் காலையில் சர்க்கரை குறைவான பால்தான்.பிறகு பழைய சோற்றில் தயிர் கலந்து ஊறுகாயுடன் சாப்பிடுவோம். ஊறுகாய்கள் பருவத்துக்கேற்ப மாறும். மாங்காய், இஞ்சி, குடமிளகாய், நெல்லிக்காய் என்று. கீரையும் பச்சடியும் இல்லாமல் சாப்பாடு கிடையாது . பச்சடிகள் ஏராளமான வகைகள்,விளாம்பழம், மாங்காய்,வெள்ளெரிக்காய் என்று. இரவு ஏழு மணிக்கு சாப்பாடு முடிந்து விடும் .ஒன்பது மணிக்கு அனேகமாகத் தூங்கியிருப்போம்.

கூடப்பிறந்தவர்களிடம் நமக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதை விட ஒரு பேரின்பம் உலகில் இருக்க முடியாது.வீட்டில் ஒருவர் இல்லையென்றாலும் ஒரு மாம்பழமாக இருந்தாலும் அவருக்குள்ள பங்கு எடுத்து வைகக்கப்படும்.கிடைகாத சமாசாரம் ஒன்றுமில்லை யென்று எடுத்து வைக்காமல் சாப்பிடும் பழக்கம் இருந்ததில்லை.

மருத்துவரிடம் போகாத பல வருடங்கள். வீட்டு வைத்தியத்திலேயே பிள்ளை பெற்ற காலங்கள்.பிள்ளை பெற்ற காலத்தில் ஆங்கில மருந்து ஒன்று கூட உண்டதில்லை.கால்ஷியம் மாத்திரைகளை கண்ணால் கூடப்பார்த்ததில்லை.மல்டி வைடமின்களை கண்ணால் கூடப்பார்த்ததில்லை. சொன்னால் நம்பக்கூட ஆளில்லை இப்போது.உணவுக்கட்டுப்படு மிக அவசியம். நெய் இல்லாமல் உணவு சாப்பிடும் பழக்கம் இல்லை ஆனால் இரன்டு ஸ்பூனுக்கு மேல் நெய் ஊற்றிக்கொண்டதில்லை. ஆனால் பிள்ளை பேற்றின் போது கை நிறைய நெய் ஊற்றி குடிக்கக்கொடுப்பார்கள்.பிள்ளைக்குத் தவறாமல் பால் கொடுத்ததாலொ என்னமோ வயிறும் இடுப்பும் வீங்கிப்பொகவில்லை.

சுக்கும் திப்பிலியுமே மருந்து.பிள்ளை பெற்ற வீட்டில் யாரையும் பிள்ளை யிருக்கும் அறைக்குள் அனுமதிப்பதில்லை.தொற்று நொய்கள் வர வாய்ப்பில்லை.

இப்படி ஒழுக்கம் ,அரசியல்,சுகாதாரம், பொருளாதாரம்,உணவுப்பழக்கம்,உடல் நலம், மன வளம் எல்லாம் கற்றுத்தரும் ஒரு வாழ்க்கை நம் அடுத்த தலை முறையினருக்கு கிடைக்குமா?

Posted in Uncategorized | Leave a Comment »

Posted by kalyanakamala மேல் ஒக்ரோபர் 25, 2007

நெல்லிக்காய்களை  சென்னை மாம்பலம் கடை வீதிகளில் பார்க்கும்போதெலாம் வாங்க வேண்டும் என்று தோன்றும்.ஆனால் வாங்கி கடுகு தாளித்து கடாயிலிட்டு வதக்கும் விதத்தை நினைத்தால் அதன் சத்து போவதாக நினைத்து உயிரே போவது போல் வலிக்கும்.அந்த அளவு நெல்லிக்காயின் உயிர்ச்சத்தை நான் நேசித்தேன்.அப்பிடியே சாப்பிடலாம் என்றால் புளிக்குமோ என்று பயமாக இருக்கும். அன்று பிடிவாதமாக வாங்கி வந்தேன் அந்த அருமை நெல்லிக்கனியை.அதன் மேல் பெரிய புத்தகம் தைக்கும் ஊசியால் பலமுறை குத்தினேன். பேரிச்ச‌ம்பழ சிரப்பில் ஊற வைத்தேன்.மறுநாள் நெல்லிக்காய் சாப்பிட்டேன். கொஞ்சம் ஊறி இருந்தது. அப்புறம் நன்றாகவே ஊறிவிட்டது.இப்பொதெல்லாம் நெல்லிக்காய் சீசனில் நெல்லிக்காய் தினமும் ஒன்று உணவாய் ஆனது.

Posted in பொது, Uncategorized | 1 Comment »

Posted by kalyanakamala மேல் ஒக்ரோபர் 3, 2007

கடவுள் இல்லை. இல்லவே இல்லை என கூவும் ந்.வரதராஜன் அவர்களே!தலித்துக்களை ஏன் கோவிலுக்குள் அழைத்துச்செல்லுகிறிர்கள். ஏதாவது வேண்டுதலா?முதலில் அவர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கள்.அவர்கள் உழைக்கட்டும் ,படிக்கட்டும் ,வேலைக்குப் போகட்டும். நன்றாக வாழட்டும்.‌
கோவிலில் போய் என்ன செய்யப்பொகிறார்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத உங்கள் தலைமையிலான தலித்துக்கள்?

 ந‌.வரதராஜன் கோவில் ப்ரவெசம் தலித்துக்களுடன்‍‍…….இந்து பத்திரிக்கை செய்தி…….

Posted in Uncategorized | 1 Comment »

நாளைய முதியோர்

Posted by kalyanakamala மேல் ஒக்ரோபர் 1, 2007

இன்று முதியோர் தினமாம்.முதியோர் தினத்தில் முதியோர் இல்லத்துக்குப்போய் ஏதாவது இனிப்பு காரம் அல்லது புடவை வேட்டி என்று கொடுத்து விட்டு வரலாம் என்றுயோசனை. பின்னால் நம் பிள்ளைக்குத் தெரிய வேன்டாமா முதியோருக்கு என்ன செய்யவேன்டும் என்று? வீட்டு முதியோர் என்ன ஆனார்கள் என்று கேட்கிறீர்களா? அவர்களை ஏலம் விட்டுக்கொனண்டிருக்கிறோம். பின் விளைவுகளுக்கு ரெடி!

Posted in Uncategorized | 1 Comment »