Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

கல்யாணம் கச்சேரி….

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 5, 2008


போன வாரம் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன்.மறுநாள் திருமணம்.முதல் நாள் மாலை வரவேற்பு. வரவேற்பு நடந்தது. பின் நிச்சயதார்த்தம் என்ற சடங்கும் நடந்தது.மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மிகவும் நன்றாகப் (PHD)படித்தவர்கள். அவர்களுடன் கூடப் படித்தவர்கள், மற்றும் மணமகளின் தங்கையுடன் வேலை செய்பவர்கள் (தங்கையும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவர்)எல்லொரும் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் (மிக நாகரீகமாக அல்லது ஃபாஷனாக என்றும் கூறலாம் உடை உடுத்தி யிருந்தவர்கள் நடனமாடத் தொடங்கினார்கள். பின்னணியில் ஒரு சினிமாக் கூத்துப்பாட்டு.

நானும் என் பக்கத்து வீட்டு பெண்மணியும் நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டு நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கிழவர்கள் முதல் இளையவர்கள் வரை யாரும் அதை விரும்பாததாகத் தோன்ற வில்லை.
நடனம் உச்ச கதியில் போய்க்கொண்டிருந்தது. சிறு வயதுப் பெண்களாதலால் உடை எல்லாம் உயர்செருப்பு, பான்டு, மிக ஃபாஷனான சல்வார் என்ற ரீதியில் இருந்தன.
பாடல்களும் //அப்படிபோடு// டைப்தான்.

கூட்டம் கொஞ்சம் ஈடுபாடுகாட்டியவுடன் நடனம் சுறுசுறுப்பாகியது.

திடீறென்று பின்னாலிருந்து ஒரு பெரியவரின் குரல் எல்லொரும் பயப்படும்படி கேட்டது.
// ந‌ல்லா ஆடுங்கடி! தெருவுல போய் நின்று ஆடுங்க. வெக்கம் மானம் ஒன்றும் இல்லாத கழுதைகளா!இதனால்தான் மழை இல்லை, பஞ்சம் வருது. பெண் பெண்ணாக இல்லாமல் இப்படி ஆடுறிங்களே சுனாமி வரது இதனாலதான்.//என்பது போல வசை மாறிப் பொழிந்தார்.
கூட்டத்திலிருந்தவர்கள் பலர் திருதிரு என்று விழித்தார்கள். சிலர் விக்கித்துப் போயிருந்தார்கள்.சிலர் அப்பவே நினைத்தேன் இதெல்லாம் என்ன கூத்தென்று என்று சொன்னார்கள்.

நான் பக்கத்திலிருந்த என் நண்பியிடம் //இந்தப் பெரியவர் கொஞ்சம் அந்தப் பெண்ணின் தாய் தந்தையரிடம் சொல்லி நடனத்தை நிருத்தச் சொல்லியிருக்கலாமே //என்றேன் .

 ஆனால் அவரோ //நல்ல வேளை நாம் இன்னும் முன்னால் போய் உட்கார்ந்து தாளம் போட்டு ரசிக்காமல் விட்டோமே. அந்தப் பெரியவர் நம்மையும் செர்த்து திட்டியிருப்பார் //என்றார். அவர் சொன்னது எனக்குச் சிரிப்பு வந்தாலும் உண்மை என்று தோன்றியது.

இருவரும் வாயைத் திற‌க்காமல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (வீட்டில் சாப்பாடு கிடையாது)வீட்டை நோக்கி நடந்தோம்.
அந்தப்பெண்கள் அந்தக் கூட்டத்தில் தலை குனிந்து நின்ற காட்சி மறக்க முடியாததாக இருந்தது.

Advertisements

16 பதில்கள் to “கல்யாணம் கச்சேரி….”

 1. உற்சாகமாக ஆடுவதும் தவறென சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு எல்லையுடன் இருந்தால் எல்லாம் நல்லதே 😀 மன அழுத்தம் குறையும்.

 2. kamala said

  அதான் சொன்னேனே சேவியர் சார் , நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அந்தப் பெண்களின் அம்மா அப்பா பாட்டி உள்பட எல்லோரும் ரசிக்கத்தான் செய்தாங்க. என்னமோ இந்த பெரியவர் குறுக்கிட்டு அமர்க்களம் பண்ணிட்டார்.
  மன வருத்ததுடன்
  கமலா

 3. எதுவும் எல்லை மீறாமலிருந்தால் தவறில்லை. ஆனால் மீறாமலிருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அந்த மாதிரி கடைத்தரப் பாடல்களை ஒலிக்க விடுவதே ஒரு எல்லை மீறல். அந்த மாதிரி பாடல்களுக்கு அங்க அசைவுகள் பரத நாட்டியம் போன்றா இருக்க முடியும்?

 4. Rajasekaran Iyer said

  I agree with Mr Xavior. If everything is in a limit, then there is no problem.

 5. சுபாஷ் said

  சூழ்நிலைக்கேற்றவாறு lite dance பாடல் ஏதடாவது போட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. 🙂
  ஆனா ரசிச்சுதா எழுதிருக்கீங்க

 6. englishkaran said

  The reason for Tsunami is dislocation of tectonic plates and not these type of dances.
  Why that old man did not scold the guys who were dancing with those girls?

  Anyhow its a nice post so that the younger generation can realize the do’s and dont’s in public functions.

 7. kamala said

  yeah ! u r right! he didn’t mind the guys dancing! he was scolding the girls only.
  thankyou for visiting the site and making comments .
  regards
  kamala

 8. surya said

  ஹா ஹா.. சூப்பர்

  நல்ல பதிவு..

 9. kamala said

  thanks surya!
  thanks for ur visit and comments.
  kamala

 10. Bhuvanesh said

  அவர்கள் செய்தது தப்பா? கரெக்ட் ஆ? என்று நீங்கள் சொல்லவில்லையே ??
  (அவர்கள் ஆபாசமாக ஆடாத பொது) அந்த பெரியவர் கணித்து தப்பு என்று என்னக்கு தோன்றுகிறது! அந்த பெண்ணை பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறையா இவருக்கு??

 11. Bhuvanesh said

  //அவர்கள் செய்தது தப்பா? கரெக்ட் ஆ? என்று நீங்கள் சொல்லவில்லையே ??
  பதிவை மட்டும் படித்து விட்டு மறுமொழி போட்டேன்! உங்கள் மறுமொழிகளில் உங்கள் கருத்தை அறிந்தேன்! நன்றி!

 12. Janu said

  Hello kamalamma ,

  அந்த பெரியவர் பலே ஆளு தான. கூத்த எல்லாம் பார்த்து முடிச்சிட்டு தானே கூப்பாடு போட்டு இருகாரு. எது சரி எது தப்புங்கறது சூழலுக்கு தகுந்த மாறி மாறுபடுது இல்ல! ஊருல பாதி சனம் சோத்துக்கே வக்கு இல்லாம திண்டாட்டி இருக்றப்ப , ஊர கூட்டி கல்யாணம் பண்ணி செலவு செய்றது எல்லாம் எந்த பெருசுக கண்ணுக்கும் தப்பா தெரிய மாட்டேங்குது..

  எப்டி இருந்தாலும் கமலாம்மா , அவர் கத்தியத மொதல்ல படிச்சப்ப சிரிப்பு தான வந்துச்சு.. ஒரு வேள யாராச்சும் அவரோட சோடி சேர்த்தது ஆடி இருந்தால் கத்தி இருக்க மாட்டாரோ. 🙂

  keep going.

  • ஓஹோ!அப்படி ஒரு கோணத்தில் நீங்க பார்த்தீங்களா? தெரியல்லியே? பெரியவர்கள்
   சைகாலஜி படி சின்னவங்க அடங்கி இருக்கணும் என்பதுதானே? இப்ப யாரு அடங்கி இருக்காங்கங்கிறது வேற விஷாம்.
   அடக்கியாளும் மனப்பான்மையாக இருக்கலாம்னு நினைச்சேன்.
   அன்புடன்
   கமலா

 13. kunthavai said

  நடனம் ஆடுவது இன்னைக்கு நேற்று முளைத்த கலாச்சாரம் கிடையாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முறை. ஆதிவாசிகள் நடன பார்த்திருக்கீங்களா? ஆட்டத்தை பார்த்தாலே நமக்கு இருப்புக்கொள்ளாது.

  சந்தோஷத்தை சந்தோஷமாக கொண்டாட வேண்டும். நமக்கு மனதெல்லாம் கள்ளம் புகுந்து விட்டது, அப்புறம் எப்படி சந்தோஷமாக ரசிக்க வரும்?

  எதற்கெடுத்தாலும் ஒரு முலாம் பூசி வைப்பதால் தான் இருட்டில் (டிஸ்கோதே ) போய் ஆசை தீர ஆடுகிறார்களோ என்னமோ .

  என்ன செய்ய எதற்கெடுத்தாலும் பொண்ணுங்களை திட்டாவிட்டால் சிலருக்கு தூக்கம் வராது.

 14. soundr said

  i too donot stand for the gang that encourages dancing in public functions.
  one has to be aware of domino effect here.
  but at the same time periyavars yelling is a rough treatment.
  if i had been there, i would have shouted back, “nee yaruDA kural koduka”.

 15. kamala said

  அதானே?

  கமலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: