Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

தமிழ் சினிமா எந்த உணர்வை மக்களிடையே அதிகம் பரப்புகிறது?

Posted by kalyanakamala மேல் நவம்பர் 22, 2007


தமிழ் சினிமா இன்றைய கால‌கட்டத்தில் வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பதை இங்கு யாரும் மறுக்க மாட்டீர்கள்.இதப்பற்றி ஒரு மேடை நடத்தி புதுப்புது கருத்துக்களை வெளியே கொண்டு வருவது இந்த விவாததின் நோக்கம்.சில பெறியவர்கள் ரொம்ப அவசியம் என்று முணுமுணுப்பது எனக்குப்புரிகிறது.

ஆனால் இந்த விவாதமேடை ஆரம்பித்த பின்னர் அவர்கள் இந்தக் கருத்தை மாற்றிக்கொண்டு விடுவார்கள்.
சாலமன் பாப்பையா தலைமையில் குஷ்பூவும் ,சத்யராஜும் சிங்கப்பூர் போய்தான் இந்த விவாதத்தை நடத்தவேன்டுமா என்ன? நாமும் நடத்தி நல்லநல்ல கருத்துக்களை வெளிக்கொன்டு வருவோம்.
விவாதத்தில் நம்ம சந்தோஷ், சேவியர்,ஜெயஸ்ரீ,துர்கா,ஸ்ரீனிவாசன்……இன்னும் சொன்ன சொல்லாத நண்பர்கள் எல்லாம் வந்து கலக்கி விடுவார்கள் என்று தெரியும்…
ஆரம்பிக்கலாம் நம்ம்ம விவாதத்தை…தமிழ் சினிமா எந்த உணர்வை அதிகம் பரப்புகிறது? காதலையா? கடமையையா? ந‌கைச்சுவையா ?வன்முறையையா?…
இப்போ காட்டுங்க உங்க வாதத்திறமையை…பார்க்கலாம்.

Advertisements

20 பதில்கள் to “தமிழ் சினிமா எந்த உணர்வை மக்களிடையே அதிகம் பரப்புகிறது?”

 1. ramanca5 said

  Neenga solradhu nalla irukku Kamalamedam Anal edhu oru vivadam than. eppavavuthu ethaipola oru pattimanram armpetharkale? eppavum Palaya Kalathu Pattimanram pola
  Karpir chirandhaval Kannaki ya alladhu Madhaviya ? enru indrurm pattimandram nadathuvargal namum thalaividideye endru parthukkondirupoam.
  edhu eppadi irukku. ( Tamil in English)’
  Raman.

 2. மிக்க நன்றி ராமன்!என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு. அடுத்து விவாததுக்குள் வர அன்புடன் அழைக்கிறேன்.
  அன்புடன்
  கமலா

 3. sabari said

  madom,
  tamil cinema naturally provokes violence amongst young children.most of the children learn fighting from cinema only.
  they enjoy the fights from the age of 3 or 4. this is my honest feeling

 4. அட, கமலா மேடம், நானெல்லாம் வருஷத்துக்கு ஒரு படம், ரெண்டு படம் பார்க்கிற ஆளு, என்னைப் போய் சினிமா பத்தி விவாதம், அதுஇதுன்னு வம்புல மாட்டிவிட பார்க்கிறீங்களே 🙂

  படமெல்லாம் ரொம்ப பார்க்கிறதில்லைன்னாலும் தமிழ் சினிமாவை தொடர்ந்து கவனிச்சிட்டு தான் வரேன் (தமிழ் நாட்டுல வாழறவன் தமிழ் சினிமாவை ஒரேயடியா புறக்கணிச்சிட முடியுமா 🙂 ).நம்ம தமிழ் சமூகத்தில் சினிமாவின் தாக்கம் பெருமளவு இருப்பது யாராலும் மறுக்க முடியாது தான். சமூகத்தில் உள்ள மக்களின் பொதுவான மனநிலை தான் சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற மீடியம்கள் மூலமா வெளிப்படுது. இந்த காலத்தில் எடுக்கப்படும் சினிமா எல்லாம் மோசம்னு ஒரேயடியா சொல்லிட மாட்டேன், கொஞ்சம் இப்படி, அப்படி இருந்தாலும் தரமான படங்கள் வந்துட்டு தான் இருக்கு. என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா ஆரோக்கியமாவே இருக்கு. இன்னைக்கு கூட ஆனந்த விகடனில் பிரகாஷ்ராஜின் பேட்டியை படித்தேன். அவர் தயாரிச்ச ஒரு தரமான படத்துக்கு மக்களிடமிருந்து கிடைச்ச வரவேற்பு அவரை மேலும் மேலும தரமான படங்கள் எடுக்கத் தூண்டுவதாக சொல்றார். ஆக, ஒருசில படங்கள் சமூகத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துதுன்னா அதுக்கு சினிமா எடுப்பவர்களை ‘மட்டும்’ குறை சொல்ல மாட்டேன். கண்டிப்பா அவங்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கு, ஆனா நம்மோட ரசனைகள் என்ன என்பதில் நாம தெளிவா இருந்தா அவங்களால நம்ம ரசனைக்கேற்ற நல்ல திரைப்படங்களைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியாது.

  தமிழ் சினிமா இப்போ எப்படி இருக்கு, முன்னாடி எப்படி இருந்தது, அதெல்லாம் மறந்திடுவோம், அதெல்லாம் போயே போச். இனி வரும் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசுவதே உருப்படியானது என்று நினைக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன், தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட படம் வரனும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க? ஒரு சினிமாவைப் நீங்கள் பார்க்கும் அந்த இரண்டு மூன்று மணி நேரத்தில் எந்த மாதிரியான அனுபவத்தை எதிர்பார்க்கிறீங்க? ஒரு சினிமா உங்க வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை, உங்க மனநிலையில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தனும்னு எதிர்பார்க்கிறீங்க?

 5. ஆமாம் சரியாகத்தான் சொல்கிறீர்கள்.குழந்தைகள் சன்டைக்கட்சிகளை மிக்க விருப்பத்துடன் பார்ப்பதும் அதை சக குழந்தைகளிடம் பிரயோகிப்பதும் சகஜமாகி வருகிறது.
  kamala

 6. ஸ்ரீனிவாசன்! நீங்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டதற்கு முதலில் என் நன்றி.
  சினிமா நம்ம வீட்டுக்குள் நுழைந்து விட்டது.
  நீங்கள் கேட்கும்கேள்விகள் நியாயமனவைதான். ஆனால் பாருங்கள் எனக்குத்தெரிந்த ஒரு 25 வயதுப்பையன் அம்மாவிடம் மிக close ஆகப்பழகுபவன் கேட்டான் சில காலத்துக்கு முன்(ரோஜா படம் வெளி வந்த புதிதில்)சினிமாவில் அரவிந்த்சாமி சிகரெட் பிடித்தால் ரசிக்கிறீர்கள் ,நான் பிடித்தால் திட்டுகிறீர்களே என்று. 25 வயது பையனின் நிலைமையே இப்படி என்றால் மூன்று அல்லது நான்கு வயதுக்குழந்தைகளின் நிலையைக் கொஞ்சம் யோசியுங்கள்.நான் முதலில் சொன்ன படி இது ஒரு விவாதமே தவிர பரிட்சை ஒண்ணும் இல்லையே?தயக்கமில்லாமல் எல்லோரும் கலந்துக்கலாம்.
  கமலா

 7. aravind said

  சந்தேகமே இல்லாமல் “காதல்” உணர்வைத் தான். தமிழ் சினிமா காதலை விட்டு விலகினால் தான் உருப்படும். காதலைத் தவிர சொல்வதற்கு ஏதுமே இல்லாதது போல சொன்னதையே மீண்டும் சொல்லி சலிப்பூட்டுகிறது. சில படங்கள் காதலை காட்டுகிறோம் என்று குப்பையை காட்டுகின்றன. குழந்தைகள் திரைப்படங்களை கண்டு எவ்வளவு பூரிப்படைகிறார்கள்… அவர்களுக்கான சினிமாவை இங்கும் யாரும் எடுக்க காணோம்!

 8. entha uNarvai thuNdinaal kaasu paakalomo antha uNarvai mattume thOOndugirathu.athu ethuvaayinum

 9. அரவிந்த், மற்றும் பாஷா‌ நன்றி!காதல் தேவையில்லாத உணர்வா? ஆபாசக்காதல் என்று திறுத்திக்கொள்வோமே?சரிதானெ?குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் படம் எடுப்பதை சொன்னதற்கு மிக்க நன்றி
  கமலா.

 10. //நீங்கள் கேட்கும்கேள்விகள் நியாயமனவைதான். //

  சினிமாவிலிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்வதற்காக இல்லை அந்தக் கேள்விகள், உண்மையில் நாம் அனைவரும் சினிமாவிலிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கேள்விகள். இது சரியில்லை, அது சரியில்லை என்று குற்றம் காண்பதை விட நமக்கு எம்மாதிரியான படங்கள் வேண்டும் என்பதை சினிமாக்காரர்களுக்கு உணர்த்தினால் நல்லதைத் தவிர வேறெதையும் அவர்களால் கொடுக்க முடியாது.

  //குழந்தைகள் திரைப்படங்களை கண்டு எவ்வளவு பூரிப்படைகிறார்கள்… அவர்களுக்கான சினிமாவை இங்கும் யாரும் எடுக்க காணோம்!//

  உண்மை தான். ஆனால் தமிழ் ‘திரை’ப்பட வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே பார்த்தோமானால் குழந்தைகளுக்கான நல்ல படங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறன. ஹனுமான் சமீபத்தில் வந்த அருமையான அனிமேஷன் படம். அது போல் கிருஷ்ணர் கதையும் வந்துள்ளது. இவையெல்லாம் தமிழிலும் டப் செய்யப்படுகிறது. அனிமாக்ஸ் சானலில் சமீபத்தில் வந்த Earth Girl Arjuna நான் மிகவும் ரசித்த படம். அர்ஜுனன்/கண்ணன்/கீதை சாயலில் சுற்றுப்புற சூழல் சிந்தனைகள், ஆரோக்கியம் போன்றவற்றையெல்லாம் கலந்து குழந்தைகளுக்காகவே அழகாக படைக்கப்பட்ட ஒரு ஜப்பானிய அனிமேஷன் தொடர் அது. ரஜினிகாந்த் மகள் ஒரு அனிமேஷன் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இதுபோல் நிறைய படங்கள் தமிழிலும் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. இது போன்ற படங்களில் நல்ல விஷயங்களையும் கலந்து கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மனதிலும் ஒழுக்கம் பசுமரத்தாணி போல் அடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. நம் புராணக்கதைகளைத் தோண்டினால் கிடைக்காத குழந்தைகள் சப்ஜெக்டா? இந்து புராணக்கதைகள் மட்டுமல்ல, biblical கதைகள், புத்தமத jataka கதைகள், இஸ்லாமிகயக் கதைகளும் உள்ளன — சமீபத்தில் ஒரு தமிழ்ப் பதிவில் கூட அருமையான இஸ்லாமியக் கதையைப் பார்த்தேன், தெனாலி ராமன் கதை உள்ளது, அக்பர் பீர்பால், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

  இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், கொஞ்சம் சுற்று முற்றும் பார்த்தோமானால் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களும் உலகில் சிதறிக் கிடக்கின்றன. தேடினால் கிடைக்காதது இல்லை. நாம் தான் அன்னப் பட்சி போல் பகுத்தறிந்து நல்லதை எடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகளை வைத்துக்கொண்டு வெட்டு/குத்து படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட்டுவிட்டு நல்லதை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எல்லாமும் தமிழில் தான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் வேண்டியதில்லை. மற்ற கலாசாரங்களிலிருந்தும் நல்லதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. நான் கூட ஆங்கிலம், ஹிந்தி, மற்ற மொழிப் படங்கள் எல்லாம் பார்க்கிறேன், ஆனால் தமிழை மறந்துவிடவில்லையே?

 11. kamala said

  மிக அழகாக குழந்தைகளுக்கு என்னென்ன உபயோகமாகத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் வருகின்றன என்று விவரித்து எழுதி விட்டீர்கள்.மிக்க நன்றி !

  இப்போது நான் திரைப்படங்களைப் பற்றியல்லவா விவாதித்துக் கொன்டிருக்கிறோம். அதுவுமில்லாமல் குழந்தைகள் பார்க்கும் மீடியா ஒரு பக்கம் சினிமா என்றாலும் ,உயர்னிலைப்பள்ளி மற்றும், கல்லூரி செல்லும் மாண‌வர்களும் சினிமாவினால் தாக்கமடைகிறார்கள். அதைப்பற்றியும் பேசலாமே?
  அன்புடன்
  கமலா

 12. பெரும்பான்மையாக மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதையே சினிமாக்காரர்கள் தருகிறார்கள். சினிமாவில் எது காட்டப்படுகிறதோ அது மக்களின் மனதிலும் விருப்பத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக சமூக அக்கறையில்லாமல் வெட்டு-குத்து-ஆபாசத்தை அள்ளித்தெளிப்பதால் சினிமாக்காரர்கள் மீது தான் தவறு என்று சொல்வதா, இல்லை பகுத்தறிவில்லாமல் சினிமாவில் காட்டப்படுவது நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிப்பதால் நம் மீது தான் தவறா? இது முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா கதைதான் 🙂 . தமிழில் எடுக்கப்படும் சில இழிவான படங்களுக்கு சமூகத்தில் உள்ள நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் காரணம். இப்படியிருக்கையில் மற்றவர் மீது குறை சொல்வதை விட்டுவிட்டு நாம் செய்யும் தவறை சரிசெய்வதே சரியான அனுகுமுறை. அதனால் தான் சினிமாக்காரர்களை குறை கூறிக்கொண்டு இல்லாமல் நாம் பகுத்தறிவை வளர்த்துக்கொண்டு குழந்தைகளுக்கும் பகுத்தறிய கற்றுக்கொடுத்து தரமான படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறேன். இது தான் நம்மைக் காக்கும், இது தான் நம்மால் செய்ய முடிவதும்.

  வெட்டு-குத்து-ஆபாச படங்களும் வந்துகொண்டு தான் இருக்கும். இவையெல்லாம் இல்லாவிட்டால் நாம் எப்படி மனவலிமையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும்? 🙂 வாழ்க்கையில் எல்லாமே நமக்கு சாதகமாய் அமைந்து விட்டால் ஆட்டத்தில் எப்படி சுவாரஸ்யம் இருக்கும்? வாழ்க்கையே ஒரு விளையாட்டு தானே 😀

 13. திரு ஸ்ரீனிவாசன் கருத்து நன்றாக இருக்கிறது. நாம‌(விவேகம்)உள்ளவர்கள் பெரியவர்கள் விட்டு விடுவோம்.இளைய தலைமுறையினர்,குழந்தைகள் பற்றித்தான் பேச்சே!
  அடிதடி சன்டைக்காட்சிகளும் மிகவும் குறைந்த உடையை நாகரிகமாக எண்ண வைக்கும் தோற்றங்களும், காதல் கட்சிகளும் காசு பண்ண உள்ளடக்கிகொண்டிருக்கும் சினிமாவை அவ்வளவு எளிமையாக விலக்கி விட முடியாது.
  பெறிய சாதனையாளர்கள் செய்த கரியங்களை விட இந்த சினிமா நடிகர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூடஈர்க்கிறது எல்லோரையும்.இந்த சினிமவை entertainment
  என்று மட்டும் பார்க்கிற நோஒக்கு இல்லாமல் போய் விட்டதால்தான் இந்த பிரச்சினையே!

 14. தமிழ் சினிமா மூட நம்பிக்கையை பரப்போ பரப்பென்று பரப்பிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் ! ( ஒரு சில அபூர்வமான படங்கள் விதிவிலக்கு ) 99 விழுக்காடு படங்களிலும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் மூட நம்பிக்கைக்கு உரம் போடுவது போல ஒரு காட்சியாவது இருக்கும் என்பது திண்ணம்.

 15. sentiments ஐச்சொல்லுரீங்க சேவியர்!புரிகிறது.என்ன பண்ணலாம் இதுக்கு?னம்ம நாடு சென்டிமென்ட் நிறைந்ததாக இருக்கே?
  கமலா

 16. Tamil Movies has always played a vital role in Tamil nadu… Movie peroformers have always received recognisation… one has reached the top in overnight….

  Let me come to the point…. what has Tamil movies given to society other than entertaiment ??

  -ve sense:
  Violence(,thaught) , Love (,how to love), ஆபாசக்காதல்…. no one knows other than watching it in movies first !! These are enough to destroy a community (age-wise) !! These are like Virus… have always harmed lots of people in lots of ways!!

  +ve sense:
  Has always given importance to the language Tamil,
  deployed the worth of relationships, we consider the actors as real life hero & work hard …. means we get inspired from them in lots of way !
  Ex: Rajinikanth as Bus conductor to Superstar… i have seen many peoples choosed him as a role model !!

 17. soundr said

  cinema is a business. and every business looks upon the market trend and moves accordingly. cinema based on strong feelings, when executed properly will always work irrespective of time . e.g. films based on violence, sex, love, sorrow, family affection etc…
  but to run the business and make money, film makers always provide goods with content that impress who form their major market.
  once freedom was the best topic and most movies had a song as bharatham, suthanthiram etc…
  then people went to movies as families. so it was only about family subjects.
  then in an independant india there was unemployment and labor problems. communism feeling was making waves, and films based on these issues were made.
  then it was action era – for a small phase cowboy movies were also there.
  there was no considerable improvement in life. education was getting better and so was unemployment or low wages. people started to feel communism will not work out. action movies were also no good. then the only way for hope in life is god. came the bakthi era. people believed that if you pray god you will get job. movies also poured in feelings like if you pray god, the next morning you will be a millionare.
  liberalisation was getting in india and men and women were working. women had moeny in their hands and most house wives were no longer as yes husband types. so came movies for women. visu followed by v sekar made an era. (note though visu made movies based on strong female characters who were good, his movies like penmani aval kanmani and thirumathi oru vekumathi were not super hits becoz he had portrayed the villan strongly as women itself – see market is opposing)
  then there was an mixed era for sometime, film makers were not sure what would work and it was also the time dubbed movies were making great in tamil. can i say violence and sex.?
  and finally came bpo era – youngsters got placed easily and any 20 year old guy or gal started earning in thousands just like that. youngsters had more money than their parents and liked to visit mall, pubs, disco, dress in fashion and you see recent movies only promoting directly or indirectly this trend. if you speak family, values then these people will not visit theaters – so film makers will not go against the market.
  dont speak about pasanga, subramaniapuram, pitha magan etc. those kind of quality movies will be made in all times but not even a hand full.

  in short – we individually influence the cinema in a small way and in return cinema influences us in a bulk way (as it influences the society)

 18. kamala said

  அப்படியே தமிழ் சினிமா சரித்திரத்தையே அலசிப்போட்டுட்டீங்க! ந‌ல்லாவே அலசி இருக்கீங்க!

  கமலா

 19. soundr said

  thanks for your words with appreciation.

 20. Prabu M said

  //we individually influence the cinema in a small way and in return cinema influences us in a bulk way (as it influences the society)//

  Very nicely said my friend…
  i agree with you… Thank you for giving me the link…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: