Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

சாக்கடை நாற்றம்

Posted by kalyanakamala மேல் திசெம்பர் 5, 2008


மாலை நாலு மணி சுமாருக்கு எங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல தரமான பள்ளியின் பக்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். பெண்களும், பையன்களும் கூட்டம் கூட்டமாக பேசியபடியும் ,விளையாட்டாக ஓடித் துரத்தியபடியும், ஒருவர் தோள் மேல் மற்றொருவர் கை போட்டுக்கொண்டு நடந்தபடி பேசிக்கொண்டும் மாணவர்களுக்கான தனியான வாழ்க்கைப் பருவத்தை மற்றவர்களை (தங்களுடைய‌தை)அசை போடச்செய்யும் வகையில் சென்று கொண்டிருந்தனர்.

ஒரு திருப்பத்தில் திரும்ப யத்தனித்த போது மிகக்கொடுமையான சாக்கடை வாடை அடித்தது. மாணவர்களும் மற்றவர்களும் அந்த சாக்கடை வாடையால் அருவருப்படைந்து மற்றவர்களையும் எச்சரித்து

//அங்க போகாதீங்க!சாக்கடைத் தண்ணீர் !ஜாக்கிர‌தை!//

என்று குரல் எழுப்பி எச்சரித்தனர்.எல்லொரும் அந்த திருப்பத்தை தவிர்த்து அடுத்த திருப்பத்தை நோக்கி நடக்க யத்தனித போது ஒரு சிறுவன் அங்கு வேலை செய்யும் மாந‌கராட்சி துப்புரவுத் தொழிலாளர் அந்த சாகடையைச் சீர் செய்யும் பணியில் ஈடு பட்டிருப்பதைப் பார்த்து

//பாவம்டா அந்த தொழிலாளி நாம் எல்லாம் அந்தப்பக்கம் போவதையே தவிர்க்கிறோம். வாடை தாங்கலை ஆனால் அந்ததொழிலாளி அதற்குள் இறங்கி எப்படி வேலை செய்யறார்//

என்று பரிதாபப்பட்டான்.

அந்த சிறுவனுக்கு பத்து வயது இருக்கும். அப்படி முன் பின் தெரியாத மற்றவருக்காக இரக்கப்படும் மனது கொஞ்சம் வயதானால் எப்படி மறைகிறது. ஆணாதிக்கம் என்ற எப்படி நுழைகிறது. எப்படி ?எப்படி?
எப்படி என்று எழும் என் கேள்விக்கு எனக்கு பல ப‌தில்கள் கிடைத்தாலும் மனம் கொஞ்சம் தடுமாறியது என்னவோ உண்மைதான்.

Advertisements

9 பதில்கள் to “சாக்கடை நாற்றம்”

 1. Sriram said

  நீங்கள் கூறும் இந்த மாற்றம் ஆனது எனக்கு தெரிந்த வரையில் ஒரு மனிதன் தனது இளவயதில் அதாவது பருமடையும் வயதுக்கு பிறகு அவனுள்/ அவளுள் தானாக திணிக்கப் படுகிறது என்பேன்.

  தான் ஒரு செயலை செய்யும் போது இந்த சமூகத்துடன் அவனால் ஒட்டி வாழ வேண்டுமானால் அவன் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க தொடங்குகிறான்.

  ஒரு சிலர் மனதுக்குள் புழுங்கியபடியே தனது வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.

  இப்படித் தான் சுழல்கிறது காலம்.
  அன்று தாகம் என்று வந்தவர்களுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுத்த விருந்தோம்பல் இன்று குடி தண்ணீரையே பாகெட்டில் விற்கும் நிலைக்கு வந்திருப்பதற்கு காரணம்????? வேறென்ன ஒவ்வொவொரு மனிதனின் சுய நலமும் பேராசையும் தான்.

  அந்த சாக்கடையைப் போலவே நம் மனதும் நாறித் தான் கிடக்கிறது.

  • நன்றி ஸ்ரீராம்! மனதுக்குள் அழுக்குப் புகாமல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது மிகப்பெரிய சமாச்சாரமாரமாக இருக்கிறது.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
   அன்புடன்
   கமலா

 2. Sriram said

  இது போன்ற சில நிகழ்வுகளை எப்போதாவது அரிதாக படிக்க நேரும் போது நமக்குள் சில மாற்றங்களை தூண்டும் எண்ணம் வருகிறது. So Hats off to you amma.

 3. kunthavai said

  நல்ல பதிவு , ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் நம்முள் தான் இருக்கிறது.

 4. அமிர்த ஜெகதேகி said

  நல்லா எழுதியிருகீங்க.. கொஞ்சம் இதையும் படிங்க :

  http://aliensofnec.wordpress.com/2008/12/23/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c/

 5. Sriram said

  வணக்கம் அம்மா … உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கிறேன். இது ஒரு தொடர் பதிவு ஆகும். விவரங்களுக்கு http://englishkaran.wordpress.com
  என்ற எனது வலைப் பக்கத்துக்கு வாருங்கள்.நன்றி…

 6. நன்றி ஸ்ரீராம்!அடடா பரிசெல்லாம் கிடைக்கும்னா இன்னும் கொஞ்சம் நல்லா எழுதணுமே!எனக்கெ கொஞ்சம் சந்தேகமாக இருக்கு. இது நிஜமான்னு.
  கமலா

 7. Bhuvanesh said

  இந்த நிகழ்வு உங்களிபோல் இன்னும் சில பேரை சிந்திக்க வைத்திருக்கும்!
  நிகழ்வை பகிர்ந்து, என்னையும் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி!!

 8. soundr said

  yentha kulanthaiyum nalla kulanthai thaan mannil pirakkayilae – athu
  nallavar aavathum theeyavar aavathum….
  samuthayaththaal yaemaartapadum podhu / kaeli porul aakappadum pozhuthu.
  if any of the friends boys had commented for the open expression of the boy, its sure the boy would resist his feelings for expression from the next time.
  (i guess the word aanaathikkam, is not a very appropriate choice.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: