Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for ஜனவரி, 2009

கடவுள் மாதிரி…….

Posted by kalyanakamala மேல் ஜனவரி 21, 2009

நான் பல கால்கட்டங்களில் // கடவுள் மாதிரி//என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரயோகித்தும் மற்றவர் பிரயோகிக்கும்போது கேட்டும் பார்த்திருக்கிறேன்.
அதன் உண்மையான அர்தத்தை உணர கடவுள் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார்.
பாத்ரூம் அழுக்கானதால் சுத்தம் செய்யணும்னு தோணித்து.சுத்தம் செய்யற திரவம் இல்லாததால் கொஞ்சம் தடுமாறின போது வீட்டு வாசலிலேயே ஒரு சேல்ஸ்மேன் (கடவுள் மாதிரி வந்து)நல்ல கிளீனிங் திரவம் என்று கூறி ஒரு திரவத்தை விற்க நானும் என் கணவரின் விருப்பமில்லாமல் வாங்கினேன் அந்த சேல்ஸ் மேனின் நடைமுறை விளக்கத்தைக் கேட்டு. அவர் சட்டென்று என் வீட்டு வாயிற்படியிலிருந்த விளக்கு வைக்கும் இடத்திலிருந்த எண்ணைய்க் கரையை மிக எளிமையாக அந்த திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து காட்டினார்.

நானும் அதே முறையில் என் பாத்ரூமை அந்த திரவத்தை வைத்து சுத்தம் செய்தேன். பாத்ரூம் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்தது.
என் கணவரும் வாஷ் பேசின் போன்றவற்றை சுத்தம் செய்து விட்டு //எப்படி உன்னால் அப்படி இதை வைத்து கிளீன் பண்ண முடிந்தது?//என்றுகேட்டார்.

நான் சொன்னேன் //அந்த திரவம் கடவுள் மாதிரி !அதன் துணையுடன் என் மனமும் கையும் உழைத்தன போல //என்று.

Advertisements

Posted in Uncategorized | 5 Comments »

நானும் ஒரு பட்டாம்பூச்சி!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 11, 2009

bfபட்டாம்பூச்சி விருது கொடுத்த ஸ்ரீராம் என்னை திக்கு முக்காட வைத்து விட்டார். முதலில் நான் சொல்லிப் பெருமை பட்டுக்கொண்டது என் கணவரிடம். இரவு 10 மணிக்கு மேல். தூக்கக்கலக்கத்தில் வந்து படித்து விட்டு சந்தோஷம் என்று மிகவும் ஃபார்மலாகச்சொல்லி விட்டுப் (பின்ன எப்படிச்சொல்வார் என்கிறீர்களா?)போய் TV பார்க்க ஆரம்பித்து விட்டார். மறுநாள் என் மகனிடம் சொன்னேன் . பார்த்து விட்டு சரியென்றான். எப்பவுமே அவனுக்கு ஏதோ ஒரு பயம் அம்மாவை கொஞ்சம் தூக்கிப்பேசி விட்டால் கைமீறிப்போய் விடுமென்று ஏனென்று தெரியவில்லை. ஆனால் பெரிய ஆபத்தான சமயங்களில் உபயொகப்படுத்திக் கொள்வான். இது ஒரு மகன்களாதிக்கம் கேஸ்
அடுத்தது மறுநாள் காலை கணினி முன் உட்கார்ந்து பெண்ணைப்பிடித்தேன். பட்டாம்பூச்சி பரிசைச் சொன்னேன். அந்தப் பக்கத்தில் ஒரே சந்தோஷக்குரல்கள்.
பேரன் பேத்தி எல்ல்லோரும்  இஙிலீஷ் மொழிபெயர்ப்புடன்(மகள் மொழி பெயர்த்துச் சொல்ல)ஒரே சந்தோஷ சாம்ராஜ்யம்.
பரவாயில்லையே அம்மா உன் பிளாக் நல்லாதான் போயிருக்கு போல! என்றாள் மகள். பேரன் பேத்திகள் வாழ்த்தினார்கள்.

சேவியர்,ஜெயஸ்ரீ மற்றும் விஜய்கோபல்ஸ்வாமிக்கு நான் இந்தப்பட்டாம்பூச்சி விருதைக் கொடுக்க விரும்புகிறேன்!
1.அலசல் ‍‍http://xavi.wordpress.com  ‍: இந்த பிளாக்கில்  சேவியர் மிக நல்ல பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறார். கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பின்னூட்டங்களும் பதிவுகளும்.

2.தாளிக்கும் ஓசைhttp:http://mykitchenpitch.wordpress.com/: நல்ல எழுத்து நடை . நல்ல சாப்பாடு. ரசனையுள்ள பெண் எழுதும் பதிவுகள்.

3.விஜயகோபலசாமி பக்கங்கள் http://vijaygopalswami.wordpress.com:  கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பதிவுகள். நல்ல சிந்தனையாளர் ஆனால் விளையாட்டாக தகவல்களைத்தரும் விதம் நம்மைக் கவரும். இளைய தலை முறையினருக்கு ஒரு நல்ல முன் மாதிரி.

இவர்கள் வலைத்தளத்தில் ஏற்கெனவே நிறைய பரிசுகள் வாங்கி இருக்க நிறைய சான்ஸ் இருக்கு!
புகழ் மிக்க எழுத்தாளர்கள். இவர்கள் எழுத்துக்குக்கிடைக்கும் பின்னூட்டத்தை வைத்துத்தான் சொல்கிறேன்.

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி  லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவர்களும் இந்தப் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில்  மூன்று விதிகளைக் கடைபிடிக்கணும்.

1. இவர்கள் மூன்று பேருக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கணும்.

2. விருது கொடுக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

3.விருது கொடுக்கக்கப் பட்டவர்கள் வலைத்தளத்துடன் link  செய்து கொள்ளவும்.

Posted in Uncategorized | 5 Comments »

உன்னைச்சொல்லிக் குற்றமில்லை….

Posted by kalyanakamala மேல் ஜனவரி 9, 2009

சோஃப்பாவில் உட்காருமுன் அனிச்சையாக சுவிட்சைத்தட்டினேன். ஃபான் சுற்ற வில்லை. ரெகுலேட்டரை திருகிப்பார்த்தேன் உஹும் ஃபான் நகரவில்லை. சலிப்புடன் இடம் மாறி மற்றொரு சோஃபாவில் உட்கார்ந்து காப்பி குடித்து விட்டு செருப்பை அணிந்து கொண்டு தெரு முனையிலுள்ள எலெக்ட்ரிகல் ஷாப்பூக்குப் போனேன். ஷாப் உரிமையாளர் புத்தகதிலிருந்து முகத்தைத் திருப்பி என்ன என்பது போலப் பார்த்தார்.
வீட்டுல ஒரு ஃபான் ஓடவில்லை ஒரு எலெக்ட்ரீசியனைக்கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்களேன் என்றேன்.சரி அனுப்பறேன்னார்.
சரியாக மாலை 4 மணிக்கு இரண்டு பையன்கள் 17 அல்லது 18 வயதுக்குள்தான் இருக்கும் வந்தார்கள். எலெக்ட்ரிகல் ஷாப்பில் அனுப்பினார் ஃப்பான் ரிப்பேராமே என்று கேட்டார்கள். ஃபானை கை காட்டினேன்.
ஒரு ஸ்டூலைப்போட்டு ஃப்பான் நடுவிலிருந்த குண்டுப் பகுதியைக் ஒருவர் கழட்ட  இன்னொருவர் ஸ்டூலைப் பிடித்தவாறு நின்றிருக்க  ஃப்பான் ரிப்பேர் நடந்தது. ரெகுலேட்டரை சரிபார்த்தார். ஃப்பான் ஒட ஆரம்பித்ததும் என் கணவர் இன்னொருவரிடம் பாத்ரூம் லைட் சுவிட்சை சரிபண்ணச் சொல்ல அவர் பாத்ரூம் பக்கம் போனார். இத்ற்குள் என் வீட்டுக்கு வந்த சொந்தக்காரர் ஒருவர் கிச்சனிலிருந்த என்னிடம் வந்து பையன்கள் வீடு முழுக்க நடமாடுகிறார்கள். செல் ஃபோன்கள் மற்றும் வாட்சுகளாஈப்பத்திரமாக எடுத்து வை. காணாமல் போனால் அப்புறம் கஷ்டமாயிடும் என்றார்.
பையன்கள் வேலை முடித்து ஃப்பான் கண்டென்சருக்கு 75 ரூபாய் சஸ்விட்சுக்கு 15 ருபாய் 30 ரூபாய் லேபர் என்று கணக்கு சொல்லி பணம் வாங்கிக்கொண்டு போனர்கள்.
அவர்கள் போன பின் வாட்சு செல்போன்கள் எல்லாம் பத்திரமாக இருந்தன. அவைகளோடு அவர்கள் விட்டுப்போன ஒரு ஸ்குரூடிரைவரும் கிடைத்தது. மாலை மணி நாலே முக்கால்.ஸ்குருடிடரைவரை எடுத்து மேலும் கீழும் திருப்பிப் பார்த்து விட்டு உறவினர் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார்.
மறுநாள் வாசல்மணி  சத்தம்.எலெக்ட்ரீசியன் பையன் //சார் ஸ்குரு டிரைவர் விட்டுட்டுப்போயிட்டேன்.
இங்கதானே சார் விட்டேன்? சாயந்திரமெல்லாம் டென்ஷனாயிட்டேன் சார்//
இங்கதான் இருக்கு. எடுத்துக்கொடுத்தேன்.
// தாங்ஸ் சார்//
போய் விட்டான்.

Posted in Uncategorized | 2 Comments »