Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

ஓட்ஸோ ஓட்ஸ்!

Posted by kalyanakamala மேல் பிப்ரவரி 27, 2008


காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு.
ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது.
ஓட்ஸை மிக்சியில் பொட்டு நன்றாகப்பொடி செய்து விட்டு அதை கொதிக்கவைத்து சாப்பிடுவது கொஞச‌ம் எளிமையாக இருக்கும். மொந்தையாக ஓட்ஸ் கூழ் ஆகாமல் இருக்க உதவும்.
ஓட்ஸை பொடி செய்து மொத்தமாக ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸ் கூழ் தயாரித்த பின் அதில் மோர் விட்டு உப்பு போட்டும் சாப்பிடலாம். அல்லது அந்தக்கூழில் கொஞ்சம் ஒமம் போட்டு உப்பிட்டு சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்கும்.
ஓட்ஸ் கூழ் த‌ய‌ரித்த‌பின் அதில் உப்பு செர்த்து கார‌ட், சிறிது கோஸ் பொன்ற‌ மெல்லிய‌ காய்க‌றிக‌ளை வ‌த‌க்கிப்போட்டால் ந‌ல்ல‌ காலையுண‌வு என்ப‌தில் சந்தேக‌மே இல்லை. ஆனால் காய்க‌றிக‌ள் அள‌வு கொஞ்ச‌மாக‌ இருக்க‌ வெண்டும். நிறைய காய்கறிகள்  போட்டால் இலேசாக‌ இல்லாம‌ல் heavy  ஆக‌ ஆகிவிடும்

Advertisements

17 பதில்கள் to “ஓட்ஸோ ஓட்ஸ்!”

 1. நான் ஓட்ஸோ ஓட்ஸ், தலைப்பைப் பார்த்ததும் அரசியல்வாதிகளுக்கானது என்று எண்ணினேன்…இருப்பினும் பயனுள்ள செய்தியே….

 2. நன்றி சுப்பன்!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
  அன்புடன்
  க‌மலா

 3. bala said

  மோர் ஒட்சில் கொஞ்சம் கடுகு பச்சை மிளகாய் தாளிதம்
  மோர் ஒட்சில் மோர் மிளகாய் தாளிதம்
  மோர் ஒட்சில் மகாளி ஊறுகாய் தண்ணீர்
  மோர் ஒட்சில் வத்தல் குழம்பு

  கிட்ட தட்ட பாட்டி / அம்மா பழையது கரைச்சு கொடுப்பதை நினைவூட்டும்

 4. ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்!
  ஆனால் இதெல்லாம் வீட்டில் ரெடியாக இருக்கவேண்டுமே
  அன்புடன்
  கமலா

 5. Arun said

  ஓட்ஸை கஞ்சி காய்ச்சிவதை தவிர வேறு பலகாரம் செய்ய உதவுமானல் அதைப் பற்றி விளக்கம் தாருங்களேன்.

 6. kamalaa said

  நிச்சயமாயச் செய்யமுடியும்.விரைவில் எழுதுகிறேன்.தாளிக்கும் ஓசை ஜெய‌ஸ்ரீ அதைப் பார்த்துக்கொள்வார் என்று இருந்து விட்டேன்.
  அன்புடன்
  கமலா

 7. ஔஅருணா ராணி said

  இந்தியாவில் எந்த, எந்த எடையில் (packging), எந்தெந்த BRAND-ல் ஓட்ஸ் கிடைகிறது. விலை விபரம் தெரிந்தால் அதையும் தெரிவிக்கவும். எந்த BRAND சிறந்தது. அதை நான் உபயோகிக்க விரும்புகிறேன்.

 8. ஏங்க,

  இந்த ஓட்ஸ் எப்போதுமே உறிச்சு நசுக்கி தக்கையாக தூள்தூளாத்தான் கடயில விக்கிறாங்க. இது வேற வகையில தானியமா கிடைக்காது. கொஞ்சம் நல்லா இருந்தா இத சாதாரண கஞ்சி வெச்சு குடிக்கலாம்.

  இந்த ஓட்ஸ் விக்கிற விலைக்கு இந்த கஞ்சியை விட வேற சாதாரண நம்ப ஊர் கஞ்சி பெட்டருங்க. என்னங்க நான் சொல்லுறது?

  ஜயராமன்

 9. நம்ம ஊரு கஞ்சின்னு எதைச்சொல்லுரீங்க?புழுங்கரிசிக்கஞ்சி ,கேழ்வரகு(பயத்தம்பருப்பு,கோதுமை,உடைத்தகடலை)போட்ட‌ கஞ்சிய சொல்லுரீங்களா? அதெல்லாம் தயாரிக்க கொஞ்சம் மெனக்கிட வேண்டியிருக்கு. புழுங்கரிசிக்கஞ்சி கார்போஹைடிரேட் கொண்டது,மற்றும் ஃபைபர் இல்லாதது. புரோட்டின் மற்றும் ஃபைபர் கலந்தது இந்த ஓட்ஸ்தான். அதனாலதான் பலபேர் கவனத்தை இது கவர்ந்திருக்கு.கேழ்வரகுல இதற்கு சமமாக சில விஷயங்கள் இருந்தாலும் நான் சொன்னாப்போல வேலை மெனக்கிடணும், இல்லைன்ன‌ வாங்குற மாவுல திருப்தி பட்டுக்கணும்.இதெல்லாம் பார்க்கும் போது ஓட்ஸுக்கு மதிப்பு கூடுது. என்ன செய்வது?
  எனக்கும் நம்ம ஊரு கஞ்சி சாப்பிட ஆசைதான்.
  நீங்க சொல்லுற உடைச்சு தக்கையாக விக்கற ஓட்ஸ்தான் கஞ்சிக்கு நல்லது. கஞ்சின்னு மட்டும் செய்யணும்ன்னு இல்லை. மோர்க்கூழ் மற்றும் உப்புமா
  போல செய்யலாம்.ரவையை என்னென்ன மாதிரியெல்லாம் செய்து சாப்பிடுறோமோ அதையெல்லாம் இதிலும் செய்யலாம். இதுல சிரில் பார்ஸ் ன்னு குழந்தைகளுக்கும் ஏற்றர்ப்போல ஸ்னாக்ஸ் மாதிரியும் இருக்கு. ஒரு விஷயம் தெரிஞ்சிக்குஙக நெஸ்ட்லே,க்வாக்கர்,சாம்பியன்ன்னு பல பெரிய‌ கம்பெனிகள் இதை தயாரித்து ரெகார்ட் முறியடிக்கிற விற்பனையை செய்திருக்காங்கன்ன பார்த்துக்கங்களேன்!
  அன்புடன்
  கமலா
  அன்புடன்
  கமலா

 10. திரு ஔ அருணா ராணி!
  எல்லா பெரிய கம்பெனிகளும் ஒட்ஸ் தயரிக்கின்றன.இப்பொழுது தென்னிந்தியாவில் கஞ்சி தயரிக்கும் ஒட்ஸ் என்பதில் சாம்பியன் ஓட்ஸும், க்வாக்கர் ஓட்ஸும்தான் முதலிடம் வகிக்கின்றன என நினைக்கிறேன்.க்வாக்கர் அரை கிலோ 58 ரூபாய்.
  சாம்பியனும் கிட்டத்தட்ட அதே விலைதான் இருக்கும்.
  அன்புடன்
  கமலா

 11. ஔஅருணா ராணி said

  விரிவான தகவலுக்கு நன்றி மாமி.

  சக்கரை நோயுள்ளவர்களுக்கு நல்ல உணவு என்று சொல்ல கேள்வி பட்டுயிருக்கிறேன்.

  திரு/திருமதி. ஔஅருணா ராணி

 12. //kalyanakamala, நீங்களே சொல்லுங்க. என்னை எல்லாம் சமையல்ல உங்க அளவுக்கு ரொம்ப எதிர்பார்க்காதீங்க. நீங்க கேட்டதுக்காக…

  ஓட்ஸ்ல ரவை உபயோகிச்சு அல்லது ரவையும் சேர்த்து செய்ற எல்லாம் செஞ்சிருக்கேன். உப்புமா, கிச்சடி, சில கரைச்ச மாவு தோசைகளுக்கு… இப்படி.

  முக்கியமா எல்லா சூப்லயும் ஒரு பிடி சேர்த்து கொதிக்கவிடலாம்.(உப்பு கடைசியா போடணும்.) இது சேர்க்கும்போது கார்ன்ஃப்ளோர் சேர்க்கத் தேவை இல்லை.

  வெல்லம் பால் விட்டு பாயசம்- நெய் அதிகம் விடாததால கஞ்சின்னே சொல்லலாம். இந்த பாயசம் சீக்கிரம் தயாரிக்க முடிவதும், சர்க்கரையைவிட வெல்லம் போட்டா சுவையா இருக்கறதும் காரணம்.

  நான் அன்றாடம் ஓட்ஸ் கஞ்சிலயே பால் சர்க்கரை சேர்க்கறதில்லை. கடைந்த மோர், உப்பு போட்ட சூடான கஞ்சி எப்ப வேணா சாப்பிடத் தயாரா இருக்கேன். இதுவே என் அன்றாட ஃபேவரைட் ஐட்டம்.

  Bread, குக்கீஸ் எல்லாம் கடைகள்ல கிடைக்கறதையே சுலபமா வாங்கிடுவேன். செஞ்சு பார்த்ததில்லை. வீட்டுல யாருக்கும் ஆர்வம் இல்லை.//

  அருணா!
  தன்னடக்கம் மிக்க ஜெயஸ்ரீ சொல்லிட்டாங்க பாருங்க சரியாக!
  அன்புடன்
  கமலா

 13. ஓட்ஸப் பத்தி அருமையாச் சொல்லிப் போட்டீங்க அம்மிணி!. இன்னுங் கொஞ்சம் விவரங்களைக் கீழ்ழே குடுக்கிறேனுங்க!

  சுமாரா காலைல 6 மணிக்கு எந்திரிச்சதும் ஓட்ஸ் கஞ்சிய ஒரு கிளாஸ் அடிச்சுப் போடணும்.
  அப்புறம் ரெண்டு மணி நேரம் களிச்சுக் கப கபன்னு பசிக்கும் பாருங்க! அப்ப மறுபடியும் டைனிங் டேபிள்ல ஒக்காந்து ஒரு 6 இட்டிலியோ அல்லது 5 தோசையோ இல்லாட்டி 5 பூரியையோ ஒரு கட்டுக் கட்டிரோணும்! ஏனுங்க நாஞ் சொல்றது நல்லாயிருக்குங்களா?

 14. நீங்க பேசல்ல, உங்க வயசு பேசுது!நடத்துங்க!
  kamala

 15. ஒங்களப்பத்தி
  http://www.lathananthpakkam.blogspot.com ல்
  எழுதியிருக்கேன். பாருங்க!

 16. kamala said

  நன்றிகள் பல . ஒரு சந்தேகம், எழுதினது பல இருக்க ஓட்ஸ் உங்களைக் கவர்ந்ததற்கு என்ன காரணம்?
  கமலா

 17. […] ஜூலை 15, 2008 இல் 4:50 நான் (மருத்துவம்) Tags: Add new tag, மருத்துவம் ஓட்ஸோ ஓட்ஸ்! […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: