Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

அப்பாவா? அம்மாவா?

Posted by kalyanakamala மேல் ஜனவரி 29, 2008


ஐந்தாம் தேதி  பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்து போன என்னுடைய தந்தையின் நினைவு நாள். எனக்கு அன்றைக்கு எல்லா சிலவுகளையும் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒரு வேகம் மனதில். சில சடங்குகளைச்செய்வது வழக்கம்.தம்பி,தமயன் மற்றும் அவர்கள் மனைவியர் காரியங்களைச் செய்வார்கள். புரொகிதர்கள் வந்து சிலபல சாங்கியங்களைச் செய்து சாப்பாடு சாப்பிட்டு விட்டுப்போவார்கள்.. அப்பாவும் அவர் மூதாதையர்களும் அன்று வீட்டுக்கு  வருவதாக ஐதீகம். பெண் பிள்ளைகளுக்கு அண்ணன் தம்பிமார்கள் அழைப்பு விடுப்பார்கள் வந்து கலந்து கொள்ளச்சொல்லி. எனக்கு ஒரு எண்ணம் நாமும்தானெ பிறந்தோம் அந்த அப்பாவுக்கு ,ஏன் நாம் அப்படிச் சாப்பாடு போட்டு அந்தச் சடங்கை தனியாகச் செய்யக்கூடாது?
அம்மாவிடம் கேட்டேன்.அம்மாவுக்கு எண்பது வயது. எந்தப் பிள்ளையும் தன் பிள்ளைதான்.அம்மா சொன்னாள் ” நான் இருக்கும் வரை எல்லோரும் சேர்ந்தே செய்து விடுங்கள். தனித் தனியா போக வேண்டாம்”.அம்மா என்றொரு ஜீவன் எப்போதும் இணக்கும் சக்தியாகவே செயல்படுகிறது.”வேண்டுமானால் உன்னால் முடிந்ததை வாங்கிக் கொடேன் அப்பா என்ன வாய் திறந்தா கேட்கப் போகிறார்”.
  சரிதான் நம்மால் முடிந்ததை வாங்கி கொடுப்போம் அம்மா சொல்வதும் சரிதான்!
இரண்டு நாள் முன்பு அம்மாவுக்கு காலில் வலி வந்தது. மருந்துக்கு தன் கைப்பணத்தை எண்ணி எண்ணிக் கொடுத்தார்.மனதிலே ஒரு பொரி!செத்துப்போன அப்பாவுக்கு செய்ய ஆசைப்பட்டேன் இருக்கிற அம்மாவுக்கு நிறையவே செய்யலாமே. அதனால் அப்பாவுக்கு ஒரு ஆத்மா என்று ஒன்று இருந்தால் நிசமாகவே சந்தோஷப்படுமே என்று தோன்றியது.செய்து விட்டேன் இப்பொழுதே மனதும் கையும் நிறைய!
சரிதானே நண்பர்கள?

Advertisements

9 பதில்கள் to “அப்பாவா? அம்மாவா?”

  1. ramanca5 said

    sariyana seyal.Eppavavudhu purinthukondal sarithan

  2. kamalaa said

    எப்பவோ தெரிந்ததுதான்!இப்பத்தான் எழுதமுடிந்தது.
    நன்றி.

    கமலா

  3. Raja said

    //அம்மா என்றொரு ஜீவன் எப்போதும் இணக்கும் சக்தியாகவே செயல்படுகிறது//
    This single sentence conveys me a lot. Good thought madam.

  4. Inba said

    Nalla thot….
    hmm… Unnmai unnmai…
    This is how we fail in many situations…

    Irrupadhai… rasika markakirrom…
    Parakka thudikurom !!

  5. ராஜா மற்றும் இன்பா பொன்ற நண்பர்களே ந‌ன்றி!
    அன்புடன்
    கமலா

  6. அம்மா எண்ணி எண்ணி கொடுப்பார்.
    ஏன் எல்லா அம்மாக்களும் இப்படி இருக்கிறார்கள்.

    எண்ணும்படி ஏன் வந்தது. நான் எத்தனையோ எண்ணாமலேயே செலவு செய்கிறேன்.
    இவை எல்லாம் அம்மா இருக்கும்போது நினைத்தவை.
    நீங்கள் செய்த அதே எண்ணம் வந்து அந்த விசேஷங்களின் போது இப்போது
    சமைப்பவருக்கும், புரோஹிதர்களுக்கும் சம்பாவனை செய்வதில் பங்கு கொள்கிறேன்.

    நல்லதே செய்தீர்கள் கமலா.

  7. sri said

    // சரிதானே நண்பர்கள?
    I don’t know you – but I know it is 100+% correct 🙂
    Thank you!

  8. soundr said

    “அம்மா என்றொரு ஜீவன் எப்போதும் இணக்கும் சக்தியாகவே செயல்படுகிறது”
    “அப்பாவுக்கு செய்ய ஆசைப்பட்டேன் இருக்கிற அம்மாவுக்கு நிறையவே செய்யலாமே”
    i respect your feelings and agree with you.

    [however when i go thru many of your posts i cant resist to say, you quote many worthy phrases and sentences. if possible please register them.]

  9. kamala said

    thankyou!
    kamala

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: