Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

உண்மையில் என்ன நடக்கிறது?

Posted by kalyanakamala மேல் நவம்பர் 29, 2007


கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் வரை குறைந்த வருமானக்காரர்கள், நடுத்தர வர்கம் ,upper middle class,ரொம்பப் பண‌க்காரர்கள் என்று பலவகைப்பட்ட குடும்பங்கள் அவரவர் தகுதிக்கேற்ப வாழ்ந்து வந்தார்கள்.

 

இப்போவெல்லாம் ரொம்ப ஏழைகள் அப்புற‌ம் நேரே நடுத்தரம் மற்றும் நல்ல வசதி படைத்தவர்கள் என்று ஆகி விட்டது.

இதற்குக் காரணம் வீட்டுக்கு ஒருவர் நல்ல படிப்பு படித்தவர் இருந்து, இங்கேயே நல்ல வேலையிலிருப்பவராகவோ,அல்லது இப்போ மிகவும் விவாதத்துக்குரியதாக ஆகிவிட்ட வெளி நாட்டுப்பணம் சம்பாதிப்பவராகவோ இருப்பதுதான்.எல்லோரும் கணினி மூலம் வங்கிக்கணக்குகளை கையாளுகிறார்கள்.கணினி மயமானதாக உலகம் ஆகிவிட்டதால் தேசங்களுக்கிடையே தூரம் குறைந்து விட்டது.

 

பெண்களும் படித்து விட்டதால் அவர்களும் தாய்தந்தையரை ஆதரிக்கிற கலாசாரம் வந்து வாழ்க்கைமுறையை மிகவும் மாற்றிவிட்டது. ரொம்ப ஆதரிக்க முடியாத பெண்கள் பொருளாதார ரீதியில் தொல்லை கொடுக்காமலாவது இருக்கிறார்கள்(இருக்க முயல்பவர்கள் அதிகமாக ஆகி விட்டார்கள் என்று வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம்).

 

 வெளிநாடு பல‌ருக்கும் சாத்யமாகி விட்டதால் பெரியவர்களுக்கும் உலகத்தைப்புரிந்து கொள்கிற வாய்ப்பு பெருகி விட்டது.

வாங்குகிற திறன் அதிகமாகிவிட்டது.முன்பு நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டவர்கள் இப்போ காட்டன் புடவையை ரொம்ப வாங்குகிறார்கள். நடுத்தர வயதை அடைந்து விட்டாலே வயதாகிவிட்டதாக சொல்லிக்கொள்கிறவர்கள் இப்போ வயதைப்பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. எல்லோரும் நல்ல முறையில் உடை

 

உடுத்தி ,மனதையும் ,உடலையும்,தெம்பாக வைத்துக்கொள்ளப் பழகுகிறார்கள்.

 

யோகா வகுப்புகள் பிரபலமாக ஆகிவருகின்றன.ஜிம்கள் உடல் நலத்துக்கு ரொம்ப சகஜமாக ஆகிவிட்டன.

 

சிறிய பள்ளி செல்கிற பிள்ளைகள் தாங்கள் மேலே படிக்க வேன்டிய படிப்பைப்பற்றி ஏழு அல்லது எட்டாம் கிளாஸ் படிக்கும்போதே முடிவு செய்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள் இந்த முன்று வருடங்கள் முதல் முதுநிலைக்கல்வி வரை திட்டம் போடுகிறார்கள்.

பெண்கள் திருமணத்தைப்பற்றி வேலையில் செட்டில் ஆகிறவரை நினைப்பதேயில்லை.

குழந்தை பெற்றுக்கொள்வது மிக அழகாக திட்டமிடப்படுகிறது.இன்னும் பற்பல வியக்கத்தக்க முறையில் உலகம் முன்னேறிவரும் வேளையில் ஒன்று மட்டும் நிலை தடுமாறி நிற்கிறது.அதுதான் குடும்பவாழ்க்கையின் அஸ்திவாரமான திருமணங்கள். திருமணங்களின் முக்கிய அம்சமே பொருத்துக்கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும்தான் 

விட்டுக்கொடுக்க பழக்கிய நம் பெரியோர்கள் புரிதலைப் பழக்கபடுத்த வில்லையோ என்று தோன்றுகிறது.பல வருடங்கள் விட்டுகொடுத்தே வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது கால மாற்றம் ஒருவரும் எதையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் கணவனை விட்டு பிரிந்து வந்து விட்டாள். நான் சொன்னேன் விட்டுக் கொடுத்துப் போகவேண்டுமென்று.அவள் பதில்” நீங்கள் இந்த திருமணத்தைக் காப்பாத்த எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து விட்டீர்கள். நாங்கள் இந்தத் திருமணத்தை விட்டு விட்டு மற்றதைக் காப்பாத்திக் கொள்வோம்” என்று. அப்புற‌ம் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள்?எதையும் விட்டுக்கொடுக்காமல் புரிந்து கொள்வது என்பதற்குக் கொஞ்ச‌ம் நாளாகும்.  மணங்களின் முக்கிய அம்சமே பொருத்துக்கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும்தான். விட்டுக்கொடுக்க பழக்கிய நம் பெரியோர்கள் புரிதலைப் பழக்கபடுத்த வில்லையோ என்று தோன்றுகிறது.பல வருடங்கள் விட்டுகொடுத்தே வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது கால மாற்றம் ஒருவரும் எதையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

எதையும் விட்டுக்கொடுக்காமல் புரிந்து கொள்வது என்பதற்குக் கொஞ்ச‌ம் நாளாகும்.கொஞ்சம் என்ன ரொம்பவே நாளாகும். அதற்கு யாருக்கும் பொறுமையில்லை. இனிமேல் அதிகமாக ஆண்களுக்குப் புரிதலை பழக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.ஆண், பெண் முன்னெற்றத்தில் குடும்பம் அடிபடாமல் இருக்க ஆண்பெண் இருவ‌ரும் புரிதலை கற்பதே மேல்.

Advertisements

10 பதில்கள் to “உண்மையில் என்ன நடக்கிறது?”

  1. காலத்திற்கேற்ற நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

  2. kamala said

    நன்றி கலை அரசன். பதிவுக்கு வருகை தந்ததற்கும் கருத்துக்கும்.
    அன்புடன்
    கமலா

  3. அம்மணி,

    மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். இந்த உண்மை ஆழமானது. எல்லோரும் அவசியம் யோசிக்க வேண்டியது.

    “விட்டுக்கொடுத்து போவது” என்பது நம் ரத்தத்தில் இருக்க வேண்டும். இது காலம் காலமாக உருவேற்ற வேண்டிய ஒரு சுபாவம். இதுவே இந்த உலகத்தில் வெற்றிக்கு மூலவேர். இது என்ன வென்றே தெரியாத அசடர்கள் இதை ஒரு பலவீனமாக நினைக்கிறார்கள். இந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையை தன் அசட்டு ஈகோவிற்கு தொலைத்தவர்கள். விட்டுக்கொடுப்பது என்பது ஏதோ வரவழைத்துக்கொள்ளும் ஒரு பழக்கமில்லை. ஒருவரிடம் உள்ள அன்பின் வெளிப்பாடு. அன்பில்லாத பாலைவனத்தில் உறவுமுறைகளை கொடுக்கல் வாங்கல் வியாபாரமாக எடைபோடும் மக்களே இது ஒரு சுமையாக, பலவீனமாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கிறார்கள். தன் வேலைக்காக தன் குழந்தைப்பருவத்தையும், நம் ஆயிரம் வருட கலாசாரத்தையும் தொலைத்து விட்டுக்கொடுத்தார்கள். நல்ல பணம் கிடைத்து தனக்கு “சுதந்திரம்” வரும் வேலைக்காக எல்லா பசப்புத்தனத்தையும் இளித்துக்கொண்டு சமாளித்து ஆபீஸில் நடக்கும் ஒவ்வாத அரசியல், ஹிப்போக்ரஸி என்று பலவற்றை சகித்துக்கொண்டு தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். இன்னும் “கரியரி”ல் சாதிக்கவேண்டும் என்று தன் இளமையை விட்டுக்கொடுக்கிறார்கள்.

    உண்மையில் இவர்கள் மலையாக வியாபித்திருக்கும் தங்கள் ஈகோவின் அடிமைகள். இவர்களின் பிடிவாதம் ஒரு அல்ப விஷயத்திற்காக இருக்கும். இந்த மாடர்ன் மடையர்கள் (நான் இருபாலர்களையும்தான் சொல்கிறேன்) நூற்றுக்கு எண்பது சதவீதம் சண்டை போடுவது தன் “தனித்தன்மை”க்காகத்தான். இப்படி இல்லாத ஒன்றை கல்பித்து தன்னையும், தன் குடும்பத்தையும், தன் இணையையும், தன் குழந்தைகளையும் தினசரி நரக வாழ்க்கையில் தள்ளுகிறார்கள். இந்த அபத்தத்தற்கு இவர்களின் பெற்றோர்களே காரணம்.

    நன்றி

    ஜயராமன்

  4. திரு ஜயரமன்
    உங்கள் பதில் என்னை நெகிழ வைத்தது. நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை நீங்கள் அழகாகப் புரிந்து கொன்டிருக்கிறிர்கள். உங்கள் வயது எனக்குத்தெரியவில்லை. ஆனால் அனுபவம் தெரிகிறது.விட்டுக்கொடுத்தும் , புரிந்து கொண்டும் வாழ்ந்த பல ஆண்களை(என் உறவு வட்டத்துக்குள்) எனக்குத்தெரியும்.அவர்கள் குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டுள்ளார்கள். சமையலே செய்யாத, வேலைக்கும் போகாத ,தான் சொல்வது மட்டும்தான் சரி என்ற எண்ணத்துடன் உள்ள மனைவியோடு நல்ல ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்த ஒரு பெரியவர் எனக்கு மிக நெருங்கிய உறவினர். நீங்கள் குறிப்பிட்டுள்ள ego இல்லாததால் அவர் ஒரு சிறந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தார்.
    மிக்க நன்றி
    கமலா

  5. அசட்டுத்தனத்தையும் புத்திசாலித்தனத்தால் வென்ற அவர்களைப்போல் ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
    கமலா

  6. Appi said

    கல்யாண கமலா,
    எனக்கு ஓர் அளவு (கண்டும் கேட்டும்) தெரிந்த விஷயம்:
    கணவன், மனைவி இருவரும் மிகுந்த படித்தவர்கள். பெரியவேலையில் உள்ளவர்கள். மிகுந்த பக்தியும் கொண்டவர்கள். மனைவி ஒரு ‘விடுதலை விரும்பி’. தனிமை மிகவும் விரும்புவார் – எவ்வளவு அளவு என்றால் ஒரே பூஜை அறையில், எல்லாமும் இரண்டு இரண்டாக இருக்கும் – சுவாமி படம் முதல் விளக்கு.வரை .. இரண்டு சுப்ரபாதம், பூச்செடியை கணவர் தொடக்கூடாது, கோயிலில் தனியாக பட்டருக்கு கணிக்கை (கணவன் தந்தது போக. ஆனால் கணவர் குறைத்து கொடுப்பார் :-). மனைவியோ தாராளமாக (லகர அளவில்). கணவர் இல்லாமலே, வெளியூர் கோவில்களுக்கு செல்வார். மிகுந்த தைர்யசாலி (இரவிலும் பிரயாணங்கள். கணவன் பேசினாலும் சண்டை பேசாமல் இருந்தாலும் சண்டை). கணவரை கேட்டால் “கடவுள் பேரில் எல்லாம் நடக்கின்றதால் மாறு சொல்ல பயமாய் இருக்கிறது” என்கிறார்.

    தனி குடித்தனம். அதனால் இரு பக்க பெரியவர்கள் இதை பற்றி பேசுவதில்லை. அடுப்பில் பொங்காதாவரைக்கும் கொதிகட்டும் என்று போல் இருக்கு.

    அன்புடன்,
    அப்பி

  7. ஒரு கணவன் மனைவி பற்றி எழுதியிருக்கிறீர்கள். அவர்கள் வயது பற்றி எழுதவில்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய விருப்பு வெறுப்புகள் சௌகரியங்கள் வேறு நடைமுறைப்படுத்த வேண்டிவரும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் குழந்தைகள் இல்லை போலத் தோன்றுகிறது.
    அதுவே இந்த மாதிரி மன நிலமைக்கு ஒரு காரண‌மாக இருக்கலாம்.
    பழகிவிடும் இதுவே!
    அன்புடன்
    கமலா

  8. Make love, not war!

  9. B.Sadesh kumar said

    miga nalla karuthu

  10. soundr said

    அவள் பதில்” நீங்கள் இந்த திருமணத்தைக் காப்பாத்த எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து விட்டீர்கள். நாங்கள் இந்தத் திருமணத்தை விட்டு விட்டு மற்றதைக் காப்பாத்திக் கொள்வோம்” என்று.

    women have started realising their power and enjoy the freedom and liberty that they can. when something has been kept under pressure for a long time and when you release it, there are more chances for casualities than benefit. there is no other way. its a transition time and hence there would be many casualities. as divorces, false complaints about dowry harassment, instilling bad opinion about the legal father in minds of offsprings, etc…

    time is the best teacher and healer. until it works out, we can just feel pity for the loosers.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: