Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

மனம் ஒரு பொக்கிஷம்!

Posted by kalyanakamala மேல் நவம்பர் 21, 2007


மனம் கனக்கும்போது என்ன செய்யவெண்டும் என்று இன்றைய தலை முறையினரைக் கேட்டால் என்ன சொல்வர்ர்கள்?
dippression என்பார்கள்.  மனநல மருத்துவரிடம் போவார்கள். சுய பச்சாதாபத்துக் குள்ளாவார்கள்.பண‌ம் செலவழிப்பர்கள். மருந்து உட்கொள்வார்கள்.
இதெல்லாம் நிரந்தரத்தீர்வு இல்லை. டிப்ரெஷன் என்பது மனிதர்களுக்கு அடிக்கடி வருவதுதான்.

சொல்ல முடியாத துயரங்களால் தாங்கிகொள்ளமுடியாமல் வருகின்ற துயரங்களைக் குடும்பத்துடன் அங்கீகரிக்கப் பழகுங்கள்.மனம் விட்டுப்பேசுதல் , ஆறுதல் கூறுதல் ஆகியவற்றை எள்ளி நகையாடக்கூடாது. இந்தப்பழக்கம் deppression வராமல் தடுக்கும்.
என்னுடைய தங்கைக்கோ அல்லது தம்பிக்கோஅல்லது ஒரு நண்பருக்கோ கஷ்டம் என்று வாழ்க்கையில் வரும்போது, எனக்கு ஒருவர் அதற்கு நீ உதவிசெய் என்று சொல்லும்வரை நாம் காத்திருக்கக்கூடாது.  நாமே போய் செய்யவேண்டும். ஆனால் நாம் போனால், நாம் அவர்கள் பிரச்சினையில் தலையிடுவதாக நினைக்கக்கூடது,அந்த நம்பிக்கை அவர்களுக்கு இருக்க நாம் அந்த நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். ஒருவ‌ருக்கு உதவமனம் வேன்டும். பணம் தேவைஇல்லை.அந்த மனதைப் பெற்றவனே பெரும் பணக்காரன்.
           
               ஒருவருக்கு சந்தோஷம் வரும் சமயத்தில் நினைவுக்கு வருபவர்கள் சாதாரண ம‌னிதர்கள். ஆனால் கஷ்டம் வரும்போது யாரை நாம் நினைதுக்கொள்கிறோமோ அவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்பது உண்மை. கடவுளே அவ்ர்கள்தான்!

     எனக்கு சில சமயங்களில் சில பிரச்சினைகள் யார் என்ன உதவி செய்தாலும் தீர்வு காணமுடியாததாக இருக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் நான் போவது திருவண்ணாமலைக்குத்தான். ஒரு நாள் அங்கு சென்று தங்கி இயற்கையுடன் கலந்து இருப்பேன்.அந்த மாபெரும் மலையை நோக்கி பல மணி நேரங்கள் உட்கார்ந்து பார்ப்பேன். கஷ்டப்படுத்தும் விஷயத்தை இரண்டு மூன்று நாள் மறப்பேன்.

            இப்படி  மனஅழுத்ததை தவிர்ப்பேன்.முதலிலேயே கவனிக்காமல் இந்த சாதாரணமன அழுத்தம் பெறிய நோயாக மாறும் வரை விடாமல் அவ்வப்போது தீர்வு கொள்ளப் பழகிக்கொள்ளவெண்டும். கஷடமான நிலை பூரணமாக மாறியவுடன்தான் என்னால் அதை மறக்க முடியும் என்று நினைத்தால் அது விபரீதமாகத்தான் முடியும்.
உடம்பை எவ்வளவு பத்திரமாகப்பார்த்துக்கொள்கிறோமொ அதேபோல் மனதையும் வலி முற்றாமல் பார்த்துகொள்வது மிக அவசியம்.உடல் எடையைக்குறைக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியைக்கூட மனநலனுக்கு செயவதில்லை பலர்.மனதை ஆரோக்யமாக வைப்பது என்பது ஒரு கலை.   

Advertisements

3 பதில்கள் to “மனம் ஒரு பொக்கிஷம்!”

 1. சத்தியராஜ் said

  //
  ஒருவருக்கு சந்தோஷம் வரும் சமயத்தில் நினைவுக்கு வருபவர்கள் சாதாரண ம‌னிதர்கள். ஆனால் கஷ்டம் வரும்போது யாரை நாம் நினைதுக்கொள்கிறோமோ அவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்பது உண்மை. கடவுளே அவ்ர்கள்தான்!
  //

  உண்மையான யதார்தம்

 2. நன்றி சத்ய ராஜ்!
  பிறருக்கு உதவ எல்லோருக்கும் தோன்றுவதில்லை. நமக்கென்ன வந்தது என்று போகும் போக்குத்தான் அதிகமாக இருந்து வருகிறது.ஆனால் காலத்தில் செய்த உதவி ஞாலத்திலும் பெரியது அல்லவா? இதைத்தான் இப்படி எழுதத்தொன்றியது. எல்லாம் அனுபவம் சொன்ன பாடங்கள்தான்.
  பதிவுக்கு வருகைதந்தமைக்கும் கருத்துப்பறிமாற்றத்துக்கும் நன்றி
  அன்புடன்
  கமலா

 3. Google

  Google is the best search engine Google

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: