Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

பசித்தவயிறு

Posted by kalyanakamala மேல் நவம்பர் 20, 2007


மழை சீற்றத்துடன் அடித்தது. வீட்டுக்குள் மழைத்தண்ணிர் வாரி அடித்திருந்தது.ஊதல் காற்று சிலீரிட்டது. பிள்ளைகள் ஸ்கூல் இல்லாமல் வீட்டில் நாயர் கடை டீ குடித்து விட்டு பன் ஒன்று சாப்பிட்டு விட்டு விளையடிக்கொண்டிருந்தனர்.

 

 செல்லத்துக்கும் இந்த மழையில் இனி சூளையிலிருந்து

பஸ் பிடித்து மாம்பலம் சென்று வீட்டு வேலை செய்வது பற்றி நினைத்தாலே சோர்வாயிருந்தது.அப்படியே சுருண்டுபடுத்து ஒரு குட்டித்தூக்கம் போட‌லாமா யென்றிறுந்தது.

 

வீட்டுப் பாத்திரங்களை துலக்கி , அந்த சின்ன வீட்டைக்கூடிப் பெருக்கவே கையும் காலும் சோர்வாயின.

     கொஞ்ச நேரம் மலைத்துப்பொய் உட்கார்ந்த செல்லம் சரி இங்கு உட்கார்ந்தால் என்ன பலன். அப்புற‌ம் போதும் போதாமலிருக்கும் அரிசியை இரவுக்கு சமாளித்து காலையில் ஏதாவது ஏற்பாடு செய்து ரேஷன் வாங்கணும் என்று எண்ணிக்கொன்டே

சோற்றுப்பானையைத் திறந்து பார்த்தாள்.பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் தொட்டுக்கோ துடைச்சிக்கோ என்றிருந்தது சோறு.

 சரி இங்க உட்கார்ந்து என்ன பண்ண, வேலை செய்யும் வீட்டுக்குப் போனாலாவது அவங்க ஒரு காப்பி கொடுப்பங்க , கொஞ்சம் சோறும் சாம்பாரும் மிஞ்சினத க்கொடுப்பாங்க,இன்றைய பொழுது போகும் ” என்று மனதைத் தேற்றிக்கொண்டு,முகம் கழுவி, தலையை வாரிக்கொண்டு,சேலையை சரி செய்து சீர் செய்து கொண்டு , பஸ் பிடித்து அவள் வேலை செய்யும் ஃப்ளாட்டை அடைந்தாள்.

 அவளைக் கண்டவுடனேயே கீழ் வீட்டு சேட்டு இத்தனை மழையில் வந்து விட்டாயா என்ற சந்தோஷப் பார்வையை வீசிவிட்டு அங்கு துடை இங்கு துடை ஈரமயிருக்கிறது ,என்று வேலை வாங்க‌,எல்லா இடத்தையும் துடைத்து விட்டு வேலை செய்து முடித்து வெளியே வந்தவுடன், கதவை மூடிக்கொன்டு உள்ளே போய் விட்டார். இவரிடம் எப்பவுமே எதுவும் சாப்பிடக் கிடைக்காது என்று மனதைத்தேற்றிக்கொண்டு,சுற்றிய தலையைப் பிடித்துக்கொண்டு போர்வையாய்ப் புடவையைப்  போர்த்திக் கொன்டு மேலே ஏறி அம்மா வீட்டுக்குப்போனாள்.

 அங்கு அம்மா‌ எதிர் வீட்டில் சாவியைக் கொடுத்து விட்டு செல்ல‌ம் வந்தால் வேலை செய்ய‌ச்சொல்லுங்கள் நான் வந்து விடுவேன் என்று சொல்லி விட்டுப் போனதாக எதிர் வீட்டுப்பெண் சொல்ல ,சாவியை வாங்கி,பாத்திரங்களைத்துலக்கி விட்டு வீட்டைப்பெருக்கித் துடைத்து விட்டு கொஞ்சம் உட்கார்ந்திருந்தாள்.

 அம்மா வந்து காப்பி கொடுத்து இந்தா செல்லம் ஃப்ரிட்ஜில் சோறு  வைத்திருந்தேன்.சாம்பார் இருக்கு எடுத்து சூடு பண்ணித்தருகிறேன் என்று சொல்வது போலக்கனவுகள் வருகிற அளவுக்கு,மயக்கமாக வந்தது.

 

 ஏனோ அம்மா வரவேயில்லை. எப்பவோ ஒரு நாள்தான் அம்மா சொல்லாமல் இப்படிப்போவார்கள்.இன்றைக்கா இப்படிப்போகணும் என்று குழாயில் ஒரு தம்ளர்  தண்ணீரைப்பிடித்துக் குடித்துவிட்டு  கொட்டுகிற மழையில்  செல்லம் வீடு நோக்கிக் கிளம்பினாள்.

Advertisements

9 பதில்கள் to “பசித்தவயிறு”

 1. கதை உருக்கமாக இருந்தது.நல்ல கதை கரு அம்மா.
  இன்னும் விவரித்து எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.இன்னும் எழுத எனது வாழ்த்துக்கள்

 2. நன்றி துர்கா! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.சிறு வயதினரான உங்களுக்கு என்கதை பிடித்தது என்னை மிக்க மகிழ்ச்சி அடைய வைத்தது.
  அன்புடன்
  கமலா

 3. சத்தியராஜ் said

  வணக்கம்,

  கதை அறுமை.

  //எப்பவோ ஒரு நாள்தான் அம்மா சொல்லாமல் இப்படிப்போவார்கள்.இன்றைக்கா இப்படிப்போகணும் //

  யதார்தமான் வரிகள்,

  இன்னும் எழுத சிறியவனின் வாழ்த்துக்கள்,

  சத்தியராஜ்,

  தென் கொரியா.

 4. நன்றி சத்ய ராஜ்!
  அன்புடன்
  கமலா

 5. Aravindan said

  nalla kadhai Kamalaamma.

  MuyaRchi seydhaal innum pramaadhamaaga ezhudhalaam. 🙂

 6. நன்றி அரவிந்தன்!உங்கள் ஊக்குவித்தலில் முயற்சிக்கிறேன்.
  அன்புடன் கமலா

 7. Google

  Google is the best search engine Google

 8. soundr said

  thaakaththai yerpaduththatha yedvum padaipaaga mudiyathu yenbathu yen karuthu.
  ungal ezhuthukkal thaakaththai yerpaduthu kinrana.

 9. kamala said

  என்னைத்தாக்கிய ஒரு கருவின் விரிவுதான் உங்களைத்தாக்கியிருக்கிறது!
  நன்றி
  கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: