Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

பெண்களைப் பற்றியும் விசாரிக்கலாமே?

Posted by kalyanakamala மேல் நவம்பர் 27, 2007


சமீபத்தில் அவள் விகடனில் ஒரு பேட்டி!ஒரு பெரியவரிடம்.அவர் மூன்று பெண்களைப்பெற்றவர். அவர்கள் பெண்களுக்கு 40வயதுக்கு மேல் இருக்கும்போல் இருக்கிறது.அவர் பெண்களுக்கு வரன் எப்படிப் பார்க்கணும்ன்னு சொல்லி இருக்கார்.அவருக்கு மூன்றும் பெண். அதனால் ஒரு பையன் வீட்டில் எப்படி இருக்கும் எதிர்பார்ப்பு என்று நடைமுறையில் தெரியாதாயிருக்கும்.
இப்போ நிறைய பிள்ளைகள் பற்றி மோசமான தகவல்கள் வருவதால் அவரை பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். அவ‌ரும் பெட்டிக்கடையில் விசாரியுங்கள் பையன் சிகரெட் பிடிப்பானா மாட்டானா என்று தெரியும் என்பன போன்ற ஒரு வெற்றிகரமான  (பென்களின்)தகப்பன் என்ற முறையில் சிலபல விஷயங்களைச்சொல்லி இருந்தார். அதைப்படித்தபோது எனக்குத்தோன்றியது ஒரு பெண்ணைத் தெர்ந்தெடுக்கவும் இந்த அணுகு
முறை பொருந்தும் என்று தோன்றியது.
ஆணுக்குப் பெண் சமம் என்று ஆகி விட்ட காலத்தில் பெண்களும் pub களில் நள்ளிரவு வரை இருப்பது சகஜமாகி விட்ட ஒன்று என்று ஆகி விட்ட நிலையில் ,pant ,shirt நல்ல சௌகரியமாக உள்ளது என்று பெண்கள் உணர ஆரம்பித்து விட்ட இக்காலத்தில் ஏன் விசாரிக்காக்கூடது?எப்படியும் இரன்டு வீட்டரும் கொஞச‌ம் கூட அறிமுகம் இல்லாதவர்களாக இருக்கும் பஷத்தில் அக்கம் பக்கத்தார் ,மளிகைக்கடை, பக்கத்திலுள்ள beauty parlour என்று பல இடங்களில் விசாரிக்கலாம்.பெண்ணின் அம்மா பற்றி நிறைய விசாரிக்கலாம். அவர் முதல் நாள்தான் வரனின் அப்பா விசாரிக்கும் கடைக்காரனோடு சண்டை போட்டிருப்பார். எப்படி வரும் கடைக்காரரிடமிருந்து விஷயம் என்று நாமே யூகிக்கலாம்.
இதைப்படித்து விட்டு நான் ஆணியம் பேசுகிறேன் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.ஆண்களும் நம்ம வீட்டில் இருக்கிறார்களே?

Advertisements

8 பதில்கள் to “பெண்களைப் பற்றியும் விசாரிக்கலாமே?”

 1. தங்களின் பகிர்தலுக்கு நன்றி கமலாம்மா
  உங்களின் பகிர்தல் மூலம் உங்களின் வலைப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது.
  என் வலைபதிவின் பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன்
  உங்களைபற்றிய குறிப்பு மற்றும் திருமணத்தின் பொழுது பெண்பற்றி விசாரிக்க கூறிய ஆணியம் ( ஆணிய பார்வை என்று சொல்ல முடியாது – பொதுப்பார்வை என்று தான் நான் சொல்வேன் இதைதான் நான் பரவலாக எல்லோரிடமும் எதிர்பார்ப்பது) உங்களிடம் நிறைய விவாதிக்க விருப்பம். விருப்பமிருப்பின் என் மடல்கள் தொடரும்
  தோழமையுடன்
  பாண்டித்துரை
  சிங்கப்பூர்
  i need ur mail id
  http://www.pandiidurai.wordpress.com

 2. நன்றிகள் பல பான்டிதுரை!
  எப்பவுமே குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பது ஆண்கள்தான்னு ஒரு கட்டாய முடிவு இருப்பதை என்னால் ஏற்க முடியாததன் விளைவுதான் இந்தப் பதிவு.ரொம்ப நாளாக பழகி விட்ட ஆணாதிக்கத்தாலும்,பொருளாதார சார்பினாலும் ஆண்கள் கொஞ்ச‌ம்(கொஞ்சமென்ன) நிறையவே அட்டூழியங்கள் செய்திருக்கிறார்கள். அதற்குப்பெண்களும் துணைக்குப் போயிருக்கிறார்கள்,குடும்பம் என்ற அமைப்பைக் காப்பதற்காக. ஆனால்
  அதற்காக இப்போ பெண்கள் மிகவும் அட்டகாசம் பண்ணத்தொடங்குகிறார்கள் . இதுவும் சரியில்லைதானே? ஆகவே அவர்களையும் பற்றி நிறையவே விசாரிக்க வெண்டியுள்ளது என்பது என் முடிவு. ந‌ல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலோ,படித்து விட்டாலோ மட்டும் போதாது.குடும்பத்தைக் காப்பற்றுவது என்பது ஒரு கலை ,அதைப் பழகியிருக்க வேண்டும்.
  தவறு செய்கிற ஆண்களுக்கு நிச்சயமாக நான் வக்காலத்து வாங்கவில்லை.
  அன்புடன்
  கமலா

 3. வணக்கம்,

  தங்களின் பதிவு அருமை, இதனை படிக்கும் போது தங்களின் சமநிலைக் கண்ணொட்டத்தை அற்யமுடிகிறது.

  இன்றைய உலகின் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு, தங்மளின் சிந்தனை மிகவும் பொறுத்தமானது.

  நன்றி.

  சத்தியராஜ்,

  தென் கொரியா.

 4. விசாரிப்பது என்பது ஒரு நிலை வரைதான் என்பது என் கருத்து.ஒருவரைப்பற்றி ஒருவரது கண்ணோட்டம் இன்னொருவருக்கு இருக்கும் என்று சொல்லமுடியாது என்று எனக்குத்தோன்றியது. இரு வேறு குடும்பப் பின்னணியிலிருந்து வரும் இருவர் வாழ ஆரம்பித்தபின் நிறைய புரிதல் தேவையாயிருக்கும். மிகப்பெரிய குற்றங்கள் குறைகள் இல்லாமல் வேன்டுமானால் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இப்போ பெண்களும் ரொம்பவும் மாறியிருக்கிறார்கள்.அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
  அன்புடன்
  கமலா

 5. மிக நல்ல பதிவு. தங்களின் சமூகத்தைப்பற்றிய நேக்கு மிகச்சரியாக இருக்கின்றது. ஆண்களைப்பற்றிய விபரங்களை எவ்வாறு விசாரிக்கின்ரார்களோ அதே போல் பெண்களைப்பற்றியும் விசாரித்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம் என்பதே எனது கருத்தும்… ஏனெனில் வண்டியில் பூட்டப்படும் மாடுகள் இரண்டும் ஒரே குணத்தோடு இருப்பது மிக மிக அவசியம்.

  பதிவுக்கு வாழ்த்துக்கள்.

 6. soundr said

  to know about a guy or girl, enquire their collegemates (not batchmates either seniors or juniors). enquring past colleague’s is next step.
  one of my friend said that he knows a big network in IT that refers about gals and comments as “clean slate, scratched once, etc…”
  atlast “kanavan/manaivi amaivathellam iraivan kodutha varam”

 7. kamala said

  100%சரியானவங்க என்று யாருமே கிடையாது. அதுபோல 100% நமக்கு ஏத்தவங்க என்று ஒருத்தர் அமையவும் முடியாது.கிடைத்ததை நமக்கு ஏத்தாப்போல மாத்திக்கலாம் இல்லைன்னா கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழலாம் .இது தவிர‌ மத்த முறைகளில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.இதுதான் என் கருத்து…..!

  வீட்டுக்குள் இருந்து கொண்டே தன் உரிமைகளுக்காக குரல் எழுப்பிக்கொண்டே இருப்பதை விட பாதுகாப்பான வாழ்க்கை எனக்குத்தெரியவில்லை!
  அன்புடன்
  கமலா

 8. soundr said

  100%சரியானவங்க என்று யாருமே கிடையாது. அதுபோல 100% நமக்கு ஏத்தவங்க என்று ஒருத்தர் அமையவும் முடியாது.
  miga sariyaana vaarthaigal.
  “arasana nambi purusana vittaalaam” endru oru solavadai undu.
  its very important for both the guys and gals in todays world to remember this again and again.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: