Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

உன்னை நேசிக்கும் கூட்டம்………………….

Posted by kalyanakamala மேல் மார்ச் 11, 2008


இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். திட்டமிடல் என்ற பெயரில்.திட்டமிடும் போது ஒரு மகனாக அல்லது மகளாக,தாயாக அல்லது தந்தையாக,கணவனாக அல்லது மனைவியாக,சகோதரனாக அல்லது சகோதரியாக மட்டுமே என்ன என்ன செய்யலாம் என திட்டமிடுகிறோம்.வேலை செய்யும் இடத்தில் செய்யவேண்டிய பணிகள் நிமித்தம் திட்டமிடவும் செய்கிறொம்.
     என்றைக்காவது ஒரு சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்? அதை நாம் எப்படி உபயொகித்து சில பல சிறந்தது என்று எல்லொராலும் கருதப்படுகிற செயலைச் செய்யமுடியும.
    முன்பு சொன்ன உறவு முறைகளை சந்தோஷப்படுத்த திட்டமிட்டு செயல்கள் செய்து வெற்றி பெற்றாலே போதுமே என்றுதான் பெரும்பாலும் எல்லொருக்கும் தோன்றும்.
    அதையும் தாண்டி சாதிக்கப்பிறந்தவர்கள் சில பல செயல்களைச் செய்கிறார்கள்.அதனால்தான் அவர்களைச் சாதிக்கப்  பிறந்தவர்களாக நினைக்கிறோம். அதற்கு மூலதனம் தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான உழைப்பு.
     தன்னம்பிக்கை எப்போது வரும்?
     தான் செய்யும் செயல் தீமை விளைவிக்காதது, ந‌ல்ல செயல்தான் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும்.அந்த செயலைச் செய்யும்போது ஏற்படும் அல்லல்கள் மற்றும் அவதுறுகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நாம் அந்த செயலை அனுபவித்து(விரும்பி)ச்செய்ய வேண்டும்.அதைத்தான் involvement என்கிறார்கள்.

     சில சமயங்களில் நாம் பார்ப்போம் சில தொழில்முனைவோர் (proffessionals)ஒரு வேலையில் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள் .அந்த வேலை அவர்களுக்கு மற்ற வேலைகளைவிட அதிக பணம் வர வாய்ப்பே இருக்காது. நேரம் அதிகமாகச் வழிக்கவேண்டியிருக்கும்.
  வேலை பளுவும் அதிகமிருக்கும். ஆனாலும் அதைச் செய்ய நினைப்பார்கள் .செய்தும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.காரணம் அந்த ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே ஆகும்.அந்த மாதிரி மனிதர்கள்தான் அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார்கள்.மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது என்பது சும்மா வருவதில்லை.மிகப் பெரிய பண்புகளில் தலையாய ஒன்று அது.உன்னை நம்புகிற கூட்டத்தையும் உன்னை நேசிக்கிற கூட்டத்தையும் சம்பாதிப்பது மிகவும் உயர்ந்தவை.
அதைப்போல நமக்கும் பல சமயங்களில் நாம் ஏன் இதை எடுத்துச் செய்யக்கூடாது என்று தோன்றும்படி  சில செயல்கள் நம் முன் நிற்கும். அந்ததருணங்களில் சிறிதுகூட அடுத்த சிந்தனைக்கு இடம் தராமல் நம்பிக்கை உள்ள ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ந‌ம் பிள்ளைகளுக்கு வளர்த்து விட வேண்டும்.அடுத்தவர் செய்யட்டுமே என்று ஒரு கணம் தவற விட்டால் ஒரு வாய்ப்பை நாம் வாழ்வில் தவற விடுகிறோம் எனப்பொருள்.  

Advertisements

11 பதில்கள் to “உன்னை நேசிக்கும் கூட்டம்………………….”

  1. suttipayan said

    //
    வேலை பளுவும் அதிகமிருக்கும். ஆனாலும் அதைச் செய்ய நினைப்பார்கள் .செய்தும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.காரணம் அந்த ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே ஆகும்.அந்த மாதிரி மனிதர்கள்தான் அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார்கள்.மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது என்பது சும்மா வருவதில்லை.மிகப் பெரிய பண்புகளில் தலையாய ஒன்று அது.உன்னை நம்புகிற கூட்டத்தையும் உன்னை நேசிக்கிற கூட்டத்தையும் சம்பாதிப்பது மிகவும் உயர்ந்தவை.
    //

    ந‌ல்ல‌ ப‌ண்பு வ‌ள‌ர்ச்சிக்கு ம‌ட்டும‌ல்ல வாழ்க்கைக்கும் அவ‌சிய‌ம்.சாத‌னை செய்ய‌வேண்டிய‌ ம‌ன‌ங்க‌ள் ம‌ன‌தில் ப‌திய‌வேண்டிய‌து. மிக்க‌ ந‌ன்றி

  2. நன்றி சுட்டிப் பையன்!வருகைக்கும் கருத்து தெரிவித்தத்ற்கும் நன்றி!
    அன்புடன்
    கமலா

  3. //
    தன்னம்பிக்கை எப்போது வரும்?

    தான் செய்யும் செயல் தீமை விளைவிக்காதது, ந‌ல்ல செயல்தான் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும்.
    //

    உண்மையில் தான் செய்யும் நிலைகளில் ஏற்படும் நம்பிக்கை, ஈடுபாடு, மற்றவர்களுக்கு அது உதவும் என்ற எண்ணம் எல்லாம்தான் நம்பிக்கையின் – தன்நம்பிக்கையின் அஸ்திவாரம். மிகவும் எளிமையான முறையில் வாழ்வியலின் நிலைகளைத் தொட்டுச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உணர முடிந்தது அனுபவத்தின் அறிவின் வலிமையை. தொடர்ந்தும் பதியுங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  4. நன்றி உதயதாரகை!proffessionals பற்றி சமீபத்திய அனுபவம் ஒன்று என்னை இப்படி எழுதத்தூண்டியது.படித்து பதில் எழுதியமைக்கு மிக்க நன்றி!
    அன்புடன்
    கமலா

  5. Saravanan said

    வரவேற்கத்தக்க வலிமையான கூற்று.

    இன்னுமொரு உயறிய வழியில் நாம் இதை அடையலாம். அனைவரையும் நேசிக்கும் பண்பை நம்முள் நாம் வளர்க்க முயர்ச்சிக்க வேண்டும். இப்பண்பு தான் நம் மனிதகுலம் ஒன்றுபட ஒரு மாபெரும் காந்த சக்தி. இதில் நாம் ஒவ்வொரும் வெற்றி பெற்றால் நம்மில் அனைவரையும் நேசிக்கும் அன்பு மயமான ஒரு புது உலகம் உருவாகி ஒற்றுமையான மனித நேயம் வளப்பட்டு இந்த வையகம் செழிக்கும்.

  6. Nataraj said

    // சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்?//

    சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

    //ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே//

    என்ற கருத்து மிகவும் அருமை. தங்களின் தன்னம்பிக்கை பதிவு இன்றைய இளைய தலைமுறையினர் க்கு முத்தாய்ப்பான கருத்தாக விளங்கும்.நன்றி

  7. “வரவேற்கத்தக்க வலிமையான கூற்று. ”

    நன்றி சரவணன்.

    “சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்?//

    சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.”

    சிந்தித்துக் கூறுங்கள்.காத்திருக்கிறேன்!

    ஒரு வாழ்வியல் கட்டுரைக்கு இந்த அளவுக்கு படித்து பதிலும் தருபவர்கள் வலைத்தளத்திலிருப்பது கண்டு மகிழ்ச்சி
    அன்புடன்
    கமலா

  8. Vivek said

    Well said madam!

  9. thankyou
    kamala

  10. கமலா அம்மிணி! கட்டுரை ரொம்ப நால்லா இருந்துச்சு! சந்தோசம். தெளிவான நடை. இயல்பான கருத்தூட்டம்.
    டைம் கெடைச்சா http://www.lathananthpakkam.blogspot.com
    படிச்சுப் பாருங்க.
    லதானநந்த்

  11. உங்கள் பக்கம் படித்தேன் நல்லா இருக்கு.என்னைப்ப்ற்றி எழுதியதற்கு நன்றி
    அன்புடன் கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: