Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

Archive for the ‘பொது’ Category

ந‌‌ம் ஆரோக்கிய‌ம் ந‌ம் கையில்!

Posted by kalyanakamala மேல் ஜனவரி 3, 2008

     முன்பெல்லாம் நிறைய சாப்பாடு சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் பெரியவர்கள்.
சாப்பிடுவதற்கு முன் எதையும் தின்னாதே, தண்ணீர் குடிக்காதே,பசியை அடைத்து விடும் என்று சொல்லுவார்கள். இப்போ எல்லாம் தலைகீழ்.எங்கும் இப்பொழுது தாரக மந்திரமாக இருப்பது அரிசியைக் குறை என்பதுதான். பால் குடி என்பார்கள் .மாடு மாதிரி கறிகாய்களைத் தின்பது கிடையாது . நிறைய சாப்பிடு, நிறைய வேலை செய் என்பதுதான் மந்திரமாக ஒலிக்கும்.
இப்போவெல்லாம் சின்ன வயதுப் பிள்ளைகள்கூட அரிசியைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பெல்லாம் காலையில் அரிசியால் செய்த பலகாரம் மதியம் சாப்பாட்டில் அரிசி இரவிலும் அரிசி.
அந்நாட்களில் வாழ்க்கை முறை வேறுமாதிரி இப்பொழுது வாழ்க்கை முறை எளிமையாகி விட்டது. மேலும் வெளியே வாங்கிச் சாப்பிடும் பொருட்கள் குறைவு.அனேகமாக பல வீடுகளில் அந்தப் பழக்கம் இல்லாமலேயே இருந்தது என்பதுதான் உண்மை.
இப்பொழுது காலை உணவென்றால் (corn flakes),ரொட்டி,காய்கறிகள்.பழங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.பழச்சாறு குடிக்க வற்புறுத்துகிறார்கள்.
பல பேர் மாடு மாதிரி காய்கறிகளையே தின்னுகிறார்கள்.
மதியம் திரும்ப ஸ்பூனால் அளவு செய்து சாப்பாடு சாபிடுகிறார்கள்.

மாலையில் தேனீருடன் பிஸ்கட் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.  முன்று வேளை சாப்பாடு என்பதும்  இடையிடையே மோர் அல்லது ஏதேனும் நிலக்கடலை அல்லது முறுக்கு போன்ற பலகாரங்களோ சாப்பிடுவது என்பது பழக்கமாயிருந்தது போக ,இப்போ
காலை உணவு (அவர்கள் கொடுக்கும் பட்டியலைப் பார்த்தாலே நடுத்தர வர்கத்து மனிதர்களுக்குப் பயமாயிருக்கும்)முற்பகல் உணவு, மதிய உணவு,மாலை உணவு இரவு உணவு என்று நாலு முறையாகப் பிரித்து உண்ணச்சொல்கிறார்கள்.
ஏரொபிக் செய்யச்சொல்கிறார்கள்.பெரியவர்களானால் நடக்கச்சொல்கிறார்கள்.
வாழ்க்கை முறை மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம்.
      நடப்பது என்பதும் ஏரோபிக் என்பதும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததது மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் இனிமேல் ஆட்டுக்கல்லையும் அமியையும் கொண்டு வர முடியும் என்று தொன்ற வில்லை. ஆனால் சைக்கிள் என்பது ஆரொக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்னவோ உண்மைதான். அதை ஏன் நாம் விட்டோம்? சீனாவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் சைக்கிளை மிகவும் உபயோகப்படுத்துகிறார்கள். கிழக்காசிய நாடுகளில் சைக்கிள் நடை முறையில் இருந்து வருகின்றது. அதை நாம் கை விட்டது பெரிய தவறாகப்போய் விட்டது. திரும்ப அதைப் பழக்க வேண்டும்.
     ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலொமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு நடந்து போவதை ஒரு கட்டயமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பணம் செலவு செய்து பெட்ரோல் செலவழித்து மோட்டார் சைக்கிள் போன்ற வாகனக்களில் போவதைத் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளையும் நேரத்தில் எழுந்து சீக்கிர‌மாக குளித்து ,உணவு சாப்பிட்டு நடந்து பள்ளிகளுக்கு செலவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். கூடிய வரைத் துணிகளைத் துவைக்க மெஷின்களைப் பயன் படுத்தாமல் இருந்தாலே ,கையால் துவைக்கும்போது நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.வீடு பெருக்குவது, துடைப்பது ஒரு நல்ல exercise.தினமும் செய்வது கடினமாயிருந்தாலும் இரன்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நம் துணிகளை நாமே துவைக்கலாம்.காலை மற்றும் மாலையில் காலார நடப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ந‌டந்து போய் ஏதாவது ஒரு வேலையைச்செய்து விட்டு வரலாம்.இவ்வாறு பல வழிகளிலும் நம்மை நாமே உணர்ந்து சில பழக்கங்களை மேற்கொண்டால் தனியாக ஆரொக்கியம் குறித்துக்கவலைப்பட வேண்டாம்.

Advertisements

Posted in பொது | 6 Comments »

Posted by kalyanakamala மேல் ஒக்ரோபர் 25, 2007

நெல்லிக்காய்களை  சென்னை மாம்பலம் கடை வீதிகளில் பார்க்கும்போதெலாம் வாங்க வேண்டும் என்று தோன்றும்.ஆனால் வாங்கி கடுகு தாளித்து கடாயிலிட்டு வதக்கும் விதத்தை நினைத்தால் அதன் சத்து போவதாக நினைத்து உயிரே போவது போல் வலிக்கும்.அந்த அளவு நெல்லிக்காயின் உயிர்ச்சத்தை நான் நேசித்தேன்.அப்பிடியே சாப்பிடலாம் என்றால் புளிக்குமோ என்று பயமாக இருக்கும். அன்று பிடிவாதமாக வாங்கி வந்தேன் அந்த அருமை நெல்லிக்கனியை.அதன் மேல் பெரிய புத்தகம் தைக்கும் ஊசியால் பலமுறை குத்தினேன். பேரிச்ச‌ம்பழ சிரப்பில் ஊற வைத்தேன்.மறுநாள் நெல்லிக்காய் சாப்பிட்டேன். கொஞ்சம் ஊறி இருந்தது. அப்புறம் நன்றாகவே ஊறிவிட்டது.இப்பொதெல்லாம் நெல்லிக்காய் சீசனில் நெல்லிக்காய் தினமும் ஒன்று உணவாய் ஆனது.

Posted in பொது, Uncategorized | 1 Comment »

யாரைக் குறை சொல்வது..

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

ஆன்கள்தான் தவறுகளுக்கு மூலகாரணம் என்று முடிவுகட்டிவிட்ட இன்னாட்களில் பெண்களின் விபரீதமான போக்கு பயமுறுத்துவதாக இருக்கிறது.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மனதைத்திகில் படுத்துகிது.என் நன்பர் ஒருவருக்குத்தெரிந்த ஒரு மனிதர் மன வெருபாடுகாரனமக மணமுறிவு ஆனவர்.வெலினாட்டில் வேலை பார்ப்பவர். இணையதலதில் மருமணத்துக்காக விளம்பரம் செய்திருந்தார். விருப்பம் தெரிவித்து பலபெண்கள் மெயில் அனுப்பி இருந்தார்கள்.இந்தியா வரும்போது எல்லொரையும் சந்தித்து ஒரு பெண்ணை முடிவு செய்யலாம் என தீர்மானித்து இருந்தர்.
ஒரு நாள் இந்தியவிற்கு வரவும் செய்தார்.ஒரு குரிப்பிட்ட பெண் மட்டும் ஏர் போர்டிலேயெ சந்திப்பதகக்கூறி ஒரு செல்பொனும் வெளி நாட்டிலிருந்தே வாங்கிவரச்சொல்லி இருக்கிறார். நண்பரும் பெண் பார்க்க நன்றாக இருந்ததால் செல்போனுடன் வந்து இறங்கினார்.ஏர்போர்டில் சந்தித்த பெண் நண்பரை தன் வேட்டுக்கு அழைதுச்சென்று செல்போனை எடுதுக்கொன்டதுடன் நில்லாமல் பியூட்டி பார்லருக்குப்போக 2000 ரூபாய் பணம் கெட்டிருக்கிறார். நண்பர் இல்லாத கொடுமை என்று நினைத்தும் தன் மீது அளவற்ற காதலால் நம்பிக்கை என்று நினைது கொடுத்திருக்கிறார்.
னண்பரின் இரக்க மனப்பான்மையையெ துருப்பாக எடுத்துக்கொன்டு அந்தப்பெண் ஒரு வாரத்துக்கும் மேல்   நண்பரின் பெற்றோரையும் சந்தித்து நயமாக குடும்பப்பெண் போல நாடகமாடி நண்
பரின் பணத்தை தண்ணீர் போல செலவழித்துவிட்டு ,கடைசியில் தனக்கு மூன்று லஷம் ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறாள் அந்தபu3021?பெண். நண்பர் விழித்துக்கொன்டார்.மூன்று லஷம் கொடுத்தவர் யார் எனக்கெட்டு அந்தப்பெண் காட்டிய நபரை ஒரு வழியக்கிவிட்டு அதுவும் செட் அப் என்று தெரிந்து கொன்டு விட்டால் போதும் என்றுதலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து பெற்றோர்களை எச்சரித்து விட்டு ஓர் திரும்பினார்.கல்யாண இணயதளங்களைக்குட நம்பி இறங்கமுடியாத நிலை.இப்படியும் பெண்களா?யாரைக்குற்றம் சொல்வது?

Posted in பொது | குறிச்சொல்லிடப்பட்டது: | 7 Comments »

பள்ளிப் பருவம்

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

நான் சிறுபெணணாக பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று நினைத்துபார்க்கையில் சிரிப்புத்தான் வரும். நான் ஒன்பதாம் வகுப்புப்படித்துக்கொன்டிருந்தேன். அப்போது எனக்கு பிறந்த நாள் வந்தது.பள்ளிப்பருவத்தில் பிறந்த நாள் என்பது மிகப்பெருமையன விஷயம்.ரொம்ப உற்சாகமாக நான் பள்ளியில் சக மாணவிகளுடன் உலவிவிட்டு படு மும்முரமாக வகுப்பு நடக்கும் சமயம் ஒரு திடீர் திருப்பம் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்.பள்ளியில் வெலை செய்யும் செவகர் என்னை தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாக வந்து தெரிவித்தார். அப்போதெல்லம் தலமை ஆசிரியர் கூப்பிடுவது என்பது மிக பயமுறுத்தும் விஷயம். பாராட்டுவதாக இருந்தால்  வகுப்பின் நடுவில் கூப்பிட்டு பாராட்ட மாட்டர்கள் என்பது எல்லொரும் அறிந்ததே.எனக்கு எப்படி எதிர்கொள்வது இந்த விஷயத்தை என்று இருந்தது.
சமாளித்துக்கொன்டு தலைமையசிரியர் அறையை நோக்கிப்பொனேன். அங்கே தலைமை ஆசிரியர் மற்றும் ஒருகுமாஸ்தா தபால்காரர் மூன்று பெரும் என் வருகைக்காக  காத்திருந்தனர்.எனக்கு மனதில் பயம். ஆனலும் நாம் எந்த தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையும் இருந்தாலும் இந்த மதிரி ஒரு சூழ்னிலை புதிது ஆகையால் பதற்றமக இருந்ததது.
தலைமை ஆசிரியர் என்னைக்கன்டதும் உனக்கு எத்தனை அண்ணன்கள் என்று இயல்பாகக்கேட்டார்கள். எனக்கு உண்மையிலே ஒரு அண்ணன் தான். எஙு உண்மையைக்கூறினேன் ஒரு அண்ணன் என்று.  பின் அண்ணான் என்ன செய்கிறார் எங்கு படிக்கிறார் போன்ற விவரங்களைக்கேட்டார்.  நானும் பயம் எதுவில்லாமல் உண்மையைக்கூறினேன். கையில் ஒரு பார்சலை எடுத்துக்காட்டி இதை அனுப்பியது யார் என்றும் உனக்கு இன்று பிறந்த நாளா என்றும் கேள்விக்கணைகளைத்தொடுத்தார். பார்சலை வாங்கிப்பார்த்த நான் அதன் மேல் இருந்த முகவரியைப்பர்த்தவுடன் தெம்பாகிவிட்டென்.அது எனது பெரியப்பா பிள்ளை (அண்ணன்முறைதான்) அனுப்பிய பார்செல்தான்.பிறந்த நாளுக்காக நினைவு வைத்துக்கொன்டு என் அண்ணன் எனக்கு அனுப்பிய பரிசை சரியாக பிறந்த நாள் அன்று நான் என் கையால் வாங்கிக்கொள்ள வெண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் என்பள்ளி விலாசத்துக்கே அவர் அனுப்பிய பரிசு இன்னொரு நல்ல எண்ணம் கொண்ட என் தலைமை ஆ சிரியரின் கைகளில் மாட்டிக்கொன்டு என்னைப்பார்த்து சிரித்தது.பள்ளிக்கு பரிசு வருகிறதா உன் அப்பவிடம் பேசிக்கொள்கிறேன் என்று மிரட்டி விட்டுச்சென்றார் போஸ்டு மேன்.தலைமை ஆசிரியருக்கு என்னைப்பற்றி மிக நல்ல அபிப்பிராயம்.இருந்தாலும் இதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம்.போஸ்டுமேனுக்கு நல்ல குடும்பப்பெண் எந்த தவறுகளிலும் மாட்டிக்கொள்ளக்கூடது என்ற நல்ல எண்ணம்தான். நிறைய பெருடைய நல்ல எண்ணங்கள் என் பிறந்த நாளில் வெளிப்பட்டது என்னை பயப்படுத்தியது என்னவோ உண்மைதான்

Posted in பொது | 3 Comments »

படிப்பது இராமயணம்..

Posted by kalyanakamala மேல் செப்ரெம்பர் 22, 2007

ஒரு நாள் கடுமையான தலைவலி. தாங்க முடியவில்லை.தனியே அவதிப்பட்டுக்கொன்டிருக்கிறோம். சட்டென்று பக்கத்தில் ஒருவர் மத்திரை ஒன்றை எடுத்துக்கொடுத்து தண்ணீர் கொடுத்தால் தேவலையாகிவிடும். ஆனால் இந்த சிறிய செயலை செய்து கொள்ளத்தெரியாமல் அவதிப்படுவது பெரும்பலும் நடக்கும் விஷயம்தான்.இந்த குறிப்பிட்ட மேற்கோள் இது மிகச்சிறிய விஷயம்,ஆனால் பெரிய பெரிய விஷயஙளில் கூட இதே அளவு உதவி இருந்தால் பெரிய தீர்வுகள் கிடைக்கும்.சின்ன மற்றும் பெரிய ப்ரச்சினைகளுக்கு மற்றவர் ஒரு சிறிய கைத்தூக்கல் தூக்கி விட்டால்பிரச்சினை தீர்ந்து விடும்.அனுமனுக்கு ஒரு ஜாம்பவான் இருந்ததால்தான் சுந்தரகான்டம் ராமாயணத்தில் உருவாயிற்று.அனுமனைக் கடலைத்தான்ட வைக்க ஜாம்பவனின் ஒரு சிரு ஊக்கம்தான் காரனமாயிற்று.அனுமன் கடல் தாண்டாவிட்டால் ராமாயணம் ஏது? ஒவ்வொருவீட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் பல ஜாம்பவான்கள் இருந்தால் நன்றாயிருக்குமே!ஒவ்வொருவரும் ஜாம்பவனாக மாறுவதைத்தான் ராமாயணம் எதிர் பார்க்கிறது.ஏன் மாற முடியவில்லை?ஏன் செய்யவில்லை? ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வில்லை?மனதால்,உடம்பால்,வார்த்தையால் உதவுவது என்பது பழக்கம்தான் காரணம்.பழக்கப்படுத்திகொள்வோம் பிரதி பலன் எதிர் பார்க்காமல் உதவுவதை.

Posted in பொது | 2 Comments »