Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

புதிய தலை முறை எப்படி?

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 3, 2008


ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை இரன்டு நாட்கள்  எங்க வீட்டுக்கு என் கணவரின் தங்கை வந்திருந்தாங்க.என்னை விட ஒரு ஆறு வயது பெரியவங்க. ஆனால் நல்ல திடமாக இருக்கிறவங்கதான்.
வந்து நுழைந்து நாங்க வரவேற்று அவர்கள் சோஃபாவில் உட்கார்ந்ததும் “எனக்கு ஜலதொஷம் கொஞ்சம் வென்னீர் கொடுத்துட்டு காப்பி கொண்டா’ என்று சொன்னாங்க.
தொடர்ந்து ஃபிலர் காப்பியாக இருக்கட்டும்ன்னாங்க.
 சரின்னு சொல்லிட்டுப் போய் வென்னீர் சூடாக சுட வைத்துக்கொடுத்து விட்டு காப்பி போட்டுக்கொடுத்தேன்.
ஒரு பத்து நிமிஷம் பேசிவிட்டு இரவு உணவு என்னன்னு கேட்டாங்க.
அவங்களே தொடர்ந்து சவுத் பக்கம் வந்ததிலிருந்து ஒரே rice அதிகமயிடுத்து அதனால் ரோட்டி கொஞ்சம் பண்ணிட்டு ஒரு காய் பண்ணிடுனுன்னாங்க. எனக்குக்கொஞ்சம் இது அதிகமாகப்பட்டது.பரவயில்லைன்னு பொறுமையாகச் செய்து போட்டேன். வெறு எதுவுமே அதிகமாக ஈடுபாடுடன் பேசாமல் என்னை ஒரு நிமிடம் கூட உட்கார விடாமல் வேலை வாங்கிகிட்டே இருந்தாங்க.என் கணவரோ அவருடைய கணவரோ இப்படி விடாமல் வேலை வாங்குரையே நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்ல வில்லை.
அப்புறம் சமஹன் வென்னீர்ல போட்டுட்டு வா, வெத்திலப்பாக்கு எடுத்துக் கொடு என்று மேல மேல நான் அவங்க சொல்லறத செய்ய செய்ய ,விடாம இரண்டு நாளும் என்னை ஒரு வினாடிகூட விடாம வேலை வாங்கி இருக்காங்க. நானும் வந்தவங்களை நோக‌ அடிக்கக் கூடாதுன்னு எல்லாவற்றையும் செய்து அவங்களை திருப்தி படுத்தினேன்.
ஆனால் மனதுல ஒரு கேள்வி இளைய தலை முறைப் பெண்களானால் இந்த சூழ்னிலையை எப்படிக் கையாண்டிருப்பார்கள் என்பதுதான். பதில் கிடைக்குமா இந்த வலைப்பக்கத்தில்?

Advertisements

22 பதில்கள் to “புதிய தலை முறை எப்படி?”

  1. நாத்தனார் விஜயம்.

    அவருக்கு கிடைத்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்தி கொண்டாரா?

  2. இஸ்மாயில் நீயுமா?(u too brutus)பாணி
    அன்புடன்
    கமலா

  3. kunthavai said

    இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.
    எதுக்கு வம்பு , ரெண்டு அல்லது மூன்று நாள்தானே என்று உங்களை மாதிரி தான் பொறுமையாக இருப்பார்கள்.
    அல்லது,
    “வாங்க இது உங்க வீட்டு, உங்களுக்கு இஷ்டப்பட்டதை நீங்களே எடுத்துக்கோங்க ”
    என்றும் சமாளித்திருப்பாங்க என்று நினைக்கிறேன்.

  4. நாந்தான் வெளிலேர்ந்து வந்த மாதிரி இருந்தேன். வயத்தெரிச்சலக் கொட்டாதிங்க.
    அவங்க சொந்த வீடு மாதிரிதான் இருந்தாங்க.
    கடுப்புடன்
    கமலா

  5. Varadharajan said

    உங்களுக்கு தெரியாததா? இரண்டு விதமாகவும் இருக்கிறார்கள். போனால் போகட்டும் என்று diplomatic நடப்பவர்களும் உண்டு . என் வீட்டில் இனிமேல் கால் வைத்தால் தெரியும் சேதி என்று நடப்பவர்களும் உண்டு .

  6. kamala said

    “என் வீட்டில் இனிமேல் கால் வைத்தால் தெரியும் சேதி என்று நடப்பவர்களும் உண்டு”

    எப்படி சார் அப்படிக் கடுமையாகப் பேசி அனுப்ப முடியும். கணவரின் தங்கையாயிற்றே?

    அன்புடன்
    கமலா

  7. //காப்பி கொண்டா’ என்று சொன்னாங்க.
    தொடர்ந்து ஃபிலர் காப்பியாக இருக்கட்டும்ன்னாங்க//

    ரொம்ப கடுப்படிச்சா… பில்டர் காஃபி இல்லை பில்டர் சிகரெட் தான் இருக்கு பரவாயில்லையான்னு கேளுங்க 😉

    //எப்படி சார் அப்படிக் கடுமையாகப் பேசி அனுப்ப முடியும். கணவரின் தங்கையாயிற்றே//

    அதானே… எங்கேயாவது மனைவியின் தங்கையரை கணவன் திட்டியிருக்கிறாரா ? 😉

  8. kamala said

    //ரொம்ப கடுப்படிச்சா… பில்டர் காஃபி இல்லை பில்டர் சிகரெட் தான் இருக்கு பரவாயில்லையான்னு //இது இது இதுதான்….இளைய தலை முறை என்பது. எனக்குத் தோணலை சார்.

    இன்னொன்றும் சொல்லுறேன் கேளுங்க. நீங்க சொன்னால் உங்க better half வேரொறு சமயத்தில திருப்பி அடிப்பாங்க. எங்க காலம் உங்களுக்குத் தெரிந்ததுதானே?

    எங்க‌ counterpart மனம் நொடிஞ்சு பொயிடறாங்க. இதுக்கு என்ன செய்வது?
    அன்புடன்
    கமலா

  9. பாலகிருஷ்ணன் K said

    உங்க கணவரின் தங்கை உங்கள் blog படிக்கிறது உண்டா?

  10. blog இருப்பதே தெரியாது. சொன்னாலும் படிக்க முடியாது ஏன்னா அவங்களுக்கு கணினி இயக்கத்தெரியாது.
    அன்புடன்
    கமலா

  11. இதுல இளைய தலைமுறை என்று பிரித்து யோசிக்க என்ன இருக்கிறது.. ஒருத்தருடைய குணநலன் எப்படியோ அப்படி எந்த காலத்துப் பெண்ணா இருந்தாலும் நடந்திருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன்.. ..
    எப்படி கடுமையாபேசன்னு நீங்க தயங்கினமாதிரியே தான் இந்த காலத்திலும் தயங்கி இருப்பார்கள்.. இப்பவும் விழுந்து விழுந்து கவனிக்கிற சின்னப்பெண்கள் இருக்காங்க.. .. அந்த காலத்து பெரியவங்க பேசாம ஹோட்டலில் இருந்து வாங்கி வச்சு அனுப்பறவங்களூம் இருக்காங்க..

  12. முத்துலஷ்மி நீங்க சொல்லுவதும் சரிதான். ஆனால் என் அண்ணன் தம்பி வீடுகளுக்குப் நான் போனால் என்னால் அப்படி வேலை வாங்க முடியல்லே. என் அண்ணன் மனைவி என்னை விட ஒரு வயதும் ,தம்பி மனைவி 10 வயதும் சின்னவங்க. நான் ஏதாவது வகையில் அவங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே ஒரு நாள் மிகவும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருந்து விட்டு வருவேன்.உட்கார்ந்து வேலை வாங்குவதெல்லாம் முடியாது என்னால்.
    அதனால் இது (பல வருடங்களாகத் தெரிந்த கதைதான் என்றாலும்)இப்பொழுது மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. அதனால்தான் இளைய தலைமுறையை யோசனை கேட்டேன்.
    அன்புடன்
    கமல‌

  13. சுபாஷ் said

    எனது நண்பர்கள் என் வீட்டில் இப்படித்தான் இருப்பார்கள். அம்மாவும் இவர்களுக்கு ஏதும் சொல்வதில்லை. நாங்களும் நண்பர் நண்பிகள் வீட்டிற்கு சென்றால் இவர்களை விட அதிக உரிமை எடுத்துக்கொள்வோம். அதையேதான் நண்பர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    ஆனா நீங்க சொல்றத பார்த்தா உள்ளுக்குள்ள அவங்களும் இப்படித்தான் நினைத்திருப்பார்களோவென இருக்கிறது.

    ஆனால் நிச்சயமாக எனது நண்பர்களும் சரி நண்பிகயும் சரி இப்படியிருப்பதையே விரும்புகிறார்கள். நானும்தான். உரிமையெடுத்துக்கொள்வதில் ஒரு அதீத சந்தோஷம் இருக்கிறது.
    நண்பர்கள் அப்படி இருப்பவில்லையெனில் எனக்கு ஒரு மாதிரியாக சங்கடமாகவே இருக்கும்.

    ஆனால் திருமணத்திற்குப்பின்ர் எப்படியிருக்குமென தெரியாது.
    அவரும் உங்களை ரெருங்கிய நண்பியாக பார்த்திருப்பாரென நினைக்கிறேன். தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

  14. அன்பு தம்பி சுபாஷ்
    கடவுள் புண்ணியத்தில் உங்கள் தலைமுறையில் நண்பர்களாக அவர்கள் இருக்கட்டும். எங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.
    மற்ற சமயங்களிலும் எங்களுக்கு நண்பர்களாக இருக்கவில்லை .
    இப்போ காலம் மாறி விட்டது. ந‌ண்பர்களாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
    அன்புடன்
    கமலா

  15. //வெறு எதுவுமே அதிகமாக ஈடுபாடுடன் பேசாமல் என்னை ஒரு நிமிடம் கூட உட்கார விடாமல் //
    இதைக்கவனீத்தீர்களா சுபாஷ்??

    கமலா

  16. princessesdiaries said

    Neenga veranga…..
    Indha kaalathula brother’s wife kitta evalo jaakaradhiya irukkanum theriyuma? Illaina u have to face the risk of facing ur brother’s wrath. This is from the Naathanaar’s view.
    As a brother’s wife Naathanar adhigaaram panna….oru time limit set pannipom. If it continues….next will be “I am not well…u take over the household” dhaan 🙂

  17. //இதைக்கவனீத்தீர்களா சுபாஷ்??//

    ம்ம்ம்ம்
    ( உங்களின் மன அழுத்தத்தை குறைக்க ட்ரை பண்ணி அப்படி சொன்னேன். தவிர எனக்கு புரிந்தது. சிலர் வேண்டுமென்றே இப்படி பண்ணி பழகிடுவார்கள். ஆனால் அவர் கணவர் பேசாமலிருந்தது பிழைதான்.
    அதை அப்பவே சொல்ல நினைத்தேன். பிறகு வேண்டாமென விட்டுவிட்டேன்.

    take it easy!!!
    நம்ம பிள்ளைகளை இப்படி வராமல் நாம புத்தி சொல்லி வளத்திட்டனும்!!!

  18. Ramya said

    /அதானே… எங்கேயாவது மனைவியின் தங்கையரை கணவன் திட்டியிருக்கிறாரா ? / I agree with you 100%.

    More we help our family (family means both husband side as well as wife side) they take advantage of us. I always feel I am a door mat to them.
    I guess that is life.

  19. Bhuvanesh said

    //ஆனால் மனதுல ஒரு கேள்வி இளைய தலை முறைப் பெண்களானால் இந்த சூழ்னிலையை எப்படிக் கையாண்டிருப்பார்கள் என்பதுதான். பதில் கிடைக்குமா இந்த வலைப்பக்கத்தில்?//

    பதில் கிடைக்குமானு தெரியல.. இளைய தலைமுறை பெண்கள் இப்படி மாற்ற பெண்களையே அடிமை படுத்தகூடாது என்று வேண்டிகொள்கிறேன்!! முதலில் பெண்கள் பெண்களை ஆதிக்கம் செய்வதை விட்டால் ஆணாதிக்கம் பாதி ஒழியும்!!

  20. Janu said

    ஹலோ கமலாம்மா,
    எனக்கு இப்படி வீட்டுல ஒருத்தர் வந்து உக்கார்ந்து என்னை கொஞ்சம் படுத்தி எடுக்க மாட்டாங்களோன்னு அளவுக்கு ஆதங்கமே இருக்கு. அவ்ளோ தூரத்துல சொந்தங்கள் எல்லாம் விட்டுட்டு இருக்கேன். தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்பீங்க.

    நட்பு கொண்டு உரிமை பாராட்டரவங்க, தானும் இணைந்து கூடவே வேலை பண்ணுவாங்க. இவங்க என்னமோ மஹாராணி மாதிரியும் , நீங்க என்னமோ சேடிப் பெண் போல இல்லை ட்ரீட் பண்ணி இருக்காங்க. அவங்க ஒரு நிமிஷமும் உங்களை உட்கார விடாம இருந்ததை படிச்சதும் கோவம் தான் வந்துச்சு. நீங்க ரொம்ப பொறுமை சாலி . அதான் எங்களை எல்லாம் கேக்கறீங்க. நானா இருந்தால் , அவங்க முன்னால ஒன்னும் பண்ணி இருக்க மாட்டேன். நல்லாவே கவனிச்சு அனுப்பி இருப்பேன். விரோதியே வந்தாலும் உபசரிக்கிற கலாசாரம் தானே நம்மது.

    ஆனா அவங்க போனதும் இருக்கு ..என் வீட்டுகாருக்கு ஆப்பு..அப்பறம் எப்ப அவங்க வந்தாலும் , எனக்கு முன்னாடி ஏன் வீட்டுகாரர் எனக்கும் சேர்த்து எல்லாம் பண்ணி வெச்சுடுவார் இல்ல.

    அன்புக்கு தான் அடிமயாகனும் கமலாம்மா..இவங்க அதிகாரத்துக்கு எல்லாம் இனியும் கட்டு படாதீங்க. அப்பறம் எதுக்கும் வீட்டுல கொஞ்சம் ” பே.. மருந்து ” ஸ்டாக் வச்சுகோங்க. பில்டேர் காப்பியில் இது போல ஆளுங்களுக்கு கலந்து கொடுத்துடுங்க. அப்பறம் சப்பாத்தியாவது..சப்ஜியாவது ..வயிறு சரி இல்லைன்னு கெளம்பற மட்டும் உங்கள படுத்த மாட்டாங்க. மறந்து போய் கூட அந்த காப்பிய வேற யாருக்கும் கொடுத்துடாதீங்க. 😀

    மக்களே இதெல்லாம் சும்மா ஜஸ்ட் பார் பன் கு சொல்றது. எங்க வீட்டில் நான் இப்படி எதையும் ஸ்டாக் வசுகறது இல்லை. நான் ரொம்ப கில்லாடி.. வர்ரவங்க இப்படி டூ மச் பார்டின்னா, நீங்க ஒரு டால் ஒன்னு வெப்பீங்களே ..செம டெஸ்ட் ..நானும் பல தடவை பண்ணி இருக்கேன் ..உங்க டெஸ்ட் வரவே மாட்டேங்குதுன்னு தலையில பெருசா ஒரு (பனி) கல்லையே போட்ருவேன்.. அதுலேயே ஆள் காலி ஆயிடுவாங்க !! பல தடவை வொர்க் அவுட் ஆனா டிப்ஸ் இது. இதுக்கு மசியலைனா , மேல இருகரத்தை ட்ரை பண்ணலாம் . தப்பே இல்லை!!!

    • //ஆனா அவங்க போனதும் இருக்கு ..என் வீட்டுகாருக்கு ஆப்பு..அப்பறம் எப்ப அவங்க வந்தாலும் , எனக்கு முன்னாடி ஏன் வீட்டுகாரர் எனக்கும் சேர்த்து எல்லாம் பண்ணி வெச்சுடுவார் இல்ல.//

      அது இருக்கவே இருக்கு!
      அன்புடன்
      கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: