Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

ஒரு தாயின் மரணம்……….

Posted by kalyanakamala மேல் பிப்ரவரி 13, 2008


மரணம் நம் சொந்த பந்தங்களை நம்மிடமிருந்து பிரிக்கிறது என்பதை மட்டும் நாம் நினைக்கிறோம். மரணத்தின் மறுபக்கம் என்ன?
நம் அன்புக்குறியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் மரணத்தின் மறுபக்கம் ஒன்று உள்ளது என்பது நாம் பலரும் அதிகம் யோசிக்காத ஒன்று.
 என் தாயின் மரணம் எனக்கு அதை மிக நன்றாகக்காட்டியது.

அதிகம் பேசாத மென்மையான (புதுமைப்பெண்களிடமிருந்து சுத்தமாக மாறுபட்ட)என் அன்புத்தாயின்  மரணம் போன சனி இரவு நிகழ்ந்தது.
இப்படிக்கூட இறக்க முடியுமா என்ரு தோன்றியது எனக்கு?

அவர் எங்கோ அடுத்த ஊருக்குப்போவது போல இருந்தது,தொலை தூரப்பயணம் போவது போலக்கூட இல்லை.

மரணத்தை ஆவலுடன் அணைத்துக் கொள்ள மனம் ஆசைப்படுமோ? என் அம்மாவின் மனம் ஆசைப்பட்டது.

அவ‌ர் இத‌ய‌ம் விரிவடைந்த‌வ‌ர்(heart enlargement)இர‌த்த‌ அழுத்த‌ம் உள்ள‌வ‌ர். ஆனால் ப‌ல‌கால‌மாக‌ இர‌த்த‌ அழுத்த‌மும் ,heart enlargement ம் இருந்து வந்த‌‌தால் மாத்திரைக‌ள் சாப்பிட்டு வந்தார்.
போன‌ மாத‌ம் முத‌ல் உட‌ல் நிலை ந‌ல‌ம் குறைய‌ ஆர‌ம்பித்து மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ இருந்தார்.

மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ ஆகி விட்ட‌பின் ந‌ட‌மாட்ட‌ம் குறைந்த‌‌து. உட‌ல் ந‌ல‌ம் குறைந்ததாலும் மனந‌‌ல‌ம் மிக்க‌வ‌ராக‌ இருந்தார்.தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்!

தன் பிள்ளைகளுக்குத் தொல்லை தராமல் தான் கடவுளிடம் போய்ச்சேர ஓயாமல் பிரார்த்திதார்.

மாலை நாலு மணியளவில் படுக்கையில் கையை ஊன்றி எழுந்தார்.கலைந்திருந்த கூந்தலை சரி செய்யச் சொன்னார்.புடவையைச்சீர் செய்து கொண்டார்.பக்கத்திலிருந்த எல்லா மகன் மகள்களையும் பார்த்தார்.அனைவரையும் பார்த்து ஒவ்வொருவராக அருகிலழைத்தார்.ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்.
அதற்குப் பின் சரியாக ஒரு மணி நேரத்தில் சுவாசம் நின்றது.வலி என்றும் பிரிகிறோமே என்ற துன்பமென்றோ கொஞ்சம்கூடச் சொல்லவில்லை.எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?

Advertisements

8 பதில்கள் to “ஒரு தாயின் மரணம்……….”

 1. Nandha said

  //ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்//
  கல்யாணகமலா
  //எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.//

  //எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?//

  //தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்//

  உங்களது அனைத்து உணர்வுகளையும் நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

 2. நன்றி நந்தா!
  அன்புடன்
  கமலா

 3. கமலா, என் தாயும் சிரமப்பட்டார். ஆனால் மற்றவர்களை ஒரு உதவி கேட்பதற்கு முன் குறுகி விடுவார்.
  இறப்பதற்கு முன்னாள் எப்போதும் போல சீராகத் தலை பின்னி.,களைந்த தலைமுடியை குப்பைக் கூடையில் போட்டு ,
  என் வீட்டுக்கு நான் கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராய் மௌனம் காத்தார். நீ இங்கே இரு அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லவில்லை.
  அருமையான தாயை இழந்த உங்களுக்கு இன்னோரு அருமைத்தாயின் மகளாக ஆறுதல் சொல்கிறேன்.

 4. நன்றி
  அன்புடன் கமலா

 5. Ramya said

  I lost my Amma (Mother) couple of years ago too. I don’t think I ever will get over this. Feel sad all the time. People say time will heal. But I really don’t think so in my case.

  • அம்மாவின் இழப்பு வாழ்க்கை முழுவதும் தொடரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது மிகச்சரியான விஷயம்.இருந்தாலும் மற்ற உறவுகள் தரும் அன்பைப் பெற்று மகிழும் தன்மை காலப்போக்கில் வரலாம்.

 6. soundr said

  [i would prefer not to reply kamala for this blogpost. becoz, some blogposts like this donot flash opinions, but pass feelings that can only be exprerienced and hardly explained. At times empty reply too pass such feelings.]

 7. kamala said

  offcourse!
  kamala

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: