Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

About

This is an example of a WordPress page, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many pages like this one or sub-pages as you like and manage all of your content inside of WordPress.

Advertisements

10 பதில்கள் to “About”

 1. சின்ன வயதிலிருந்தெ எனக்கு கொஞ்சம் துணிச்சல் அதிகம்தான். என் அம்மா அப்பா கொடுத்த சுதந்திரமோ அல்லது நான் தன்னாலேயே வளர்த்துக்கொண்ட தன்னம்பிக்கையோ நான் கொஞ்சம் சதாரண‌ பெண்களை விட வித்தியாசமகத்தான் வளர்ந்தேன். வளர்ந்தது என்னவோ‌ வெளியுலக நடப்பு பற்றி அதிகம் யோசிக்க முடியத சூழ் நிலையில்தான் வளர்ந்தேன்.கும்பகோணம் என் ஊர். பதினைந்து வயது முடிந்தவுடன் எனக்கு கல்யாணம் நடந்து விட்டது.உண்மையில் குழந்தைக்கல்யாணம் சட்டப்படி செல்லாது.ஆனால் சட்டப்படி செல்லுகின்ற கல்யணங்க‌ளை விட செல்லாத என் கல்யாணம் அதிக மதிப்புடன் இருந்தது.பதினாறு வயதில் இந்த சிங்காரச் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.அது முதல் சென்னை வாழ்க்கைதான்.கணவர் குழந்தைகள் குடும்பம் என்று அல்லலோ அல்லல் பட்டேன், இந்த கடின வாழ்கையிலிருந்து ஒரு மாறுதல் பத்திரிகைகளுக்கு எழுதுவதுதான்.1970/1980களில் நிறைய எழுதியிருக்கிறேன்.மயக்க மருந்து உண்டது போல் துயரங்களை மறப்பதற்கு இது உதவியது.
  பின்னர் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வெளி நாட்டுப்பயணங்கள் இன்னும் என்னன்னவொ நடந்தது. நான்கு முறை வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்து கொஞ்சம் நின்றது.மீண்டும் எழுத முயற்சிக்கிறேன். ந‌டக்கப்போவது நல்லதாகவே அமையும் என்று நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்.

 2. அன்புள்ள திருமதி கமலா அவர்களுக்கு,

  வணக்கம்.

  நான் கல்பாக்க அணுமின் நிலையத்தில் பணிபுரிந்த போது ஆறு மாதங்கள் புற்று நோயில் இன்னலுற்று மரித்த என் அன்னையின் முகத்தில் துன்பமுறும் பல பாரத மாதாக்களைக் கண்டேன். அவர்களின் காணாத நிழல்தான் அந்தக் கவிதை.

  உங்கள் வலைப் பூங்காவில் வந்துள்ள அரிய மனித நேயக் கட்டுரைகளைப் படித்தறிந்தேன். படைப்பாற்றல் பெற்றுத் தனித்துவ மாதராய்த் துணிவுடன் எழுதும் உங்கள் திறனைப் பாராட்டுகிறேன்.

  எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி மருத்துவ டாக்டர். மற்றொருத்தி என்னைபோல் எஞ்சினியர். நானிப்போது ஓய்வில் தொடர்ந்து திண்ணையில் [www.thinnai.com] எழுதி வருகிறேன்.

  இப்போது எங்கிருக்கிறீர்கள் ? உங்கள் புதல்வர், புதல்வி எங்கிருக்கிறார் ?

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா

  jayabarat@tnt21.com
  jayabarathans@gmail.com

 3. உங்கள் மடல் கன்டவுடன் உங்கள் வலைப்பக்கத்துக்குப் போனேன்.இன்ப‌ அதிர்ச்சி.அங்கே நான் சந்தித்தது தாகூரை. உங்கள் முன்னுறை கன்டேன்.மிக்க மகிழ்ச்சி. நான் இப்பொழுது கண‌வருடன் சென்னையில் வசித்து வருகிறேன்.எனக்கு ஒரு மகனும்,மகளும்.மகன் ரியாத் ,சௌதி அரேபியாவில் இருக்கிறான்,மகள் தற்போது சைனாவில் அவள் குடும்பத்துடன் இருக்கிறாள்.
  என் வலைப்பக்கத்துக்கு உங்கள் வருகையை பாக்கியமாகவே கருதுகிறேன்.
  தாகூரைப்ப‌டிக்க‌ கொஞ்சம் அவகாசம் வேண்டும்.ஏதோ ப‌டித்தேன் என்று பேர் ப‌ண்ண‌ விரும்ப‌வில்லை.ராம‌ய‌ண‌ம் ம‌ற்றும் ம‌காபார‌த‌த்தை கொஞ்ச‌ம் இங்கு அங்கு தொட்டிருக்கிறோம். ஆனால் கீதாஞ்ச‌லியை பெய‌ரை ம‌ட்டும்தான் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.இதை‌க்கேட்டால் உங்க‌ளுக்கு வ‌ருத்தமாய்ய்த்தான் இருக்கும். ஆனால் அதுதான் நிலை.ப‌டித்து விட்டு உங்க‌ளுட‌ன் திரும்பப் பேசுகிறேன். என‌க்கு பார‌தியாரை மிக‌வும் பிடிக்கும்.வ‌ள்ளுவ‌ரை நேசிப்ப‌வ‌ள்.

 4. மிகவும் சரியாக சொன்னீர்கள் அம்மா.ஜெயபாரதன் ஐயாவின் வலை பதிவு அற்புதமாக உள்ளது.உங்களுது மட்டும் என்னவாம் … அதுவும் தான்…ம்ம்ம்ம்…அப்புறம்ம்…தாகூரை படித்து விட்டீர்களா..???

  Nandan Koushik,Chennai

 5. பதில் சொல்ல கஷ்டமாயிருக்கு. இன்னும் படிக்கவில்லை. போய்த்தொட்டு விட்டுவந்தேன்.அவ்வளவுதான்.
  கமலா

 6. RV said

  உங்கள் வலைப்பதிவை சில மாதங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். சரளமான நடை. நல்ல அனுபவங்கள். இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 7. sasi said

  Mrs. Kalyanakamala

  Recently I stumbled upon one of your blog post and really glad I did. Really like your style of writing and blog posts. Keep blogging. New year wishes to you.

  -Sasi

 8. Thankyou very much Sasi!
  kamala

 9. அன்புள்ள திருமதி கமலா அவர்களுக்கு,

  வணக்கம். உங்கள் வலைப் பூங்காவின் முகப்பில் வலப் பக்கமுள்ள பெயர்களில் என் பெயரைத் தட்டினால் என் வலை வரவில்லை. அதைத் திருத்தி விடுங்கள்.

  நன்றி,

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா

 10. kamala said

  i have edited the error mentioned by you. thank you!
  Kamala

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: