Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

எங்கள் அன்புக்குரிய சின்னி

Posted by kalyanakamala மேல் நவம்பர் 9, 2007


தீபாவளி என்றால் எல்லொருக்கும் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். எனக்கு எங்கள் வீட்டில் இருந்த ஒரு செல்லப்பிராணிதான் நினைவுக்கு வருகிறது.செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது ஒரு தனி அனுபவம். கிட்டத்தட்ட வாழ்வின் அங்கமாகமே மாறி விடுகிற ஒரு பெரிய விஷயம் அது என்றுதான் சொல்ல வேன்டும். செல்ல பிராணி எதுவும் வளர்க்காதவர்களுக்கு அந்த உணர்வு சற்றும் புரிய வாய்ப்பில்லை.

 

         என் வீட்டில் 1984 ஜுன் மாதம் ஒரு அழகிய போமெரேனியன் குட்டி  நாய் வந்தது.அது வந்த தினத்தில் நாங்கள் மூன்று பேரும் மிகவும் excited ஆக இருந்தோம். நங்கள் மூன்று பேர் என்றால் நான் ,என்மகன் , என்மகள்.என் கணவர் அவ்வளவு சுவாரஸ்யம் காட்ட வில்லை.அவருடைய அக்கா என் மகனின் வேன்டுகோளுக்கு இரங்கிக் கொன்டு வந்திருந்ததால் வெறுக்கவும் இல்லை.

அந்தக்குட்டிக்கு என்னென்ன உணவு கொடுக்க வேன்டும் ,எப்படி வைத்துக்கொள்ள வேன்டும்,வெய்யிலுக்கு எப்படி பாதுகாக்க வேன்டுமென்பதெல்லாம் தெரிந்து கொன்டோம் மிக கவனமாக.அதற்கென தனி பவுடர் ,சோப்பு, பிரஷ் முதலியன வாங்கப்பட்டன.மிருக டாக்டரிடம் அழைத்துப்போய் அதற்கு தொற்று நோய்கள் வராமல் இருப்பதற்கு ஊசி போட்டு அதற்கான தனி புத்தகம் ஒன்று (history of the dog)வைத்துக்கொன்டோம்

வீட்டில் எப்போதும் நாய் பற்றிய பேச்சுதான்.அதற்கு சின்னி என்று பெயர் வைத்து இரன்டு குழந்தைகளுடன் மூன்றாவது குழந்தைபோல் அது வீட்டில் நடமாடி வந்தது.இரன்டு மாதக்கூட்டியாக வந்தது கொஞ்சம் கொஞ்சமாக வளரத்தொடங்கியது.

 

என்னுடைய இரன்டு குழந்தைகளும் சின்னி மீது அளவுக்கு மீறிய பாசம் வைத்திருந்தனர்.அதுவும் எங்களிடம் ஒரு நாய் போலவே நடந்து கொள்ளாது.இரவில் எங்கள் பக்கத்தில்தான் படுத்துக்கொள்ளும். தனியாக ஒரு ரூமில் போட்டு விட்டு கதவை மூடிக்கொன்டு வந்தால் ஒடிவந்து எங்கள் ரூம் கதவை கால்களால் பிறாண்டி எங்களைத் தூங்க விடாமல் செய்து எப்படியோ எங்கள் ரூமுக்கு வந்து விடும்.

எங்கள் வீடு முதல் மாடியில் இருக்கும். அந்தப் படிக்கட்டு வழியே யார் நடந்து போகும் சத்தம் கேட்டாலும் ஒடிப்போய் மூடியிருக்கும் எங்கள் வீட்டு வாயிற்கதவு அருகே பொய் கீழே இருக்கும் இடைவெளி வழியே முகர்ந்து பார்க்க முயற்ச்சிக்கும்.கொஞ்ச‌ காலத்திலேயெ தினமும் அந்த மாடிப்படி வழியே வந்து போகும் அனைவரது காலடிச்சத்ததையும் இனங்கண்டு கொள்ளத் தெரிந்து கொன்டு விட்டது. சின்னி தன்னை வெறுப்பவர்களையும், அன்புடன் பார்ப்பவர்களையும் அறிந்து கொன்டு விடும்.தன்னைக்கண்டு பயப்படுகிறவர்களையும் சின்னி வெறுப்பவர்களகவே புரிந்து கொண்டதுதான் ரொம்ப கஷடமன விஷயம்.சின்னி நமக்கு வேன்டியவர்களையும் வேன்டாதவர்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அதிசயமாக இருக்கும். நாம் அவர்களை நடத்துகின்ற விதத்தில் சின்னிக்கு அவர்களைப்பற்றி ஒரு அபிப்பிராயம் வந்து விடும்.

      என் அம்மா ஊரிலிருந்து வந்தால் அவர்கள் பக்கத்தில் என் பிள்ளைகள் எப்படி அருகே போய் பழகுவார்களோ அதே போல் தானும் இருக்க முயற்ச்சிக்கும். அவர்களோ இதை ஏற்றுக்கொள்ள யோசிப்பார்கள். ஆனால் சின்னி ஏற்றுக்கொள்ள வைத்து விட்டது . என் பெண் ஸ்கூலிலிருந்து வரும் நேரம் சரியாகத் தெரியும். அந்த நேரம் நெருங்கியதுமே வாயிற்படி அருகே ஒரு இடத்தில் சரியாகப்போய் படுத்துக்கொள்ளும். அவள் காலடியோசை படிகளில் கேட்டவுடன் காதை மடக்கி உறுதி செய்து கொள்ளும். அவள்தான் என்று உறுதி செய்து கொன்டு சின்னி தாவிக்குதித்து என்னருகே வந்து அவள் வந்து விட்டதை இங்குமங்கும் ஓடித்தெரிவித்து என்னை வாயிற்கதவைத் திறக்கச் சொல்லும்.  நான் வாயிற்கதவைத் திறந்தவுடன் அவள் மீது பாய்ந்து , அவள் மிது ஏறிக்குதித்து விளையாடி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளும் விதமே தனிதான்.அதை விவரிக்கவே முடியாது. அவள் முகம் கழுவி எதாவது சாப்பிடட்டும் என்பது போல் கொஞ்சம் போய் உட்கார்ந்து கொள்ளும். அவள் விளையாட நண்பர்களுடன் போனால் சின்னியும் கூடப்போய்விடும்.shuuttle விளையாட‌ தன் நண்பர்களுடன் அவள் போனால் யாராவது இவள் அடித்த பந்தை அடித்தால் சின்னிக்குகோபம் வந்து விடும்.அவர்களை பார்த்துக்குரைக்கும்.

      சங்கிலி போட்டு அதைக்கட்ட முடியாது. எல்லொரும் சங்கிலி போட்டுக்கட்டுங்கள் என்பார்கள். ஆனால் சின்னியை சங்கிலி போட்டுக் கட்டினால் குலைத்து சஙிலியை இழுத்து என்னவோ செய்து அதைக்கழட்ட வைத்து விடும். சில சமயங்கலைல் அழுது அமர்க்களம் பண்ணிக்குட சங்கிலியை அவிழ்க்க வைத்திருக்கிறது.

      எங்கள்வீட்டு வாசலில் ஒரு இஸ்திரி போடுபவர் இருப்பார். அவர் எங்கள் காலனியில் இருந்த எல்லோருடைய துணிக்கும் இஸ்திரி போட்டுத் தந்து தன் காலத்தை தள்ளிக் கொன்டிருந்தார். அவரைப்பர்த்து ஒருனாள் சின்னி குரைக்க அவர் பயந்து தான் இஸ்திரி போட்டுக்கொன்டிருந்த துணியை சின்னி மேல் வீசி சீச்சீ என்று சொல்லிவிட்டார். அன்றிலிருந்து சின்னி அவரையோ அவருடைய குடும்பத்தாரையோ கன்டால் குலைத்து ஒரு வழி பண்ணிவிடும். அவர் எப்போதாவது சின்னி பால்கனியில் நின்று கொன்டிருக்கும்போது வெளியில் தென்பட்டாரென்றால் குலைத்தே அவரை ஒரு வழி பண்ணிவிடும். அந்த செயலை கடைசி வரை எங்களால் மாற்றவே முடியவில்லை.இன்னொரு அதிசயம் என்னவென்றால் ஒருவரைப்பற்றி அதற்கு என்று ஒரு அபிப்பிராயம் உருவாகிவிட்டால் அதை மற்றிக்கொள்ளாது.

என் பிள்ளை சின்னிக்குக் மிக‌ உயர்ந்த சோப்புக்களைப்போட்டுக்  குளிப்பாட்டி , நன்கு துடைத்துவிட்டு, பவுடரையும் போட்டு விட்டு, பால் வைத்து, பிரஷ் பண்ணி விட்டால் மிக தைரியமாக பயப்படாமல் நின்று செய்து கொள்ளும்.அவனிடம் அப்படி ஒரு நம்பிக்கை. அவனும் என் கணவருமோ அல்லது அவனும் என் மகளுமோ கத்தி சத்தம் போட்டு சன்டையிட்டால் இருவரிடமும் பொய்க் கெஞ்சுவது போல் மாற்றி மாற்றி காலை பிராண்டி சும்மாயிருங்களேன் என்பது போல் செய்யும்.அவர்களும் சின்னிக்காக தங்கள் நிலையைக்கொஞ்சம் விட்டுக்கொடுப்பார்கள்.

மதிய‌ வேளையில் எல்லோரும் காலேஜ் மற்றும் அலுவலகம் போன பின் நான் பாங்கு மற்றும் தபாலாபீஸ் போனால் சின்னியும் கூட ஓடி வருவது அந்த ஏரியாவில் எல்லொருக்கும் ஒரு பழகிப்போன காட்சியாயிருந்தது.

யாரையாவது பார்த்துக் குரைக்கத் தோன்றினால், குரைத்து விட்டு வந்து, என்பக்கத்தில் நெருக்கமக உட்கார்ந்து கொன்டு, தான் செய்வது எனக்கு வருத்ததைத்தரும் நான் ஏன் அவர்களைப்பர்த்து அனாவசியமாகக் குரைக்கிறாய் என்று திட்டுவேன் என்ற குற்ற உணர்வோடு என்னைப்பர்த்து விட்டு என் மீது சாய்ந்து கொன்டு படுதுக்கொள்ளும்.அதே போல் சந்தொஷத்தைத் தெரிவிக்கும் முறையும் மிக அழகாகச் இருக்கும்.‌ அக்கம்பக்கத்தில் சில பேர் அதன் அன்புக்குப் பாத்திரமாகாதவர்கள் அதைச் சத்துருவாக நினைப்பார்கள்.சில பேர் கெட்டிக்காரத்தனமாக அதை அன்பால் கவர்ந்து விடுவார்கள். சின்னிக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என் பெண் அல்லது பிள்ளையுடன் விளையாடுவதும், நாங்கள் அனைவரும் உட்கார்ந்து  டி வி பார்த்துக்கொன்டிருந்தால் நடுவில் அதுவும் உட்கார்ந்து பார்ப்பது,பேசிக்கொன்டிருந்தால் சோபாவில் அதுவும் உட்கர்ந்து, காதை உயர்த்தி வெளியில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்துக்கும் react

பண்ணுவது.அப்படிப்பண்ணும்போது சின்னிக்கு என்னமோ தாந்தான் எங்களைகாவல் காப்பது போல் ஒரு நினைப்பு இருப்பது எங்களுக்கு (பழகினவர்களுக்கு)தெரியும் .அன்னால் இவ்வளவு ஸாகசம் செய்கிற சின்னி தீபாவளி சமயத்தில் பட்டாசு சத்தம் கேட்டால் மட்டும் நடு நடுங்கிப்போய் சோபா அல்லது கட்டில் அடியில் போய் கண் மறைவாகப் படுத்துக்கொன்டு பயந்து நடுங்கும்.வெளீயே கொன்டு வர நாம் எடுக்கும் முயற்சி யெல்லாம் தோற்றுப்போகும். சின்னியைப்பற்றி எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. மிக சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். நீங்களும் எங்கள் சின்னியைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்!

6 பதில்கள் to “எங்கள் அன்புக்குரிய சின்னி”

  1. கமலா மேடம் நல்லா சுவாறஸ்யமா எழுதி இருக்கீங்க. உங்க நடை (flow) நல்லா இருக்கு எழுத்துப்பிழை கொஞ்சம் இருக்கு அதை மட்டும் சரி செய்தால் சூப்பராயிடும் உங்க பதிவுகள்.

  2. thangs a lot!

  3. //தன்னைக்கண்டு பயப்படுகிறவர்களையும் சின்னி வெறுப்பவர்களகவே புரிந்து கொண்டதுதான் ரொம்ப கஷடமன விஷயம்.//

    உண்மை தான். பயம் எனும் உணர்ச்சியின் மற்றொரு உருவம் தானே வெறுப்பு. அதனால் தான் பிராணிகள் தன்னைக்கண்டு பயப்படுபவர்களையும் வெறுப்பவர்களையும் ஒரே மாதிரி புரிந்துகொள்ளும் போலிருக்கிறது. நாய்கள் வளர்த்ததில்லைன்னாலும் சில வருடங்களாகவே எனக்கு பூனைகளுடன் சகவாசம் உண்டு. பூனைகள் நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் விதம் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.

    அதோடு நம் காதுகளை விட பூனைகளின் காதுகள் பல மடங்குகள் கூர்மையானவை. பூனை, நாய் மட்டுமல்ல, எந்த தீபாவளியன்றாவது காக்கைகளை நீங்கள் வெளியே பார்த்ததுண்டா? அதனாலேயே சில வருடங்கள் முன்புவரை தீபாவளிக்கு தீபாவளி அணுகுண்டு, லட்சுமி வெடி, சரம் போன்ற வெடிகளை வெடித்தே பொழுதைப் போக்கிய நான் இப்போதெல்லாம் சத்தம் போடும் வெடிகளையே வெடிப்பதில்லை!

  4. மிகவும் மகிழ்ச்சி! உங்கள் வருகைக்கும்,கருத்துப்பறிமாற்றத்துக்கும்!

  5. சக்தி said

    உங்களுடைய அன்புக்குரிய சின்னி.. மிக நன்றாக இருக்கிறது. நமது செல்லநாய்க்குட்டியின் அருமையை மற்றவர்களுக்கு புரிவது போல சொல்லுவது மிகக் கடினம். அழகாக சொல்லி இருக்கிறீர்கள். :-). வாழ்த்துக்கள்.

  6. நன்றி சக்தி!அன்புக்குரியதையும், மகிழ்ச்சியளித்ததையும் விவரிப்பது ஒரு தனி ஊக்கத்தை அளிப்பவை அல்லவா? நினைத்தாலே இனிக்கும் அனுபவங்கள் அவை.பதிவுக்கு வருகை தந்தமைக்கும் கருத்துப் பறிமாற்றத்துக்கும் நன்றி!
    கமலா

சந்தோஷ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி