Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

ந‌‌ம் ஆரோக்கிய‌ம் ந‌ம் கையில்!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 3, 2008


     முன்பெல்லாம் நிறைய சாப்பாடு சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் பெரியவர்கள்.
சாப்பிடுவதற்கு முன் எதையும் தின்னாதே, தண்ணீர் குடிக்காதே,பசியை அடைத்து விடும் என்று சொல்லுவார்கள். இப்போ எல்லாம் தலைகீழ்.எங்கும் இப்பொழுது தாரக மந்திரமாக இருப்பது அரிசியைக் குறை என்பதுதான். பால் குடி என்பார்கள் .மாடு மாதிரி கறிகாய்களைத் தின்பது கிடையாது . நிறைய சாப்பிடு, நிறைய வேலை செய் என்பதுதான் மந்திரமாக ஒலிக்கும்.
இப்போவெல்லாம் சின்ன வயதுப் பிள்ளைகள்கூட அரிசியைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பெல்லாம் காலையில் அரிசியால் செய்த பலகாரம் மதியம் சாப்பாட்டில் அரிசி இரவிலும் அரிசி.
அந்நாட்களில் வாழ்க்கை முறை வேறுமாதிரி இப்பொழுது வாழ்க்கை முறை எளிமையாகி விட்டது. மேலும் வெளியே வாங்கிச் சாப்பிடும் பொருட்கள் குறைவு.அனேகமாக பல வீடுகளில் அந்தப் பழக்கம் இல்லாமலேயே இருந்தது என்பதுதான் உண்மை.
இப்பொழுது காலை உணவென்றால் (corn flakes),ரொட்டி,காய்கறிகள்.பழங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.பழச்சாறு குடிக்க வற்புறுத்துகிறார்கள்.
பல பேர் மாடு மாதிரி காய்கறிகளையே தின்னுகிறார்கள்.
மதியம் திரும்ப ஸ்பூனால் அளவு செய்து சாப்பாடு சாபிடுகிறார்கள்.

மாலையில் தேனீருடன் பிஸ்கட் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.  முன்று வேளை சாப்பாடு என்பதும்  இடையிடையே மோர் அல்லது ஏதேனும் நிலக்கடலை அல்லது முறுக்கு போன்ற பலகாரங்களோ சாப்பிடுவது என்பது பழக்கமாயிருந்தது போக ,இப்போ
காலை உணவு (அவர்கள் கொடுக்கும் பட்டியலைப் பார்த்தாலே நடுத்தர வர்கத்து மனிதர்களுக்குப் பயமாயிருக்கும்)முற்பகல் உணவு, மதிய உணவு,மாலை உணவு இரவு உணவு என்று நாலு முறையாகப் பிரித்து உண்ணச்சொல்கிறார்கள்.
ஏரொபிக் செய்யச்சொல்கிறார்கள்.பெரியவர்களானால் நடக்கச்சொல்கிறார்கள்.
வாழ்க்கை முறை மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம்.
      நடப்பது என்பதும் ஏரோபிக் என்பதும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததது மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் இனிமேல் ஆட்டுக்கல்லையும் அமியையும் கொண்டு வர முடியும் என்று தொன்ற வில்லை. ஆனால் சைக்கிள் என்பது ஆரொக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்னவோ உண்மைதான். அதை ஏன் நாம் விட்டோம்? சீனாவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் சைக்கிளை மிகவும் உபயோகப்படுத்துகிறார்கள். கிழக்காசிய நாடுகளில் சைக்கிள் நடை முறையில் இருந்து வருகின்றது. அதை நாம் கை விட்டது பெரிய தவறாகப்போய் விட்டது. திரும்ப அதைப் பழக்க வேண்டும்.
     ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலொமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு நடந்து போவதை ஒரு கட்டயமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பணம் செலவு செய்து பெட்ரோல் செலவழித்து மோட்டார் சைக்கிள் போன்ற வாகனக்களில் போவதைத் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளையும் நேரத்தில் எழுந்து சீக்கிர‌மாக குளித்து ,உணவு சாப்பிட்டு நடந்து பள்ளிகளுக்கு செலவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். கூடிய வரைத் துணிகளைத் துவைக்க மெஷின்களைப் பயன் படுத்தாமல் இருந்தாலே ,கையால் துவைக்கும்போது நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.வீடு பெருக்குவது, துடைப்பது ஒரு நல்ல exercise.தினமும் செய்வது கடினமாயிருந்தாலும் இரன்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நம் துணிகளை நாமே துவைக்கலாம்.காலை மற்றும் மாலையில் காலார நடப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ந‌டந்து போய் ஏதாவது ஒரு வேலையைச்செய்து விட்டு வரலாம்.இவ்வாறு பல வழிகளிலும் நம்மை நாமே உணர்ந்து சில பழக்கங்களை மேற்கொண்டால் தனியாக ஆரொக்கியம் குறித்துக்கவலைப்பட வேண்டாம்.

Advertisements

6 பதில்கள் to “ந‌‌ம் ஆரோக்கிய‌ம் ந‌ம் கையில்!”

 1. எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய எழிய முறைகள் தான்.

 2. உண்மைதான் புதிது புதிதாய் தொழில்நுட்பங்கள் வர வர மனிதர்களின் பழக்கவழக்கங்களும் மாறி, அழிவுப்பாதையை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது! இப்பொழுது ஒரு விசையைத்தட்டினால் வேண்டியன எல்லாம் கிடைக்கின்ற அளவுக்கு வந்துவிட்டன. மனிதர்களும் தேமே என்று சோம்பேறித்தனப்பட்டுக் குழியில் கிடக்கின்றனர்

  உடற்பயிற்சியில் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டியனவற்றை ஆபரேஷனில் செயல் படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இது எங்கே போய் முடியுமோ…!

 3. surya said

  நல்ல பதிவு..

  வாழ்த்துக்கள்…

  சூர்யா
  சென்னை
  butterflysurya@gmail.com

 4. umapathy said

  நல்லதோர் பதிவு. நான் சைக்கிளைப் பயன்படுத்துகின்றேன் ஆயினும் ஆபிஸுக்கு மோட்டார் சைக்கிளில்தான் வருகின்றேன். சைக்கிளில் வருவதை இப்பொழுது நாகரீகக்குறைவாகக் கருதுவார்களோ என்ற ஈகோ பிரச்சினைதான். மற்றும்படி சைக்கிள் நல்லதோர் உடற்பயிற்சி சாதனம் முன்னர் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் உடல் அப்பியாசத்துக்காக 5-10 கிலோமிட்டர்கள் செல்வேன் இப்போது இலங்கையில் நடந்துவரும் பிரச்சினைகளால் இப்போது செய்வதில்லை அதனால் உடற்பருமனும் சற்றே கூடிவிட்டது.

 5. venu said

  very nice.everybody should follow.

  venu

  oman

 6. soundr said

  if i’m not wrong, in tamilnadu cycle has now become a kids vehicle. no adult, irrespective of his affordability or life standard wants to cycle. whatever the justifications may be i would sum up my opinion as “perumaiku panni maypathu”.
  even today in many places of northindia you could see many people using cycle, even teen agers. everyday morning you could see hundreds of workers cycling to their job in the roads that lead to delhi from neighbouring states.
  i doubt in tamilnadu even the lowest working class people need atleast a moped.
  thangarpachchan’s comment thaan ninaivukku varuthu- “tamilan orupaduvana, sir”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: