Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

ஆஸ்திரேலியாவில் மைசூர்பாக்

Posted by kalyanakamala மேல் நவம்பர் 5, 2007


இந்த மைசூர்பாக்கை பதிவில் பார்த்ததும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. எனக்கும் இந்த மைசூர்பாக் செய்ய மிக நன்றாக வரும். கடந்த பல வருடங்களாக இதை ஒரு சாதனையாகவே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.சர்க்கரை பாகுடன் ஒரு கரன்டி நெய் ஊற்றிப்பாருங்கள், நெய் வாசனை இன்னும் தூக்கும். நெய்யை சுடாக்கி கலவையைக் கிளரும்போதுஊற்றுவது கொஞ்சம்ம் கொஞ்ச‌மாக சேர்ப்பது மைசூர்பாக்கை சற்று சிவக்க வைத்து மண‌க்க வைக்கும்.
நான் ஆஸ்திரேலியா போனபோது  நான் செய்த மைசுர்பாக்கைப் பார்த்தவுடன் என் பெண் நீ இங்கு ஒரு நல்ல இந்திய ஸ்வீட் கடையில் பகுதி நேரவேலை செய் அம்மா உனக்கு டாலரில் சம்பாதிக்கும் திறமை உள்ளது என்று சொன்னாள். ஆஸ்திரேலியாவில் சமயல் கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு. நளதமயந்தி படம் வந்து சில காலமே ஆகியிருந்த காலம். நானும் உற்சாகத்துடனும் மனதில் பல கனவுகளுடனும்(டாலர் கனவுகள் வண்ணவண்ணமாய் பொன்மகள் வந்தால் பொருள் கோடி த‌ந்தாள் டைப்பில்)பல டெக்னிக்குகளைக் கையாண்டு மிக ருசியான ஒரு மைசூர்பாக்கைத் தயாரித்து, மாதிரி காட்டுவதற்குத் தயார் பண்ணினேன்.என் பெண் பல கடைகளுக்குப் போன் செய்து மைசுர்பாக் செய்ய ஆள் தேவையா என்று விசாரித்தாள்.
இடைஇடையில் எனக்கு தொழிலில் பேதம் கிடையாது என்றும் எந்தத் தொழிலும் உயர்வு தாழ்வு இல்லை என்றும், எதையும் நேர்மையாகச் செய்து முன்னெற முடியும் என்றும் ஓயாமல் அட்வைஸ்.கடைசியில் ஒரு கடைக்காரர் இன்னும் சில ஸ்வீட்டுகள் பெயரைச் சொல்லி அவைகளைச் செய்யத்தெரியுமா? என்று கேட்டார். தெரியுமென்று பதில் கூறி செய்து வைத்திருந்த மைசூர்பாக்கை எடுத்துக்கொன்டு நானும் என் பெண்ணும் (அப்போதெ கணக்குப் பார்க்கத் தொடங்கிவிட்டோம் ஆகையால் காரில் போகவில்லை)பஸ் பிடித்து ரயில்வேஸ்டேஷன் போய், அங்கிருந்து ரயிலில் நடுவில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் பிளாட் பாரம் மாறி, மற்றொரு ட்ரெயின் பிடித்து வேறொரு இடத்துக்குப்போய் அங்கிருந்து நடந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து போய் அந்தக் கடையைப் பிடித்தோம். அக்கடைக்கரருக்கு எங்கள் மைசுர்பாகை மிகவும் பிடித்து விட்டது.மற்ற ஸ்வீட்டுகளைப் பற்றியும் நேர் முகத்தேர்வு நடதிவிட்டு என்னை (ஒரு மணி நேரத்துக்கு 10 டாலர் தருவதாகக்கூறி)ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை தருவதாகக்கூறி தேர்வு செய்தார்  ஒரு கன்டிஷனுடன். யாராவது ஹெல்த் இன்ஸ்பெக்டர்  என்னைப்பிடித்தால் நாங்கள் எங்களுக்கு உங்களை தெரியாது என்று கூறி விடுவோம் என்பதே அந்தக்கன்டிஷன்.  நாங்களும் வெளி நாட்டில் ஒரு வேலை எப்படியும் பிடித்து விடுவது என்று வெறியுடன் ஒத்துக்கொன்டு வந்து விட்டோம்.ஒரே மழை பிடித்துக்கொன்டு திரும்பி வரும்பொழுது இருட்டி விட்டதால் வீட்டில் எல்லொரும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர்.எல்லொரிடமும் நாங்கள் வேலை பிடித்து விட்டதையும் கடைக்காரர் எங்களுடைய மைசூர்பாக்கைக் கன்டு மயங்கி நின்ற காட்சியையும் விவரித்து அன்று யாரும் கோபப்படாமல் செய்து விட்டோம்.
என் மருமகன் மிக நல்ல பதவியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருப்பவர். எனக்கு அவர் எதிரே இதெல்லாம் பேசவே மிகக் கஷ்டமாக இருக்கும். என் மகள் ரொம்ப தைரியமானவள் போல பேசிக்கொன்டிருப்பாள்.
அன்று இரவு நானும் என் பெண்ணும் போகவர சிலவு மற்றும் சம்பளம் எல்லாம் கணக்குப் பார்த்தோம். நேரமும் சுமர்ர் 4மணி நேரம் பிரயாணத்திலேயே கழிந்திருந்தது.கூட்டிக் கழித்துப்பர்த்தால் 8 மணி நேரம் செலவழித்தால் (அதுவும் தனியாக நான் புது நாட்டில்)10டாலர் மிஞ்சியது.அப்போதுதான் அந்த ஊருக்குப்பொயிருந்ததால் ஊரும் பழகியிருக்கவில்லை.எங்கு பார்த்தாலும் எஸ்கலேட்டர்கள் .தனியாகப்போகவே கஷ்டமாயிருக்கும்போல் தோன்றியது.குளிர் மழை இதெல்லாம் வேறு பயமுறுத்தியது.மறு  நாள் எழுந்து வேலைக்குப்பொவதைப்பற்றிப் பேசவேயில்லை நான்.10டாலர் மிக நல்ல பணம் (ஆனால் அருகிலேயே எதாவது ஒரு ஸ்வீட் கடையில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்) என்று எதேதோ என் பெண் சொல்லிக்கொன்டிருந்தாள்.
அம்மா தாயே என்னை விடு எனக்கு டாலரும் வேன்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டேன். பேரப்பிள்ளைகளுடன் காலத்தைக்கழித்து விட்டு திரும்ப சென்னை வந்து சேர்ந்தேன்.மைசூர்பாக் என்றாலே எனக்கு இந்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

Advertisements

ஒரு பதில் to “ஆஸ்திரேலியாவில் மைசூர்பாக்”

  1. Google

    Google is the best search engine Google

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: