Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

சிறுவர் வதைச்சட்டம்!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 15, 2007

இன்றுகாலை பத்து மணியளவில் கழைக்கூத்தாடி(கலைக்குத்தாடி)குடும்பம் ஒன்று வித்தைகள் காட்டிக் கொன்டிருந்தது. சாலையோரம் ஒரு நல்ல தொல்லையில்லாத இடமாகத் தேர்வுசெய்து தங்கள் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பெண்மணி, ஒரு ஆடவன் இரண்டு குழந்தைகள்  கொண்ட குடும்பம். பெண் தன் கைக்குழந்தையுடன அமர்ந்திருந்தாள். ஆட‌வ‌ன் கையில் மேள‌ம் போன்ற‌ ஒரு வாத்தியத்தைத்‌ த‌ட்டி வாசித்துக்கொண்டிருக்க ஒரு சின்ன‌ ஆறு அல்ல‌து ஏழு வ‌ய‌துடைய‌ சிறுமி க‌யிற்றின் மேல் அந்த தாளத்துக்கேத்தபடி நான் பார்த்த‌வ‌ரை சுமார் அறை ம‌ணி நேர‌ம் கையில் ஒரு க‌ம்பு வைத்துக்கொண்டு balance செய்து ஆடிக்கொண்டிருந்தாள். அவ‌ள் வித‌வித‌‌மாக‌ சாக‌ச‌ங்கள் செய்துகொண்டிருந்தாள்.விய‌த்த‌கு முறையில் க‌யிற்றின் மேல் மெல்லிய‌தாக‌ இருந்த அவள் ஆடிக்கொன்டிருந்தாள்.
சுற்றி இருப்போர் யாரும் அந்த‌‌ சாக‌ச‌த்தை ஒரு கேளிக்கையாகப் பார்க்காம‌ல் ப‌ரிதாப‌த்தோடுதான் பார்க்க‌ முடிந்த‌து.எல்லோர் முக‌த்திலும் ப‌ரிதாப‌ம்தான் மேலொங்கியிருந்தது.
அந்தப் பெண் அந்த குறிப்பிட்ட‌ வித்தயைச் செய்ய வேண்டுமானால் மெலிந்தே இருக்கவெண்டும். கொஞ்சம் கூட எடை அதிகரித்தால் அந்த வித்தையைச் செய்ய முடியாது என்று தோன்றியது. ஏற்கெனவே அந்தப்பெண் வறுமையில்தான் உழலவெண்டும் . இந்த குறிப்பிட்ட வித்தையைச் செய்ய இன்னும் உணவுக்கட்டுப்பாடு கொண்டிருக்கவேண்டுமோ என்று என் மனம் அந்த சிறுமிக்காகக் கவலைப்பட்டது.‌
இந்த‌‌ மாதிரிக் குழந்தைகளை வதைக்காதீர்கள் என்று அந்த ஆணிடமோ பெண்ணிடமோ போய்ச்சொல்லவேன்டும் என்று மனமும் வாக்கும் துறுதுறுத்தது.சிறார் கொடுமைகளில் மிகக்கொடுமையாக  இந்த‌‌ குறிப்பிட்ட‌ கொடுமை தோன்றிய‌து.
இந்த‌ மாதிரிக் கொடுமைக‌ளைப் பார்த்தால் என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை அவ‌ர்க‌ளுக்கு (கெடுத‌ல் செய்யாம‌ல்)எடுக்க‌வெண்டுமென‌ யாருக்காவ‌து ந‌ம‌து வ‌ட்ட‌தில் தெரிந்த்தால் சொல்லுங்க‌ளேன்!

Advertisements

7 பதில்கள் to “சிறுவர் வதைச்சட்டம்!”

 1. சத்தியராஜ் said

  வணக்கம்,

  இது பொன்ற கழைக்கூத்தாடி(கலைக்குத்தாடி)களை பல இடங்களில் பார்த்து இருக்கிறென்.

  பல கலைக்குத்தாடி குடும்பம், கலைங்கர்கள் வறுமையில்தான் உழலுகின்றார்கள்,

  WE are giving importance to other country entertainments (like Western Dances, Music programs, Cricket, Movies, etc ) but not to our won “TRADITIONAL ART”

  This is only our mistake, that we are not giving any recognizable important to our “TRADITIONAL ART”

  If we give at lest 5% important to them, it will be helpful to our TRADITIONAL ARTISTS and IT WILL MAKE OUR government to recognize or acknowledge those people to help them to make good life.

  As i know very few countries didn’t give much important to their traditional arts, especially our county PEOPLE… i don’t like say more because everybody know about our people.

  Here in South Korea, The Traditional Arts like folk Dance, Musics are very important “COURSES” in all the “Universities”, and every Party and Programs in all the places here start with traditional music, and everybody like the music and give much more important to that music only.

  If we change our mind and activity towards our Traditional Art, according to me , the life of the traditional artist will improve surely.

  {Note: sorry i cant able to type more in Tamil, but i like to type in Tamil}

  ///அந்த‌‌ சாக‌ச‌த்தை ஒரு கேளிக்கையாகப் பார்க்காம‌ல் ப‌ரிதாப‌த்தோடுதான் பார்க்க‌ முடிந்த‌து.எல்லோர் முக‌த்திலும் ப‌ரிதாப‌ம்தான் மேலொங்கியிருந்தது.///

  ///இந்த‌‌ மாதிரிக் குழந்தைகளை வதைக்காதீர்கள் என்று அந்த ஆணிடமோ பெண்ணிடமோ போய்ச்சொல்லவேன்டும் என்று மனமும் வாக்கும் துறுதுறுத்தது.சிறார் கொடுமைகளில் மிகக்கொடுமையாக இந்த‌‌ குறிப்பிட்ட‌ கொடுமை தோன்றிய‌து.///

  இது சிறார் கொடுமை மடுமள்ள, நம் நாட்டு மக்களின் மெல் நாட்டு மோகத்தால், அவதிபடும் நம் கலைகர்களின கொடுமையான் நிலமை.

  சத்தியராஜ்

 2. நன்றி சத்யராஜ்!
  யோசித்து ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். அந்த சிறுமி பள்ளி செல்ல வேண்டிய வயதில் இப்படி காட்சிப்பொருளாவதை மனது ஒத்துகொள்ளமறுக்கிறது.
  மிகவும் கவலையோடு
  கமலா

 3. வணக்கம்,
  தங்கள் கட்டுரையிலிருந்து தங்களின் ஆதங்கம் புரிகின்றது. தங்களின் மனிதாபிமானத்தையும் இந்தக் கட்டுரைக் காட்டுகின்றது. ஆனால் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சிறுமியின் மீது நாம் பரிதாபம் கொள்ள வேண்டியதில்லை. மாறாக நாம் அந்த சிறுமியின் மீது பெருமை கொள்ளத்தான் வேண்டும். நாம் பரிதாபப்படவேண்டியது, வெட்கப்படவேண்டியது நம் சமுதாயத்தையும், நம் அரசையும் நினைத்துத்தான்.

  ஆம், உண்மையில் நாமும் நம் அரசும் வெட்கப்படத்தான் செய்யவேண்யும்.
  அரசு வெட்கப்படவேண்டியதற்கான காரணம் இவ்வாறான கலைஞர்களை ஊக்கப்படுத்தாதது, இவர்களுக்கு உண்டான அங்கிகாரத்தை வளங்காதது. இப்படிப்பட்ட உண்மையான கலைஞர்களை அரசு நடுநிலையோடு நின்று ஊக்கப்படுத்தியிருந்தால் இன்று ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்கலை கண்டிப்பாக பெற்றிருப்போம் என்பது என் திண்ணமான எண்ணம்.

  நாம் வெட்கப்படவேண்டியதற்கான காரணம் இவ்வாறான கலைஞர்களை ஊக்கப்படுத்தாமல் ஊனப்படுத்துவது, அயல் நாட்டு கலைகளில் பொய்யான மோகம் கொண்டு சொந்த மண்ணின் கலைகளை கலைஞர்களை உதாசீனப்படுத்துவது.

  சீனர்களும் ஜப்பானியர்களும் குழப்பருவத்திலிருந்தே ஜிம்னாஸ்டிக் போன்ற கடினமான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே அந்த சிறுமியின் கயிற்றின் மீது நடந்தது சிறார் கொடுமை அல்ல. அந்த குடும்பம் அந்த வித்தையை நடுத்தெருவிலும், சாலையிலும் செய்து காட்டும் பரிதாபநிலையில் நமது அரசும் நாமும் வைத்து இருப்பதுதான் கொடுமை.

  அதேபோல் குழந்தைகளை சிலர் சவுக்கால் அடித்து, அடிக்கவைத்து வித்தை காட்டுகின்றனர். பிச்சையெடுக்க வைக்கின்றனர். இந்த செயல்களை சிறார் கொடுமை என்று கொள்ளலாம்.

 4. வணக்கம்,

 5. kamala said

  thangs !mr marthandan!u have given me the right answer to my feelings!
  kamala

 6. Google

  Google is the best search engine Google

 7. soundr said

  “எல்லோர் முக‌த்திலும் ப‌ரிதாப‌ம்தான் மேலொங்கியிருந்தது.”
  thank god, our people still have these feelings. yes, they have feelings but never turn them into action. how many viewers contributed a penny for the performance. after all she was struggling to make for the day’s roti for her family.
  maelum
  unavukku vazhi illatha kudumbaththidam ‘sattam’ paesa vaendaam.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: