Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

ஆகாய‌த்தில் சினேக‌ம்!

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 20, 2007


ஒருமுறை துபாய் ஏர்போர்ட்டில் நான் இந்தியா திரும்புவதற்காக விமானம் ஏறுவதற்காக நடந்து வந்து கொன்டிருந்தேன். துபாய் ஏர்போர்ட்டில் அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும். தனியாகத் தாயகம் திரும்பிக்கொன்டிருந்தேன். கையில் ஒரு சிறுபெட்டி ஒன்று வைத்துக்கொன்டு நடந்து கொன்டிருந்தேன். நான் துபாய் போகும் போது இருந்த ஏர்போர்ட்டை விட வரும்போது இருந்த ஏர்போர்ட் மிகவும் பெரிதாகிப்போன நேரம். வழியெங்கும் ஃப்ளோர் எஸ்கலேடர்கள் இருந்தன. கையில் பெட்டியுடன் அதில் கால் வைப்பது என்பது எனக்கு கடினமாயிருந்தது. யாரும் தெரிந்தவர்க‌ள் பக்கத்தில் இல்லாததால் பயமாகவும் இருந்தது . நான் கொஞ்சம் தயங்கி நின்றபோது ஒரு வெள்ளைக்கார இளைஞன் (என் மகன் வயது இருக்கும்)என் கையைப்பிடித்து சட்டென்று எஸ்கலேடர் மீது என் காலை வைக்கும்படி செய்து விட்டான். பின் என்னைப் பார்த்து ஒரு நட்புச்சிரிப்பு சிரித்தான். அது தான் மனிதம் என்பது. உலகம் முழுவதும் மனிதர்கள் அமைதியாகவும் அன்புடனுமே இருக்க ஆசைப்படுகிறார்கள்.

        இன்னொரு முறை சிங்கப்பூர் ஏர்போர்டில் நான் சிங்கப்பூருக்குள் சென்று கொன்டிருக்கிறேன். எதிரில் இன்னொரு நம் தமிழ் நாட்டுப் பெண்மணிதான் வந்து கொன்டிருந்தார். முன்பின் தெரியாதவர். என்னைப் பார்த்ததும் கையசைத்து தன் நட்பைதெரிவிக்கிறார்.அருகே வந்து அவர் என்னைப் பார்த்து என்ன சென்னையா? என்று தமிழில் வினவுகிறார். நான் இல்லை நான் சிங்கப்பூருக்குள் போகிறேன் என்கிறேன். அவர் நான் அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன் என்று ரொம்ப பழகினவரைப் போல பெருமிததத்துடன் பேசிச் சிரிக்கிறார்.பல மாதங்கள் கழித்துத்த தாயகம் திரும்பும் மகிழ்ச்சியுடனிருக்கும் அவரும் நானும் நிற்கிறோம்,சில வார்த்தை பரிமாற்றங்கள் நடக்கிறது. நாங்கள் ஒருவரையொருவர் கடந்து போன பின் எங்களுக்கு எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை. மீன்டும் எங்காவது சந்தித்தால்கூட அடையாளம் தெரியப்போவதில்லை.ஆனால் அந்த சில நிமிடங்களில் அவர் என்னை நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் கிட்டத்தட்ட ஒரு சகோதரி போல நினைப்பது என்னவோ உண்மைதான்.
இப்படியெல்லாம் முகம் தெரியாதவர்களுடன் பேசாதீர்கள் என்று பல முறை எச்சரிக்கப்பட்டிருந்தாலும் மற்ற்வர் பேசும்போது முகத்தைத் திருப்பிக்கொள்ளவா முடியும்?
ஒரு முறை ஆஸ்திரேலியாவிலிருந்து நான் (இப்பவும் தனியாக)சிங்கப்புர் வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிளேனில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். பக்கத்து இருக்கையில் ஒரு ஐரோப்பியர் அமர்ந்து வருகிறார்.சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேல் இருவரும் எந்த நிறுத்தமும் இல்லாமல் அருகருகே உட்கார்ந்து வருகிறோம். முதல் இரன்டு மணி நேரம் ஒன்றுமே பேசாமல் பயணிக்கிறோம். நான் என் இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வெண்டுமென்றால் அவரைத் தாண்டிதான் செல்லவேண்டும். சாப்பாடு வருகிறது.சாப்பிடுகிறோம்.
ஒரு கட்டத்தில் அவர் ஏதோ என்னைக் கேட்க முயல்கிறார் ஆனால் அது எனக்குப்புரியவில்லை. நான் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்கிறேன் ஆங்கிலத்தில். ஆங்கிலம் எனக்குத்தெரியாது(english no) என்கிறார்.
எப்படியோ என் கேள்வியை புரிய வைத்து அவர் berlin என்று சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  நீ….. என்பது போல அவர் கையைக்காட்ட  நான் இந்தியா சென்னை என்கிறேன். அவர் தனக்கு இந்தியாவையும் சென்னையையும் தெரியாது என்பது போல தோளைக் குலுக்குகிறார். ஆனால் உலகம் முழுக்க பல இடங்களைச் சொல்லி அங்கெல்லாம் போய்க் கொன்டிருப்பதாகக் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு berlin தெரிகிறது. ஆனால் அவருக்கு இந்தியாவைத் தெரியவில்லையே என்று. ஆனால் பயணம் முழுக்க நட்புப்புன்னகை அவர் முகத்தில் மாறவேயில்லை மற்றபடி திரும்பவும் பழய கதைதான் சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்தவுடன் அவர் ஒரு (terminal)திசையில் சென்றார். நான் வெறு( terminal)திசையில் சென்றேன்.
ஒருமுறை இதேபோல‌ சிஙப்பூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறேன். ப‌க்க‌த்தில் ஒரு த‌மிழ்ப் பெண்ம‌ணி ப‌ய‌ண‌ம் முழுவ‌தும் ந‌ம் நாட்டைப்ப‌ற்றி மிக‌ தாழ்வாகப் பேசிய‌ப‌டி வந்தார். விமான‌ம் த‌ரையைத் தொட்ட‌தும் என்ன‌ சென்னை மிக‌வும் அழுக்காக‌ இருக்கிற‌தே , நான்  சென்னை வந்து நாலு வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து,ம‌றுப‌டி இப்போதுதான் வ‌ருகிறேன் என்றார்.என‌க்கு ல‌க்கேஜ் கொஞ்ச‌ம் அதிக‌ம் உள்ள‌து நீங்க‌ள் அட்ஜ‌ஸ்ட் செய்து த‌ருகிறீர்க‌ளா என்றார். நான் விமான‌த்திலிருந்து இற‌ங்கி என் ல‌க்கெஜ்க‌ளை சேக‌ரித்துக்கொண்டு ஓட்ட‌ம் பிடித்தேன்!
இப்ப‌டியெல்ல‌ம் ப‌ய‌ண‌ங்க‌ளில் ப‌ல‌வ‌கை அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும்.யாரிட‌மும் ந‌ம‌து முழு முக‌வ‌ரியையும் கொடுப்ப‌தில்லை.ஆனால் மிக‌ நெருங்கிய‌ சினேகித‌ர்க‌ள் போல‌ ப‌ழகிப் பேசிவிட்டு ந‌டையைக் கட்டுவ‌து ஒரு வினோத‌மான‌ அனுப‌வ‌ம்.

Advertisements

7 பதில்கள் to “ஆகாய‌த்தில் சினேக‌ம்!”

 1. அறுமையான அனுபவம்… மொழி மனிதனுகு எவ்வளவு தடையாக இருக்கிறது… இவ்வளவு வேறுபாட்டிலும் நம் அனைவரும் மரணத்தை நோக்கிதான் பயணம் செய்கிறோம்…

 2. நீங்கள் நினைக்கிறீர்கள் நாம் மரணத்தை நோக்கிப் பயணிப்பதாக. அவர்கள் நினைக்கிறார்கள் வாழ்வை நோக்கி அவர்கள் பயணிப்பதாக.இரண்டுமே உண்மைதானே?
  பதிவுக்கு வருகை தந்தமைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
  அன்புடன் கமலா

 3. வாழ்வுக்கு முற்றுப்புள்ளி மரணம் தானே அம்மா…? தவறான கருத்தை தெரிவித்துவிட்டேன் போலும்… மன்னிக்கவும்… உங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்… அது வரையில் வணக்கம்…

 4. நமது வாழ்க்கை என்பதே ஒரு பயணம் தான்… ஆனால் என்ன ஒருவழிப்பயணம்.
  மனிதனின் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு தேவையை நோக்கியே…
  துணைகள் கிடைக்கும் போது பயணம் அலுப்பின்றி செல்கின்றது…
  துணைகள் கிட்டாதபோது பயணம் அலுக்கின்றது…

  நல்ல அனுபவங்கள்.

  வாழ்த்துக்கள்.
  அன்புடன்,
  மா. கலை அரசன்.

 5. எல்லோரும் என்னமோ ரொம்ப வேதந்தமாகப் பேசுகிறீர்கள். நான் எழுதினது உலகம் சிறியதாக ஆனதைச் சொல்லவும், பிளேனில் ஏறினால் ஜாதியும் மதமும் காணாமல் போவது பற்றியும்தான். மனிதம் என்பதை உணர்த்தத்தான். அவரவருக்குத் தோணியதை எழுதியதற்கு நன்றி!
  கமலா

 6. soundr said

  oru kaalathil “rayil sneham”
  pinbu “kappal sneham”
  indru “plane sneham”
  [nalla vaelai. flightil airhostess biscuit tharugiral. saga payani idam vaanga vaendaam]

 7. kamala said

  nalla joke!rasiththen!
  kamala

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: