Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for ஓகஸ்ட், 2009

சுறுசுறுப்பாக்கும் டானிக்!

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 28, 2009

சொக்கன் எழுதிய கைதட்டல்கள் படித்தேன்!மிக அழகாக எழுதியிருந்தார்.ஊக்குவிக்கும் அன்பான புகழ்ச்சியையும், மற்றவர் செயலால் நாம் அடைந்த  சந்தோஷத்தை வெளிக்காட்டி அவரை மகிழ்விப்பதையும் பற்றி எழுதியிருந்தார்!
உணர்வுப்பூர்வமாக என்னால் அதை அணுக முடிந்தது. ஏனெனில் பல சமயங்களில் அதன் நன்மையான விளைவுகளை நான் எதிர்கொண்டிருப்பதுதான் காரணம்.
நான் இப்போது வந்து இருப்பது ஆஸ்திரேலியாவில் என் மகள் வீட்டில். மகளும் மருமகனும் பேரன் பேத்தியும்  மெல்பர்ன் நகரமும் கேட்கவா வேண்டும் அருமையான வாழ்க்கைத் தரத்துக்கு.
 என் வரவுக்காகக்  காத்திருந்தவர்கள் என் பேரக்குழந்தைகள். கிட்டத்தட்ட எனக்கு அவர்கள் நண்பர்கள்.ரொம்ப கரிசனத்தோட கவனித்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள்.என்னோடுதான் தொலைக்காட்சி பார்ப்பார்கள். பேரன் 13 வயது. பேத்தி 9 வயது.

இந்த தடவை நான் மெல்பர்ன் வந்தடைந்ததும் கொஞ்சம் குளிரினால் மூட்டு பிடித்துக் கொண்டிருந்ததால் தாங்கித்தாங்கி  நடந்தேன். என் பெண் நல்ல ஒரு டாக்டர்கிட்ட காட்டலாம் என்று சொன்னாள்.நான் வயகிறது இனிமே எலும்பெல்லாம் வளரப்போகிறதில்லை. மேற்கொண்டு தேயாமல் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்.அதைப் பார்த்த பேரன் போன தடவை என்னோட கிரிக்கெட் ஆடின உனக்கு அதற்குள் வயசெல்லாம் ஆகாது நீ இன்னும் யங்க் உமன்தான்.என் அம்மாவுக்கு உன் வயதில் ஃபிரண்ட் இருக்காங்க. அவங்க ஜாலியத்தான் பேசுவாங்க. நீ ஒண்ணும் கிழவி இல்லை என்று சொல்லிவிட்டான். எனக்கு ஆச்சரியமாயிருந்தது என்னவோ உண்மைதான்.
நேற்று க்ளென் போயிருந்த போது நான் மூட்டு வலியால் காரிலிருந்து இரங்கக் கொஞ்சம் கஷ்டப்பட்ட போது என் 9வயது பேத்தி பாட்டி நீயும் உன் பேரனும் இந்த ஊரில அம்மா பிள்ளைன்னு சொன்னாக்கூட ஒண்ணும் அதிசயமாக இருக்காது என்று சொன்னாள்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
என்ன இப்படி திரும்பத் திரும்ப பசங்க நம்மை வயசானவங்களாக ஏத்துக்க மாட்டேங்கிறாங்க?
யோசித்தபடி  இன்னைக்கு காலையில் எழுந்து பிள்ளைகளும் பெரியவங்களும் வெளியே போனபோது என்னுடைய நாளை நான் பிளான் பண்ணிக்கொண்டிருந்த போது ஒரு ஃபிரண்டிடமிருந்து போன். அந்த ஃபிரண்ட் பேச்சினிடையே இன்று 19 டிகிரி வெயிலடிக்கப் போரது என்று சொன்னாள்.
பேசி முடித்து விட்டு  சரி வெய்யிலில் நல்ல லாங்க் வாக்கிங்க் போகலாம்னு கிளம்பினேன்.
அங்கெங்கெ காரவான் வைத்துக்கொண்டு கிளம்பும் என்னொத்த பெண்களைப் பார்த்ததும் (பின் மண்டையில் பேரப்பசங்களோட காமெண்ட்ஸ்)வேகமாக மூட்டி வலி முழங்கால் வலி எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு நடக்கத் தொடங்கினேன்.சின்னப்பிள்ளைகளானாலும் ஊக்கம் அவர்கள் வார்த்தையால் கிடைத்ததை மறுக்க முடியாது

Advertisements

Posted in Uncategorized | 5 Comments »