Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for ஓகஸ்ட், 2012

பயணம்……………….

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 17, 2012

பின்னிரவுப்பொழுது குடந்தை ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. மெதுவே எழுந்து கையில்தயாராக இருந்த சின்னப் பையுடன் இறங்கி மெதுவே தயக்கத்துடன் நடக்கையில் மனம் மிகவும் துவண்டிருந்தது. சொந்த ஊர் சொந்தமண் தான் ஆனாலும் எந்த தொடர்பும் இல்லாமல் போயே விட்டதே! வே ற்று மனிதர்கள் நிறைந்த இடத்தில் இருந்த சுதந்திரம் கூட இல்லமல் போய்விட்டது.

எத்தனை முறை அம்மாவும் அப்பாவும் இங்கு வழியனுப்பியிருப்பர்கள்? கண்களில் கண்ணீர் ததும்ப அம்மா பிடித்து பிரியா விடை கொடுப்பது நினைவுக்கு வருவபளாய் தலயை குலுக்கிக்கொண்டாள்.
அம்மா! இனி அம்மாவே இல்லை. இந்த முடிவு இன்னிக்குதான் என்னை பாதிக்குதா? இதுனாள் வரை அம்மாவுடன் என்ன உறவு உனக்கு இருந்தது?””யாரோ மனதுக்குள் பிறான்டினார்கள். \

அந்த நாள் ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிவு செய்து நடத்திக்காட்டியது யாரோட செயல்? நாந்தனா?
இல்லை கமாலும் நானும் வேறு யொசனையே இல்லாமல் (வேற யொசனை வந்து தடை படாமல் நடக்கணும்னு வேகத்துடன் யாரையும் பற்றி யோசிக்காமல் செய்தது நினைவுக்கு வர தலையைக்குலுக்கிக்கொண்டாள்.
நேற்று போனில் கமால் சொன்னபோது இந்தச்செய்தி மனதுக்கு பிடிபடவே சில நிமிடங்கள் ஆயிற்று. கமால்போனில் என்னிடமிருந்து பதில்வராததால் கிளம்பி போய் பார்திட்டு வந்திடு! வரணும்னுனதானே தகவல் சொல்லியிருக்காங்க‌ என்றான். அவன் சொன்னதுன் நியாயமாகப்பட்டது
.ஆனாலும் மனதில் ஒரே திகில் . எதையாவது மீதி வைக்கணும்னு எண்ணமே இல்லாமல் யாரைப்பற்றியும் சிந்திக்காமல் போயிட்டு இப்ப போகறது எதுக்காக? அவங்களும் ஏன் தகவல் சொல்றாங்கன்னு தெரியல்லே. பலதடவை நாம் செய்தது சரியான்னு மனசு விவாதம் பண்ண்ணிய பொதெல்லாம் அறிவு வாழ்க்கை என்னோடதுன்னு ப்ரதிவாதம் பண்ணி ஜெயித்தது என்னவோ உண்மை தானே? இப்ப நடப்பதன் நியாயம் புரியாமல்தான் கனவுல நடப்பது போல ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்டது போல கால் நடந்தது.
ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஆடோ பிடித்து ஊ ர் பேர் சொல்லி பயணிக்கத்தொடங்கியது ஆட்டோக்காரர் தனிய இந்த மூணு மணி வேளையில் வரும் பெண்ண்மணியை வியப்புடன் பார்த்தது எல்லாமே கனவு போல் ந‌டக்க ஆட்டோ பயணிக்கத்தொடங்கியது.
இந்த மரங்களும் சாலையும் ஒருகாலத்துல சொர்க்கமாக இருந்திருக்கு. இப்ப இந்தக்காற்று கசந்தது. வயிற்றைக்கலக்கியது. அனாவசியமாக வாழ்கையைத் திரும்பிப் பார்க்கிறோமோ?மனக்குரங்கு கேட்டது?
இதோ அக்கிரஹாரத்துக்குள்ள நுழையும் ஆட்டோ சத்தம் மிகவும் பயமுறுத்துகிற‌து. இதயமமோ படபடத்து வெடித்து விடுமென தோணறது.
யார் யார் இருப்பார்கள்? அம்மா….. முடிந்து விட்ட அம்மா படுத்த நிலையில், அப்பா வெறுப்புப் பார்வையுடன்,அண்ணா மனைவியுடன் பிள்ளைகளுடன் அப்புறம் மனம் ஒரு நடுக்கத்துடன் பிரேக் போடுகிறது……
நான் போன போது விவரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்த கௌரி இப்போ அங்கு வந்திருப்பாளோ? மாதவன் அடுத்த தெருதானே அவனுக்கு அங்கே இருப்பானோ? திகிலடிக்கும் மனதுக்குள் ஒரு சின்ன நம்பிக்கை இவர்கள் அவ்வளவு ஏமாளிகள் இல்லை. கௌரியையும் மாதவனையும் அகற்றியிருப்பர்கள். அவனும் விலகி இருப்பான்.மாதவன் தொடர்பிலேயே இருக்க சந்தர்ப்பம் இல்லை.மனம் சூழ்னிலைக்கு உள்ளே வந்து கணக்குப்போட்டு நிம்மதி அடைந்தத.து.
\\\
ஆட்டோ வீட்டு வாசலில் நிற்கும் சத்தத்தில் உள்ளிருந்த அண்ணா வந்து வெற்றுப் பார்வையுடன் பார்க்க உள்ளே போகும்போது…………………தன் .காலடிச்சத்தமே இடி முழக்கம் மதிரி ஒலித்தது காதில். நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அப்பா ஒரு வெற்றுப் பார்வை வீசினார். அந்த பார்வையில் அவளுடைய‌அப்பா இல்லவே இல்லை.
அண்ணனினின்குழந்தைகள் போலும் இரன்டு சிறு பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.ஒரு பையனும், ஒரு பெண்ணும்.அண்ணி இது வேறு என்ன வினோதம் என்பது போல ஒரு பார்வையுடன். சுற்றிலும் இரத்த பந்தங்கள் ஆனாலும் யாரும் அடுத்தவீட்டுக்காரன் போலகூட பார்க்கவில்லை. விளக்க முடியாத ஒரு பார்வை. எதிர்பார்த்ததுதான் என்றாலும் நேர்கொள்வது கஷ்டமாயிருந்ததது.
காலும் கையும் கட்டி பட்டுப்புடவையுடன் அம்மா படுத்த நிலையில்.   உயிர் இருந்தால்    அம்மா  என்ன செய்திருப்பாள் ?

கோபத்தில் வெடித்திருப்பளா இல்லை ஆதுரத்தில் அணைத்திருப்பளா தெரியவில்லை. யோசிக்க விடாமல் அவள் மரணம் உதவியது.அம்மாவைத் தொட்டு அழலாமா? ஒரு நிமிடம்தான் அந்த யோசனை அறவே அகன்றது.
மௌனம் ……மௌனம்…………….மஹத்தான மௌனம்……உதவியது நேர்கொள்ள  .  ”ஒரு சம்ப்ரதாயத்துக்கு சொன்னது என்ன இவள் துலுக்கச்சி குடத்துல தண்ணி கொண்டுவந்து குளிப்பாட்டப் போராளா?இல்லை பிண்டம் பொங்கப்போறாளா? என்னமோ துலுக்கனோட ஓடிப்போயிட்டு சேதி சொன்னவுடன் வந்து இருக்காள்.அடுத்த தெருவுல குழந்தையும் ஆம்படையானும் தவிக்கறா ,குழந்தையை காப்ப‌கத்துல விட்டுட்டு ஒடிப்போனாள் துலுக்கனோட”. மாமா சித்தப்பாவின் காதில் முணுமுணு த்தார்.

வருத்தப்பட ஒண்ணுமேயில்லை. எதிர்பார்த்ததுதான்.அழ, பேச, கதற ,பகிர ஒண்ணுமேயில்லை…
இங்க உனக்கு ஒண்ணுமேயில்லை என்றது அந்த மயான அமைதி. ஒண்ணுமேயில்லை என்று போனவதானே என்ன இருக்கும் இங்க?
வாயைக்கையால் மூடி ஒரு பாட்டம் குமுறிய மனதை கொட்டியது அழுகை.
மெல்ல நடந்து முக்கூடலில் நின்று திரும்பி அம்மாவை அப்பாவை தீர்க்கமாய்ப் பார்த்து .பெருமுச்சு விட்டு சுதாரித்துக்கொண்டு வாயைப்புடவையால் பொத்திக்கொண்டு வெளியே வந்து திரும்பி இடக்கை பக்கம் போகும் தெருவில் இருக்கும் கௌரியை உருவகப்படுத்தமுடியாமல் ஏதொ ஒரு சிறு பெண்ணின் உருவத்தை மனதில்கண்கள் கொள்ளா  நீருடன் பேணி சீவி சிங்காரித்து வளர்த்து பெரியவளாக்கி முப்பது செகன்டில் பத்து வருடம் நடத்தி விட்டு, வந்த ஆட்டோவிலேயே திரும்பும் போது குடந்தை மா ந‌கரம் விழித்துக்கொள்ள தொடங்கி மணீக்கூன்டு கடிகாரம் நான்கு மணியைத்தொட்டது.

Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »

ம‌றுபடியும் ……………

Posted by kalyanakamala மேல் ஓகஸ்ட் 4, 2012

மறுபடியும்  வந்தேன்………

ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் எழுதலாம்னு ஒரு ஆசை. நம்ம சகோதர‌ர்கள் அதான் நம்ம  வாசகர்கள் ஆதரிக்கணும்!

Posted in Uncategorized | Leave a Comment »