Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for ஜனவரி, 2008

அப்பாவா? அம்மாவா?

Posted by kalyanakamala மேல் ஜனவரி 29, 2008

ஐந்தாம் தேதி  பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்து போன என்னுடைய தந்தையின் நினைவு நாள். எனக்கு அன்றைக்கு எல்லா சிலவுகளையும் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒரு வேகம் மனதில். சில சடங்குகளைச்செய்வது வழக்கம்.தம்பி,தமயன் மற்றும் அவர்கள் மனைவியர் காரியங்களைச் செய்வார்கள். புரொகிதர்கள் வந்து சிலபல சாங்கியங்களைச் செய்து சாப்பாடு சாப்பிட்டு விட்டுப்போவார்கள்.. அப்பாவும் அவர் மூதாதையர்களும் அன்று வீட்டுக்கு  வருவதாக ஐதீகம். பெண் பிள்ளைகளுக்கு அண்ணன் தம்பிமார்கள் அழைப்பு விடுப்பார்கள் வந்து கலந்து கொள்ளச்சொல்லி. எனக்கு ஒரு எண்ணம் நாமும்தானெ பிறந்தோம் அந்த அப்பாவுக்கு ,ஏன் நாம் அப்படிச் சாப்பாடு போட்டு அந்தச் சடங்கை தனியாகச் செய்யக்கூடாது?
அம்மாவிடம் கேட்டேன்.அம்மாவுக்கு எண்பது வயது. எந்தப் பிள்ளையும் தன் பிள்ளைதான்.அம்மா சொன்னாள் ” நான் இருக்கும் வரை எல்லோரும் சேர்ந்தே செய்து விடுங்கள். தனித் தனியா போக வேண்டாம்”.அம்மா என்றொரு ஜீவன் எப்போதும் இணக்கும் சக்தியாகவே செயல்படுகிறது.”வேண்டுமானால் உன்னால் முடிந்ததை வாங்கிக் கொடேன் அப்பா என்ன வாய் திறந்தா கேட்கப் போகிறார்”.
  சரிதான் நம்மால் முடிந்ததை வாங்கி கொடுப்போம் அம்மா சொல்வதும் சரிதான்!
இரண்டு நாள் முன்பு அம்மாவுக்கு காலில் வலி வந்தது. மருந்துக்கு தன் கைப்பணத்தை எண்ணி எண்ணிக் கொடுத்தார்.மனதிலே ஒரு பொரி!செத்துப்போன அப்பாவுக்கு செய்ய ஆசைப்பட்டேன் இருக்கிற அம்மாவுக்கு நிறையவே செய்யலாமே. அதனால் அப்பாவுக்கு ஒரு ஆத்மா என்று ஒன்று இருந்தால் நிசமாகவே சந்தோஷப்படுமே என்று தோன்றியது.செய்து விட்டேன் இப்பொழுதே மனதும் கையும் நிறைய!
சரிதானே நண்பர்கள?

Advertisements

Posted in Uncategorized | 9 Comments »

புரியவில்லை!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 26, 2008

அடிக்கடி எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் முகத்தில் வீக்கத்துடன்  இங்கு

இடித்துக்கொண்டேன்,அங்கு இடித்துக்கொண்டேன் என்று சொல்ல்லியபடி வேலைக்கு

 வருவாள்.எனக்கு சந்தேகமாகயிந்தது.அடிக்கடி இடித்துக்கொள்வாளா?இப்படி

இடித்துக்கொண்டால் இப்படிக் காயமாக வாய்ப்பே இல்லை என்பது போல என் மனம்
 
சிந்தித்தது.

இந்த முறைக் கேட்டே விட்டேன்.

   ” கண‌வன் குடிப்பானா?”என்று.

   “இல்லைய‌ம்மா? சும்மா வாய்ச்ச‌ண்டை ,கையால் த‌ள்ளி விட்டார் வேகமாக

விழுந்து சுவ‌ரில் இடித்துக்கொண்டேன் “என்றாள்.

இப்ப‌டி பெண்க‌ள் ம‌றைக்கிறார்க‌ள் என்ப‌து ஆண்க‌ளுக்கு ஒரு க‌வ‌ச‌மா?

   கேட்டேன் அவ‌ளிடம் ” இப்படி ம‌றைக்கிறாயே? இது நல்லதுக்கா? ”

    அடித்து விட்டு ,வீங்கிய‌ பின் டாக்ட‌ரிட‌ம் போ என்கிறார். அடிக்கும் முன்

தெரிவதில்லை.

‘நீ போலிசுக்கு போயிருக்க‌ணும்.அதுதான் ச‌ரி”இது நான்.

 “போலிசுக்குப் போய் பெரிது ப‌ண்ண முடியாத‌ம்மா. பிள்ளைக‌ள் இருக்கிறார்க‌ள்.

இதோ நாளைக்கு ச‌ரியாகிடும் காய‌ம். பிள்ளைக‌ள் அப்ப‌ன் இல்லாம‌ல் வாழ்வ‌து அப்ப‌டி

ச‌ரியாகிற‌ காரிய‌ம் இல்லைய‌ம்மா‌.பிள்ளைக‌ளும் நாளைக்கு ஒத்துக்

கொள்ள‌மாட்டாங்க‌.இர்ண்டு நாள் அம்மா வீட்டுக்குப்போனால் கூட‌ அப்பா‌வை

நினைத்துக்கொள்வார்க‌ள்.”

அவ‌ள் விஷ‌ய‌ம் தெரிந்த‌‌வ‌ளா இல்லை நான் தெரிந்த‌‌வ‌ளா?புரிய‌வில்லை

Posted in Uncategorized | 9 Comments »

ரஜனி ஒரு சூரிய நட்சத்திரம்!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 14, 2008

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கலைஞர் டீவீ யில் சிவாஜி விழா (நூற்று எழுபத்தைந்து நாட்கள்)கொண்டாட்டங்களைப் பார்த்தேன்.எல்லாதுறையைச் சேர்ந்தவர்களுக்கும் சிவாஜியில் பணிபுரிந்ததற்காக பரிசுகள் வழங்கப்பட்டன. வைரமுத்து ,பா.விஜய்,சுஜாதா,விவேக்,ஸ்ரேயா,படப்பிடிப்பாளர்,படத்தொகுப்பளர் ,சாலமன் பாப்பையா,ராஜா,ஏ.வீ.எம்சரவணன் எல்லொரும் பேசின பின் முக்கிய பிரமுகர்களான ரஜனியும் கலைஞரும் பேசினார்கள்.
 விவேக் ,சரவணன் மற்றும் ஷங்கர் அருகிலிருந்து பழகிய காரணத்தால் ரஜனியின் குணங்கள் பழக்கவழக்கங்கள் பற்றிப் பேசியபோது எனக்கு வியப்பாக இருந்தது.மிகவும் எளிமையாக ரஜனி இருப்பதாகவும், உணவுக்கட்டுப்பாடு மிகக்கடினமாகப் பின் பற்றுவதாகவும்,ஒரு வார்த்தை டைரக்டரின் பேச்சுக்கு பதில் கூறாமல் நடிப்பாரென்றும் தன்னடக்கம் மிக்கவரென்றும் ,கடுமையான உழைப்பாளி என்றும்,அதிக செலவு தயாரிப்பாளர்களுக்கு வைக்காமல் நடப்பார் ,மிக நல்ல மனிதரென்றும் பேர் பேராகச்சொன்னார்கள். மிகவும் ஆசரியமாக இருந்தது. ஏதோ ஒருவர் அல்லது இருவர் சொன்னால் பணக்காரனைச் சுற்றிப்பத்து பேர் பயித்தியக்காரனைச்சுற்றி பத்து பேர் என்று விட்டு விடலாம். ஆனால் பேர் பேராக திரும்ப திரும்ப  அவரைப்பற்றி மிக நல்ல முறையில் எல்லொரும் பேசினார்கள். கடைசியில் கலைஞரும் அவரைப்பற்றி மிக நல்ல அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி விட்டு அவர் அவரது விசிறிகளால் ஒரு மகானாகவே போற்றப் படுபவர் என்றுமவர் ஒரு  சூரிய நட்சத்திரம் என்றும் எல்லாவற்றுக்கும் மகுடம் போன்ற புகழ் வார்த்தைகளை வீசினார். அத்தனைக்கும் ரஜனி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு யாருடைய மனமும் கோணாமல் கடைசியில் “வியுகம் அமைத்து இந்த வெற்றியை ஏற்படுத்தியது ஷங்கர்தான் “என்று பணிவுடன் கூறியது மறக்க முடியாத வார்த்தையாக இருந்தது.மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சி ரஜனி எவ்வளவு சிறந்த மனிதர் என்பதை எல்லோருக்கும் உணர ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
    அதற்கும் மேலே இந்த இனிய பொங்கல் நன்னாள் தொடங்கி நாமும்தான் முயற்சி செய்யலாமெ இப்படி ஒரு சிறந்த மனிதர் என்று எல்லோரிடமும் பெயர் வாங்க என்று எனக்கும் தோன்றியது என்னவோ உண்மைதான்!

Posted in Uncategorized | 4 Comments »

புதுமைப்பெண் கொடி!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 13, 2008

நாலு மாதம் முன்பு மதுரை போயிருந்தேன். தம்பி வீட்டில் இரண்டு  நாள் தங்கி விட்டு வந்தேன். அவன் வீடு மதுரையில் ஒரு தனி வீடு, வீட்டைச்சுற்றி தோட்டம். தம்பியும் தம்பி மனைவியும் அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள்.எல்லாவிதமான மலர்களும் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. பார்க்கவே ஆசையாக இருந்தது.
அதில் சீக்க்கிரமே முளைக்கக்கூடிய சங்குச்செடியின் விதைகளைப் பறித்துப்பையில் போட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.சென்னைக்கு வந்ததும் சங்குச்செடி விதைகளை ஒரு தொட்டியில் மண் போட்டு நீர் ஊற்றி ஊன்றி வைத்தேன். ஒரு மாதகாலம் தண்ணிர் ஊற்றியபின் மெதுவாகச்செடி முளைத்து வர ஆரம்பித்தது.மெதுவாக இரண்டு இலகள் நான்கு இலைகள் என்று வளர ஆரம்பித்தது. ஏழெட்டு இலைகளும் விட்டு கொஞ்சம் கொடியும் வளர்ந்தபின் கொடி நுனி அறுந்து விடப்போகிறதே என்று ஒரு கொம்பைப்பக்கத்தி வைத்தேன். கொடியும் மேலே வளர்ந்ததே தவிர கொம்பைச்சுற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.
நான் பார்த்தவரை  கொடி நீளமாக வளரத்தொடங்கியவுடனேயே  பக்கத்திலிருக்கும் எந்த ஒரு பற்றுதலையும் கொடிகள் சுற்றிக்கொள்வது இயல்பாக நடக்கும் ஒன்றுதானே?
இந்தக்கொடி என்னவோ இரண்டு மூன்று நான்கு அடிகள் என்று வளர்கிறது ஆனால் கொம்பை சுற்றிக்கொள்ளவேஇல்லை. பக்கத்திலிருக்கும் கிரில் (grilல்)மீதும் படர வில்லை.இப்போது இன்னும் சில கிளைகள் அதே செடியிலிருந்து வளர்கின்றன. அவைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன.
கொம்பை நாடாத கொடியாக இந்த சங்குச் செடியைப் பார்த்தவுடன் அந்தச்செடிக்கு புதுமைப்பெண் என்று பெயரிடத் தோன்றியது எனக்கு. சரிதானே?

Posted in Uncategorized | 6 Comments »

ந‌‌ம் ஆரோக்கிய‌ம் ந‌ம் கையில்!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 3, 2008

     முன்பெல்லாம் நிறைய சாப்பாடு சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் பெரியவர்கள்.
சாப்பிடுவதற்கு முன் எதையும் தின்னாதே, தண்ணீர் குடிக்காதே,பசியை அடைத்து விடும் என்று சொல்லுவார்கள். இப்போ எல்லாம் தலைகீழ்.எங்கும் இப்பொழுது தாரக மந்திரமாக இருப்பது அரிசியைக் குறை என்பதுதான். பால் குடி என்பார்கள் .மாடு மாதிரி கறிகாய்களைத் தின்பது கிடையாது . நிறைய சாப்பிடு, நிறைய வேலை செய் என்பதுதான் மந்திரமாக ஒலிக்கும்.
இப்போவெல்லாம் சின்ன வயதுப் பிள்ளைகள்கூட அரிசியைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பெல்லாம் காலையில் அரிசியால் செய்த பலகாரம் மதியம் சாப்பாட்டில் அரிசி இரவிலும் அரிசி.
அந்நாட்களில் வாழ்க்கை முறை வேறுமாதிரி இப்பொழுது வாழ்க்கை முறை எளிமையாகி விட்டது. மேலும் வெளியே வாங்கிச் சாப்பிடும் பொருட்கள் குறைவு.அனேகமாக பல வீடுகளில் அந்தப் பழக்கம் இல்லாமலேயே இருந்தது என்பதுதான் உண்மை.
இப்பொழுது காலை உணவென்றால் (corn flakes),ரொட்டி,காய்கறிகள்.பழங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.பழச்சாறு குடிக்க வற்புறுத்துகிறார்கள்.
பல பேர் மாடு மாதிரி காய்கறிகளையே தின்னுகிறார்கள்.
மதியம் திரும்ப ஸ்பூனால் அளவு செய்து சாப்பாடு சாபிடுகிறார்கள்.

மாலையில் தேனீருடன் பிஸ்கட் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.  முன்று வேளை சாப்பாடு என்பதும்  இடையிடையே மோர் அல்லது ஏதேனும் நிலக்கடலை அல்லது முறுக்கு போன்ற பலகாரங்களோ சாப்பிடுவது என்பது பழக்கமாயிருந்தது போக ,இப்போ
காலை உணவு (அவர்கள் கொடுக்கும் பட்டியலைப் பார்த்தாலே நடுத்தர வர்கத்து மனிதர்களுக்குப் பயமாயிருக்கும்)முற்பகல் உணவு, மதிய உணவு,மாலை உணவு இரவு உணவு என்று நாலு முறையாகப் பிரித்து உண்ணச்சொல்கிறார்கள்.
ஏரொபிக் செய்யச்சொல்கிறார்கள்.பெரியவர்களானால் நடக்கச்சொல்கிறார்கள்.
வாழ்க்கை முறை மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம்.
      நடப்பது என்பதும் ஏரோபிக் என்பதும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததது மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் இனிமேல் ஆட்டுக்கல்லையும் அமியையும் கொண்டு வர முடியும் என்று தொன்ற வில்லை. ஆனால் சைக்கிள் என்பது ஆரொக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்னவோ உண்மைதான். அதை ஏன் நாம் விட்டோம்? சீனாவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் சைக்கிளை மிகவும் உபயோகப்படுத்துகிறார்கள். கிழக்காசிய நாடுகளில் சைக்கிள் நடை முறையில் இருந்து வருகின்றது. அதை நாம் கை விட்டது பெரிய தவறாகப்போய் விட்டது. திரும்ப அதைப் பழக்க வேண்டும்.
     ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலொமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு நடந்து போவதை ஒரு கட்டயமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பணம் செலவு செய்து பெட்ரோல் செலவழித்து மோட்டார் சைக்கிள் போன்ற வாகனக்களில் போவதைத் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளையும் நேரத்தில் எழுந்து சீக்கிர‌மாக குளித்து ,உணவு சாப்பிட்டு நடந்து பள்ளிகளுக்கு செலவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். கூடிய வரைத் துணிகளைத் துவைக்க மெஷின்களைப் பயன் படுத்தாமல் இருந்தாலே ,கையால் துவைக்கும்போது நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.வீடு பெருக்குவது, துடைப்பது ஒரு நல்ல exercise.தினமும் செய்வது கடினமாயிருந்தாலும் இரன்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நம் துணிகளை நாமே துவைக்கலாம்.காலை மற்றும் மாலையில் காலார நடப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ந‌டந்து போய் ஏதாவது ஒரு வேலையைச்செய்து விட்டு வரலாம்.இவ்வாறு பல வழிகளிலும் நம்மை நாமே உணர்ந்து சில பழக்கங்களை மேற்கொண்டால் தனியாக ஆரொக்கியம் குறித்துக்கவலைப்பட வேண்டாம்.

Posted in பொது | 6 Comments »