Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

நானும் ஒரு பட்டாம்பூச்சி!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 11, 2009


bfபட்டாம்பூச்சி விருது கொடுத்த ஸ்ரீராம் என்னை திக்கு முக்காட வைத்து விட்டார். முதலில் நான் சொல்லிப் பெருமை பட்டுக்கொண்டது என் கணவரிடம். இரவு 10 மணிக்கு மேல். தூக்கக்கலக்கத்தில் வந்து படித்து விட்டு சந்தோஷம் என்று மிகவும் ஃபார்மலாகச்சொல்லி விட்டுப் (பின்ன எப்படிச்சொல்வார் என்கிறீர்களா?)போய் TV பார்க்க ஆரம்பித்து விட்டார். மறுநாள் என் மகனிடம் சொன்னேன் . பார்த்து விட்டு சரியென்றான். எப்பவுமே அவனுக்கு ஏதோ ஒரு பயம் அம்மாவை கொஞ்சம் தூக்கிப்பேசி விட்டால் கைமீறிப்போய் விடுமென்று ஏனென்று தெரியவில்லை. ஆனால் பெரிய ஆபத்தான சமயங்களில் உபயொகப்படுத்திக் கொள்வான். இது ஒரு மகன்களாதிக்கம் கேஸ்
அடுத்தது மறுநாள் காலை கணினி முன் உட்கார்ந்து பெண்ணைப்பிடித்தேன். பட்டாம்பூச்சி பரிசைச் சொன்னேன். அந்தப் பக்கத்தில் ஒரே சந்தோஷக்குரல்கள்.
பேரன் பேத்தி எல்ல்லோரும்  இஙிலீஷ் மொழிபெயர்ப்புடன்(மகள் மொழி பெயர்த்துச் சொல்ல)ஒரே சந்தோஷ சாம்ராஜ்யம்.
பரவாயில்லையே அம்மா உன் பிளாக் நல்லாதான் போயிருக்கு போல! என்றாள் மகள். பேரன் பேத்திகள் வாழ்த்தினார்கள்.

சேவியர்,ஜெயஸ்ரீ மற்றும் விஜய்கோபல்ஸ்வாமிக்கு நான் இந்தப்பட்டாம்பூச்சி விருதைக் கொடுக்க விரும்புகிறேன்!
1.அலசல் ‍‍http://xavi.wordpress.com  ‍: இந்த பிளாக்கில்  சேவியர் மிக நல்ல பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறார். கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பின்னூட்டங்களும் பதிவுகளும்.

2.தாளிக்கும் ஓசைhttp:http://mykitchenpitch.wordpress.com/: நல்ல எழுத்து நடை . நல்ல சாப்பாடு. ரசனையுள்ள பெண் எழுதும் பதிவுகள்.

3.விஜயகோபலசாமி பக்கங்கள் http://vijaygopalswami.wordpress.com:  கலகலப்புக்குப் பஞ்சமே இல்லாத பதிவுகள். நல்ல சிந்தனையாளர் ஆனால் விளையாட்டாக தகவல்களைத்தரும் விதம் நம்மைக் கவரும். இளைய தலை முறையினருக்கு ஒரு நல்ல முன் மாதிரி.

இவர்கள் வலைத்தளத்தில் ஏற்கெனவே நிறைய பரிசுகள் வாங்கி இருக்க நிறைய சான்ஸ் இருக்கு!
புகழ் மிக்க எழுத்தாளர்கள். இவர்கள் எழுத்துக்குக்கிடைக்கும் பின்னூட்டத்தை வைத்துத்தான் சொல்கிறேன்.

இவர்கள் பட்டாம்பூச்சி பரிசு வாங்கியதன் அடையாளமாக‌ பட்டாம்பூச்சி  லோகோவை தங்கள் வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவர்களும் இந்தப் பட்டாம்பூச்சி பட்டம் வாங்கியவர்கள் என்றமுறையில்  மூன்று விதிகளைக் கடைபிடிக்கணும்.

1. இவர்கள் மூன்று பேருக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கணும்.

2. விருது கொடுக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

3.விருது கொடுக்கக்கப் பட்டவர்கள் வலைத்தளத்துடன் link  செய்து கொள்ளவும்.

Advertisements

5 பதில்கள் to “நானும் ஒரு பட்டாம்பூச்சி!”

  1. தங்களது இந்த அங்கீகாரம் இன்னும் பொறுப்போடு எழுத வேண்டும் என்றே யோசிக்க வைக்கிறது.

    நன்றி என்ற ஒரே ஒரு வார்த்தை நிச்சயம் போதாது. இருந்தாலும் குறைந்தபட்சம் நன்றியை மட்டுமாவது சொல்லியாக வேண்டும். நன்றி கமலா அம்மா. (என்னுடைய ப்ளாகர் தளம் மிக நெருங்கிய நண்பர் ஒருவரால் கடத்தப்பட்டுவிட்டது. அந்த வேதனையை இந்த பாராட்டு மறக்கவைத்துவிட்டது)

    விஜய்கோபால்சாமி.

  2. kunthavai said

    //ஒரே சந்தோஷ சாம்ராஜ்யம்
    வேறு என்ன வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    • உண்மைதான்!வேறு எதுவுமே தேவையில்லைதான். அதை விட இந்த வலைத்தளத்தின் மூலம் என் மனதைப்பகிர்ந்து கொள்ள மிக நல்ல நண்பர்கள் வேறு இருக்கிறார்கள்.
      நட்புடன்
      கமலா

  3. மிக்க நன்றி கல்யாணக்கமலா. அதிக நாள்கள் எடுத்துக்கொண்டுவிட்டேன். மன்னிக்கவும்.

    http://mykitchenpitch.wordpress.com/2009/03/13/oh-butterfly/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: