Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

கடவுள் சாப்பிட்டாரா?

Posted by kalyanakamala மேல் நவம்பர் 6, 2007


திருவிழாவில் சாமிக்கு படையல்…
                விதவிதமாய் பண்டம் பலகாரங்களின் அணிவகுப்பு….
                சாமி சாப்பிடமாட்டாரென்ற தைரியத்தில்.

 சாமி சாப்பிடுகிறார் என்பதை நீங்கள் உணரவில்லை.அப்படி கடவுளுக்கு விழா எடுத்து படையல் போட்டு  நாம் சாப்பிடும் சாப்பாட்டை சாமிதான் சாப்பிடுகிறார், நிச்சயயமாக அசுரன் சாப்பிடவில்லை. நமக்குள் அசுரனும் இருக்கிறான் சாமியும் இருக்கிறார். இப்படி படையல் போட்டு அல்லது ஏதாவது பூசை மனதாரப்போட்டு பக்தியுடன் சாப்பிட்டுப்பாருங்கள் . சாமி சாப்பிடுவது தெரியும்.

Advertisements

4 பதில்கள் to “கடவுள் சாப்பிட்டாரா?”

  1. கடவுளுக்கு விழா எடுத்து படையல் போட்டு நாம் சாப்பிடும் சாப்பாட்டை சாமிதான் சாப்பிடுகிறார், நிச்சயயமாக அசுரன் சாப்பிடவில்லை. நமக்குள் அசுரனும் இருக்கிறான் சாமியும் இருக்கிறார். இப்படி படையல் போட்டு அல்லது ஏதாவது பூசை மனதாரப்போட்டு பக்தியுடன் சாப்பிட்டுப்பாருங்கள் . சாமி சாப்பிடுவது தெரியும்.

    ஆஹா!!! சத்தியமான வார்த்தைகள்!

    உங்கள் அனுபவங்களை இங்கே அழகாக பதிந்து வருகிறீர்கள். மிகவும் நன்றி. தொடர்ந்து பதியவும்.

  2. எனது ஹைகூ- தங்களின் மனதை இந்த அளவு பாதிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இது யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டதும் அல்ல. நான் நாத்திக வாதியும் அல்ல. ஆனால் நிறைய இடங்களில் எதார்த்தமாக இதைத்தான் பார்க்க முடிகின்றது என்பதே உண்மை. உதாரமாக கூரமேண்டுமானால் நிறைய கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களை கவனித்துப்பாருங்கள்…
    நேற்று இராத்திரி யம்மா…பாட்டை ஓட்டிக்கொண்டிருக்கும் கிராமத்து கோவில் திருவிழாக்கள் இப்போதும் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நான் நேரடியாக பலமுறை அனுபவித்து வேதனைப்பட்டதுண்டு…

    நட்புடன்,
    மா. கலை அரசன்.

  3. அன்புள்ள கலைஅரசன்
    நான் கோபப்படவில்லை. உணர்ந்ததை எழுதுகிறேன். உங்களைப்போல் வளருகிற பிள்ளைகளுக்கு என்னைப்போல் அனுபவப்பட்டவர்கள் சொன்னால்தானே தெரியும்.
    இவ்வளவு தூரம் நீங்கள் இற‌ங்கி வந்து மன்னிப்பெல்லாம் கேட்பதற்கு ஒன்றுமேயில்லை.
    நாம் விமரிசித்துக்கொள்கிறோம் அவ்வளவுதான். அதற்கு மேல் இதில் ஒன்றும் இல்லை.உங்கள் மனதில் பட்டதை நீங்கள் சொன்னீர்கள். என் மனதில் பட்டதை நான் சொன்னேன்.விழாக்கள் இல்லாத ஒரு கிரமத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அது கிராமமாக இருக்காது. பாலைவனம்தான். விழாக்கள் மனிதனை ஒருமைப்படுத்துகின்றன. நல்லதைச் சிந்திக்கத்தூன்டுகின்றன. கலைகள் வெளிப்படுகின்றன. மனிதர்களிடைடயே இடை வெளியைக் குறைக்கின்றன. இன்னும் என்னன்னெவோ சொல்லலாம். பட்டியல் நீளும் . ஆனால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதனால் இது போதுமென நினைக்கிறேன்.
    நன்றி
    கமலா

  4. விழாக்கள் மனிதனை ஒருமைப்படுத்தத்தான், ஒருமைப்படுத்த வேண்டும் அதுதான் எனது தீராத தாகம்…
    ஆனால் இப்போதுள்ள விழாக்களில் என்ன நிகழ்கின்றது…
    சிலர் தங்களின் யுத்தகளங்களாகவும் அதிகாரத்தை மேடையேற்றும் இடமாகவல்லவா விழாக்களை பயன்படுத்துகின்றனர்.
    விழாக்கள் நமது கலைகளை வெளிப்படுத்த வேண்டும் நம் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் ஆனால் நடப்பது என்ன?…
    இதை பரிகசித்து எழுத வில்லை இரத்தக்கண்ணீர் வடித்துதான் எழுதுகின்றேன்.
    உசாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் கரகாட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்…
    அதில் கரகாட்டமா அரங்கேருகின்றது…விரசத்தை கலந்து கலையை சீரழித்துக்கொண்டு இருக்கின்றார்கள்…
    முடிந்த அளவு பாடுபடுவோம் நம்மளவில் நம் கலாச்சாரத்தை வளர்க்க பாடுபடுவோம்… முடிந்தால் ஒருசிலரையாவது உணரவைப்போம்…
    நட்புடன்
    மா. கலை அரசன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: