Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

புதுமைப்பெண் கொடி!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 13, 2008


நாலு மாதம் முன்பு மதுரை போயிருந்தேன். தம்பி வீட்டில் இரண்டு  நாள் தங்கி விட்டு வந்தேன். அவன் வீடு மதுரையில் ஒரு தனி வீடு, வீட்டைச்சுற்றி தோட்டம். தம்பியும் தம்பி மனைவியும் அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள்.எல்லாவிதமான மலர்களும் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. பார்க்கவே ஆசையாக இருந்தது.
அதில் சீக்க்கிரமே முளைக்கக்கூடிய சங்குச்செடியின் விதைகளைப் பறித்துப்பையில் போட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.சென்னைக்கு வந்ததும் சங்குச்செடி விதைகளை ஒரு தொட்டியில் மண் போட்டு நீர் ஊற்றி ஊன்றி வைத்தேன். ஒரு மாதகாலம் தண்ணிர் ஊற்றியபின் மெதுவாகச்செடி முளைத்து வர ஆரம்பித்தது.மெதுவாக இரண்டு இலகள் நான்கு இலைகள் என்று வளர ஆரம்பித்தது. ஏழெட்டு இலைகளும் விட்டு கொஞ்சம் கொடியும் வளர்ந்தபின் கொடி நுனி அறுந்து விடப்போகிறதே என்று ஒரு கொம்பைப்பக்கத்தி வைத்தேன். கொடியும் மேலே வளர்ந்ததே தவிர கொம்பைச்சுற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.
நான் பார்த்தவரை  கொடி நீளமாக வளரத்தொடங்கியவுடனேயே  பக்கத்திலிருக்கும் எந்த ஒரு பற்றுதலையும் கொடிகள் சுற்றிக்கொள்வது இயல்பாக நடக்கும் ஒன்றுதானே?
இந்தக்கொடி என்னவோ இரண்டு மூன்று நான்கு அடிகள் என்று வளர்கிறது ஆனால் கொம்பை சுற்றிக்கொள்ளவேஇல்லை. பக்கத்திலிருக்கும் கிரில் (grilல்)மீதும் படர வில்லை.இப்போது இன்னும் சில கிளைகள் அதே செடியிலிருந்து வளர்கின்றன. அவைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன.
கொம்பை நாடாத கொடியாக இந்த சங்குச் செடியைப் பார்த்தவுடன் அந்தச்செடிக்கு புதுமைப்பெண் என்று பெயரிடத் தோன்றியது எனக்கு. சரிதானே?

Advertisements

6 பதில்கள் to “புதுமைப்பெண் கொடி!”

  1. madurai products are like that…..they are very unique……

  2. பாஷா………..இவ்வளவு தனித்துவமா மதுரை பிராடக்ஸ்க்கு……
    தேவையா இவ்வளவு தனித்துவம்? புரியவில்லை.
    அன்புடன் கமலா

  3. sruthi said

    Madam,
    yenakku itha paducha udana,athu oru nalla kudumban nu thochuchu.oru nalla family la than,yellorum oruthorukkoruthar,yellathaiyum share pannippanga.:-)))
    sruthi

  4. அப்படியும் வச்சிக்கலாம் தப்பொண்ணும் இல்லை!
    அன்புடன்
    கமலா

  5. சங்குபுஷ்பத்துக்கு இப்படி ஒரு க்குணமா;)0
    நன்றி.
    வாழ்க புதுமைப் பெண்.

  6. நன்றி ரேவதி நரசிம்மன் வருகைக்கும் கருத்துக்களுக்கும்!
    அன்புடன் கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: