Kalyanakamala’s Weblog

Just another WordPress.com weblog

தந்தை மகள் உறவு நிபந்த‌னைகுட்பட்டதா?

Posted by kalyanakamala மேல் ஜூன் 29, 2008


நேற்றைக்கு ஒரு நண்பரின் மகனுக்காக கோர்ட்டுக்குச் செல்லவெண்டிய நிர்பந்தம். கோர்ட்டுன்னா அந்த ஆணின் திருமணம் மன வேறுபாட்டால் முறிந்து விட்டது. பெண் குழந்தை ஒன்று உண்டு. வயது 7 முடிந்து 8வது வயது நடக்கிறது.
   அந்த ஆண் வெளினாட்டில் பணி புரிபவர். அதனால் அவர் குழந்தையைப் பார்க்க நீதிபதியின் தாற்காலிக ஆணைப்படி அனுமதி பெற்றாலும் பல காரணங்கள் சொல்லி  அதை அந்தப் பெண்மணியின் பக்கத்தினர்  தள்ளுபடி செய்கிறார்கள்.
   இவர் ஒவ்வொரு முறை வெளினாட்டிலிருந்து வந்து 6 அல்லது 7 மாதங்கள் இந்தியாவில் தங்கி மனுப்போட்டு கேஸ் கோர்ட்டில் வந்து வாதிக்கப்பட்டு பல ஹியரிங்குகளுக்குப் பின் சில நாட்கள் அவருடைய மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டு  பின் முழு அனுமதி பெறாமலேயே வெளினாடு கிளம்பும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.         
   இப்படியே 7 வருடங்கள் போன பின் இப்போது அவருடைய தாய் தந்தையரும் அவருடன் கூடப்பொகும் அனுமதி பெற்றனர்.
ஒரு சப்போர்ட்டுக்காக நானும் போனேன்.
  அந்தக்குழந்தை  தகப்பனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. தாயின் சவால் “உன்னால் முடிந்தால் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்து பேசு பார்க்கலாம்”என்பது
 அந்த ஆணை வளர்த்த விதம் சரியில்லை என்றும் புகார்.
    குழந்தையைப் போட்டோ எடுத்தால் கையிலிருந்த கேமராவைப் பிடுங்கித் தூர எறிந்து விடுவதாக மிரட்டல். அதையும் மீறி போட்டொ எடுத்தால் குழந்தையை மறைத்துக்கொள்ளுவது கைகளால் பேப்பரால் மற்ற பிற பொருட்கள்களால்.அதையும் மீறி செய்தால் போலீசைக் கூப்பிடுவதாக மிரட்டல்.

வயதில் பெரியவர்களான தாத்தா பாட்டிக்கு துளிகூட மதிப்பு கொடுக்கப்படவில்லை.
    அந்த ஆண் சரியாக வளர்க்கப்படவில்லை ,சரி!இந்தப்பெண் சரியாகச் செயல்படுகிறாளா? தன் குழந்தையை சரியான பாதையில்தான் கொண்டு போகிறார்களா?
    தகப்பனைப் பார்த்து” நீ பெண்ணை மதிக்கக் கற்றுக்கொள்.உன் பெண் உன்னை மதிப்பாள்” என்று அறிவுரை வேறு.
     த‌‌கப்பனைக் கோர்ட்டில் நிறுத்தி மதிக்காமல் நடத்தி த‌ன் மகளுக்கு அந்த்தாய் சொல்லிக் கொடுத்து வள‌ர்க்கும் முறைதான் என்ன? ஆணை மதிக்கக்டாது என்பதுதானே?
இதுதான் பெண் உரிமையா?

 

21 பதில்கள் to “தந்தை மகள் உறவு நிபந்த‌னைகுட்பட்டதா?”

  1. ஆண்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறீர்கள். நன்றி. எப்படியும் அந்தத் தகப்பன் நாற்பது வயதை நெருங்கியிருப்பார். அந்தத் தாய் தன்னுடைய எதிர்காலத்துக்கு ஒரு ஆதாரமாக தனது மகளை எடுத்துக் கொண்டார். அந்த தகப்பனுடைய எதிர்காலம்?

    அவ்வை ஷன்முகி படத்தில் ஏற்கெனவே வந்த வசனம் தான், கணவன் மணைவி பிரியலாம், (வளருகிற குழந்தையின்) அப்பா அம்மா பிரியக் கூடாது. அந்த நண்பரை நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள். எதிர்காலம் நல்ல விதமாகக் கூட அமையலாம்.

  2. kamala said

    நன்றி விஜய்கோபால்சாமி !
    இருவேறு பின்னணிகளில் வளர்ந்தவர்கள் priority வேறுபடுகிறது. இதை பெறும்பாலும் பெண்களே balance செய்து வந்ததைப் பார்த்து வளர்ந்த ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் ஒரு சவாலாகவே அமைந்து விடுகிறது.
    நான் எழுதியிருக்கும் குழப்பங்கள் இந்தக் காரணங்களாலேயே ஏற்படுகிறது.
    நீங்க‌ள் சொல்லியிருப்ப‌து போல‌ ந‌ட‌க்கும் என அந்த‌‌ ஆண் ந‌ம்பியிருக்கிறாரா எனத்‌‌ தெரிய‌வில்லை. ந‌டந்தால் மூவ‌ருக்குமே ந‌ல்ல‌துதான். காத்திருந்து பார்க்க‌லாம்.
    அன்புட‌ன்
    க‌ம‌லா

  3. bmurali80 said

    அந்த குழந்தை புகைப்படம் எடுக்கும் பொழுது கைகளால் முகத்தை மறைத்திகொள்வது சற்று சிந்திக்க வைக்கிறது. அந்த ஆண் அப்படி என்ன செய்தார் என்று. சிலரை மன்னிபது இயலாத காரியம். அப்படி மதிக்கப்படாதவருடன் செல்லும் பொழுது சுற்றமும் பழிக்கப்படுகிறது.
    
    கண்டிப்பாக அந்த குழந்தையின் மனத்தில் தன் தந்தையை பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை அழிக்க அவர் பாடுபடலாம். பொது இடங்களில் சந்திக்க அனுமதி பெறலாம்.
    
    இங்கு சட்டம் பெண்ணிற்கே சாதகமாக இருப்பது உண்மை. ஆனால் சமுதாயத்தை பிரதிபலிப்பது தானே சட்டம். மேல் கூறியது போல் இந்த விஷயத்தில் பொருமை (வாழ்நாள் முழுவதும்) தேவை!! காலம் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.

  4. குழந்தை பிறப்பதற்கு முன்னரே தம்பதிகள் பிரிந்து விட்டனர். குடும்பத்தில் தவறுகள் மன்னிக்கப்பட்டு திருத்தப்பட‌ வேண்டியவை இல்லையா? ஒருவர் தவறு செய்தால் மற்றவர் தவறு செய்து பழி வாங்குவதுதான் நியாயமா? யாருக்கும் நான் வக்காலத்து வாங்க வில்லை. குடும்பம் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயமில்லையா? விஜய கோபலசாமி சொன்னது போல அதுவும் பெற்றொர் பிரியக்கூடாது இல்லையா?
    இந்த‌‌ விஷ‌ய‌த்தின் ம‌றுப‌க்க‌மும் சிந்திக்க‌ வேண்டிய‌தாக‌ இருக்கிற‌து. அந்த‌‌ ஆண் ம‌கனுக்கு மறுமணம் செய்து கொள்வது என்பது மனம் ‌ஒவ்வாத செயலாக இருக்கிறதே?
    இந்த காலத்தில் ஆண்க‌ளுக்கும் க‌ற்பு உண்டோ?
    க‌ம‌லா

  5. illangkumaran said

    இந்த காலத்தில் ஆண்க‌ளுக்கும் க‌ற்பு உண்டோ?

    இந்த வினாவிற்குப் பொருள் புரியவில்லை. (ஆண்க‌ளுக்கும்) இதற்கும் பொருள் புரியவில்லை.

  6. bmurali80 said

    நீங்கள் எந்த பக்கம் என்று தெரியவில்லை. நீங்கள் எழுப்பியது இரு முக்கிய கேள்விகள்:

    1. இது தான் பெண் உரிமையா?
    2. ஆணுக்கும் கற்புண்டா?
    
    திருமண வாழ்வில் பிரிவு இரு பக்கங்களுக்கு ஏற்படும் கசப்பான் உணர்வே. யாரும் இதனை மறுக்க முடியாது. நம் சமுதாயத்தில் இது பெண்ணை மிகவும் பாதிக்கும் விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இன்று இந்த பிரிவு ஆண் மீதும் அவன் சார்ந்த சுற்றத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
    
    பழிக்கு பழியல்ல அந்த பெண் செய்வது. என்னுடைய ஒரே உறவை நீ வந்து சொந்தம் கொண்டாடதே என்பது தான் அந்த தாய் சொல்லும் செய்தி. பெண்ணான என்னை மதிக்காத நீ எப்படி என் பிள்ளையை மதிப்பாய் என்பது கேள்வி. இது சரியா தவரா என்று நீங்கள் கேட்கிறீர்கள். உண்மை: இப்படி பேசும் பெண்கள் தான் நிதற்சன உண்மை. என் உறவினர் ஒருவரின் பிரிவைக் கண்டவன். எனக்கு ஆண் துணையே வேண்டாம் என்பாள்! முன் கூறியது போல் இது காலப் போகில் தான் மாறுபடும். இது பெண் உரிமையல்ல அடிப்பட்ட மனத்தின் வெளிப்பாடு!

    உங்கள் இரண்டாம் கேள்விக்கு நான் கூறக்கூடிய பதில் சற்று கசப்பானதாக இருக்கலாம். இருமணம் செய்துக் கொள்ள தயங்காத பல ஆண்கள் உள்ளனர் நம் நாட்டில். ஆனால் மறுமணம் செய்து கொள்ளமாட்டேன் என்பவரை தியாகி என்பதா இல்லை கொழை என்பதா? ஆண்கள் இந்த விஷயத்தில் தயங்குவதற்கு சில காரணங்கள்:
    
    1. தன் குழந்தை தன்னைப் பற்றி என்ன நினைக்குமோ என்ற பயம்.
    2. தான் பிரிந்தப் பெண் தனியாக வாழும் பொழுது நாம் திருமணம் செய்துக்கொண்டால் என்ன பேசும் இந்த சமுதாயம் என்ற பயம்.
    3. இன்றும் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கும் மனம். இந்த யொசனை சற்று முன் வந்திருந்தால் அந்த ஆண் தன் மனைவியை நேசித்திருப்பான். பிரிவு ஏற்பட்டிருக்காது.
    
    குடும்பம் என்பது முடிந்துவிட்ட விஷயம் இங்கே. குழந்தைக்காக போராட்ட தயார் என்றால் காத்திருக்கலாம் அந்த குழந்தை சுய சிந்தனை பெரும் பொழுது அவளுக்கு அப்பா தேவையா இல்லையா என்ற முடிவுக்கு வருவாள்!

  7. முரளி!
    குடும்பம் என்பது முடிந்து விட்ட ஒன்று என்று எழுதியிருக்கிறிர்கள். எனக்குத் தெரிந்த ஒரு ஜோடி பத்து வருடங்களுக்குப் பின் திரும்பச் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சினை ஒவ்வொரு மாதிரி என்றாலும் (வாய்ப்புகள் ரொம்ப குறைவு என்றாலும்)
    நடக்கச் சாத்தியங்கள் உள்ளதே? மன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கலாமோ?
    என்னோட ஒரே உறவை நீ சொந்தம் கொண்டாடதே எனக்கூறும் பெண் ஒரு மகள்தானே. அவள் அம்மாவுக்கு மட்டும்தான் பெண்ணா? அவளுடைய அப்பாவுக்குஅவள் பெண்ணில்லையா? அவளுடைய அப்பா தவறுகளே செய்ததில்லையா? அவள் மன்னித்ததே இல்லையா?
    எங்கள் குடும்பங்களில் இன்னும் கூட ஆணாதிக்கம் கொடி கட்டித்தான் பறக்கிறது. விட்டுக் கொடுப்பதையே பழக்கமாக்கி கொண்டுள்ளோம். நான் மட்டுமில்லை எனக்குத்தெரிந்து பல பெண்கள் வீட்டுக்குள்ளேயே போராட்டங்கள் நடத்திக்கொண்டு வாழ்கிறோம்.அது தவறா? தயவு செய்து ஆணாஆதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்.அதை முறியடிக்கவேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் அது அவ்வளவு சுலபம் என்று தோன்றவில்லை.
    அன்புடன்
    கமலா

  8. இளங்குமரன்,
    உங்கள் கேள்விக்கு முரளியின் பதிலில் இரண்டாவது பாகம் பதிலாக இருக்கலாம்.
    அன்புடன்
    கமலா

  9. bmurali80 said

    மேடம் மூச்சு வாங்குது. கேள்விகள் கேட்பது சுலபம்.

    நீயா நானா நிகழ்ச்சியில் இரு மாதங்களுக்கு முன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண் பெண் கூட்டத்தை கொண்டு வந்தனர். அதில் இருந்த பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு “என்னை இணையாக நடத்த வேண்டும்” என்பதே. பிறகு தான் சம்பாத்தியம் தகுதி எல்லாம்.

    சகிப்பது எதற்கு? வேண்டாமே இந்த போலி நாடகம். பிடிக்கலைனா பிடிக்கலை. அடி உதை ஏசல் எள்ளி நகையாடுவது அழுவது என்று எவ்வளவு தான் ஒரு பெண் பொருத்துப் போவாள்? காதல் அன்பு பகிற்வுக்கு தானே திருமணம். சகிப்பது 1980-முன் அத்தியாயம்.

    மன்னிக்கப் படக்கூடிய குற்றமாக இருந்தால் அவர்கள் பிறிந்திருக்க மாட்டார்கள். மன்னிப்பு என்பதை சொல்லளவில் சொல்லிவிட்டு மருபடியும் பழையக்குருடி கதவத்தறடி என்று இருக்கும் ஆண்கள் அதிகம். மன்னிப்பை செயலால் காட்டி, தான் திருந்திவிட்டதை உணர்த்தினால் கல்லும் கரையும். அதனால் தான் காலம் மட்டுமே இந்த குழப்பதிற்கு பதில் சொல்லும். இது 2000தின் அத்தியாயம்

  10. kamala said

    “நீயா நானா நிகழ்ச்சியில் இரு மாதங்களுக்கு முன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண் பெண் கூட்டத்தை கொண்டு வந்தனர். அதில் இருந்த பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு “என்னை இணையாக நடத்த வேண்டும்” என்பதே. பிறகு தான் சம்பாத்தியம் தகுதி எல்லாம். ”

    நீயா நானாவில் சொல்வது எதிர்பார்ப்பு. தவறுகள் நிகழ்ந்து விடும் பட்சத்தில் ந‌டப்பது அல்லது நடக்க வேண்டியது என்ன?
    எவ்வளவு பொறுமையாக இருந்தாலும் எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் இருபாலரிடமும் சகிப்புத்தன்மை கலந்த விட்டுகொடுத்தல் இருக்க வேண்டும். இது இல்லாமல் எப்பேற்பட்ட உத்தமனாக அல்லது உத்தமியாக இருந்தாலும் ஓடாது. சகிப்புத்தன்மை கலந்த விட்டுக்கொடுத்தல் +புரிந்து கொள்ளுதல் இருக்க வெண்டும். பிரச்சினைகள்தான் வேறு வேறே தவிர வலி ஒரே மாதிரிதான்.காலம் எவ்வளவு மாறினாலும் எந்த நாடாக இருந்தாலும் திருமணம் என்ற பந்தம் நிலைக்க tolerence, togetherness,trust
    என்ற மூன்றும் மட்டுமே திருமணத்தை நிலையாக வைக்க முடியும்.
    உறுதியாக‌
    கமலா

  11. Nithil said

    I do not know the reasons which lead them to get divorced. I do not jump into a conclusion like bmurali80 //இன்றும் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கும் மனம். இந்த யொசனை சற்று முன் வந்திருந்தால் அந்த ஆண் தன் மனைவியை நேசித்திருப்பான். பிரிவு ஏற்பட்டிருக்காது//

    The mother and her family should respect the court’s judgement. Denying the father to see his daughter is sheer arrogance. (I am a father too and i can understand the pain).

    I think the mother is lacking confidence in herself. She might think that the girl would develop liking for her father and leave the mother one day, if the girl is allowed to meet her father. The mother should realize that even though she got divorced from her husband, still he is the father of her child. Only their marriage got divorced but the relationship between the father and daughter will be there forever.

    I appreciate the father’s patience and his efforts to see his daughter. As Mr. Vijaygopalsamy said one day the father’s efforts will get suceed. My best wishes to the father.

  12. kamala said

    ஓஹோ அப்படி ஒரு பக்கம் இருக்கிறதா? நன்றி நிதில்!
    கருத்துக்கு மிக்க நன்றி!
    அன்புடன்
    கமலா

  13. bmurali80 said

    Mr. Nikil – you have passed a clear judgement that the lady is lacking in confidence. I have used derivative reasoning to state that “the man should have loved her more” (reason: divorce).

    What is your reasoning?
    As you said when the lady lacks confidence there is no way she is going to give the man a chance and it is not arrogance – it is the mother’s heart that is bleeding because of previous actions by the father. The man has to prove that the things are not the same to gain her confidence.

    All of a sudden you say “here is the court order now show me the child” is arrogance!

    Cinema dialouges can stay in cinema, this is reality. Once the child is able to decide for herself she will choose whether a father is required or not and at the sametime the father has the choice to accept the child or not (this is mostly possible).

  14. carthickeyan said

    அந்த பெண் கல்வியறிவு பெற்றவள்தானே!!! ஏன்னா இந்த காலத்தில் கல்வியறிவு பெற்ற பெண்கள் தான் இவ்வாரு நடந்து கொள்கிறார்கள்.. என்ன செய்ய இது எல்லாம் ஆண்களின் தலைவிதி

  15. முதிர்ச்சியுடன் கூடிய கல்வி அறிவு பிரச்சினைக்குத் தீர்வு காண உதவி இருக்குமே? பிரச்சினைக்குத் தீர்வு இன்னொரு பிரச்சினையாக இருக்க முடியாது எனத் தெரிந்திருக்குமே? எப்படியும் அந்தக் குழந்தையை ஒற்றைப் பெண்ணாக வளர்த்து ஆளாக்குவது வாழ்க்கையில் ஒரு சவால்தான். திருமணத்தைக் காப்பதற்காக எடுக்கும் ப்ரயத்தனதை(efforts) சிறுமியை வளர்ப்பதற்காக எடுக்கலாம் என்று பெண்ணின் தாய் தந்தையர் தைரியம் அளித்திருக்கலாம்.ஓரளவு படித்தவள்தான்.
    அன்புடன்
    கமலா

  16. nithil said

    Hi bmurali80

    Mrs. Kamala did not mention even a single reason for the couple’s divorce. So it is not fair to point either the husband or the wife (no matter whether you use derivative reasoning). My reasoning is based on the current situation and what Mrs. Kamala had written.

    //The man has to prove that the things are not the same to gain her confidence// ~ again you have jumped into conclusion that the man is wrong.

    //All of a sudden you say “here is the court order now show me the child” is arrogance!// It is not all of a sudden… the man is fighting for the past 7 years. Please read the post again.

    Not listening to court order…. Not respecting the elders….. denying the father to see his child or take photograph of his child… அதையும் மீறி போட்டொ எடுத்தால் குழந்தையை மறைத்துக்கொள்ளுவது கைகளால் பேப்பரால் மற்ற பிற பொருட்கள்களால்.அதையும் மீறி செய்தால் போலீசைக் கூப்பிடுவதாக மிரட்டல்……. What would you call a person with these attitudes….ARROGANT

    In my previous ‘maru mozhi’ I mentioned the lady was lacking confidence because of her attitudes mentioned above.

    Nithil

  17. நிதில்

    கமலா விவாகரத்துக்குக் காரணம் நான் கூறவில்லை என்பது உங்கள் கூற்று. செப்டெம்பரில் திருமணம் ஆகி வெளி நாடு போன அவர் , டிசம்பரில் இன்னும் கொஞ்சம் நல்ல வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று , வேலை மாற்றிக் கொள்கிறேன் என்று மனைவியுடன் இந்தியா திரும்பி விட்டார். கொஞ்ச காலம் நல்ல வேலை அமைய வில்லை. இரு பக்கமும் வசதியானவர்கள். பையன் கொஞ்சம் பிசினெஸ் பண்ணலாம் என்று யோசிக்க மாமனாரும், அப்பாவும் ஆதரிக்கவில்லை.
    இதற்குள் பெண் பிரசவிக்க பிறந்த வீடு போனாள். பெண்ணின் அம்மா அப்பா பெண்ணைத் திரும்ப அனுப்ப வில்லை.இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைத்த பின்னும் நல்லா செட்டில் ஆகட்டும் அனுப்புகிறோம் என்றனர்.
    இதற்குள் பையன் மனைவி குழந்தை எங்கள் வீட்டில் இருக்கட்டும் நான் செட்டில் ஆகிறேன் என்றான். அனுப்பவில்லை.
    அதற்கப்புறம் சண்டையிலேயே 1 வருடம் ஓடியது.
    பையன் குடித்தான் அடித்தான் என்று புகார்.குடிக்கு வைத்தியம் செய்யணும் என்று மருத்துவ மனையில் சேர்த்து evidence உண்டாக்கினார்கள்.
    சன்டை போடதீர்கள் என்று எவ்வளவோ கூறியும் மாமியாரும் மாப்பிள்ளையும் நிறுத்தவில்லை. மாமனார் கிரிமினல் கம்பிள‌யிண்டு கொடுத்து பையனை உள்ளே தள்ளினார். குழந்தையின் முதல் பிறந்த தினத்தன்று பையன் உள்ளே. போனில் கொலை மிரட்டல் செய்தான் என்று புகார்.பின்னர் டைவொர்ஸ் விண்ணப்பித்து ஒரு தலைப்பஷமான தீர்ப்பைப்பெற்றார்கள்.தீர்ப்பின் போது பையன் வெளினாட்டில். திரும்ப வந்து குழந்தையைப் பர்ர்க்க விண்ணப்பித்தால் மருத்துவமனை சர்டிபிகேட்டுடன் மறுப்பு. பையன் திரும்ப சவுதி அரபியாவில் போய் இரண்டு வருடம் இருந்து விட்டு வந்தான்.
    வருடம் ரூபாய்62500 கட்டணும் குழந்தை பராமரிப்புக்கு என்றார்கள். மூன்று வருட தொகையை முன்று மாததில் கட்டினான். பணத்தை எடுத்து உபயொகிக்கவில்லை.
    கேட்டால் கோர்ட்டு ஆர்டர் அது ,அதனால் கட்டினீர்கள்.அதை நீங்கள் கேட்க முடியாது என்பது பதில்.பையன் சம்பதிது அனுப்பிய பணம் சேமிப்புக் கணக்கில் 260000 கிடக்கிறது.
    அவர்கள் பக்கத்திலிருந்து புகார் வேலை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை, குடிக்கிறார் என்பதே.
    பின்குறிப்பு‍:பெண் குடிப்பதை பெரிய குற்றமாக நினைப்பவள் என்று கூறமுடியாது. திருமணத்துக்கு முன்னாலேயே பையன் அவளிடம் கூறியிருக்கிறான்.
    அன்புடன்
    கமலா

  18. bmurali80 said

    ckarthikeyan – வருந்தத் தக்க மனோபாவம்.

    Mr. Nithil – I withdraw my arguments after reading this article
    http://www.ibnlive.com/news/tn-women-cops-use-third-degree-to-solve-wedding-woes/68518-3.html but as you can see the guy has drinking habits. Resigned from his job before getting a job. All these things add up to instability and insecurity of the wife. Therefore he has to prove to her that life is not the same.

    கமலா மேடம் – குடி பழக்கம் பெரிசா எடுத்தகலை அந்த பெண் என்று சொல்வது சரியா?

  19. nithil said

    மேடம், என்னுடைய மறுமொழியில், காரணம் தெரியாமல் கணவனையோ அல்லது மனைவியையோ குற்றம் கூற வேண்டாமே என்றுதான் சொல்லியிருந்தேன்.

    குழந்தையை காட்டாமல் மறுப்பது, பெரியவர்களை மதியாமை இவையெல்லாம் அந்த தகப்பன் மேல் எனக்கு பரிதாபம் ஏற்பட்டது.

    மற்றபடி குடியை கெடுக்கும் குடியை அந்த தகப்பன் விடுவது, நல்ல வேலை தேடிக்கொள்வது அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நல்லது.

    எந்த குழந்தைக்கும் தாய் மற்றும் தந்தை இருவரது அன்பும் ஒரு சேர கிடைக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த குழந்தை சிறிது அபாக்கியசாலிதான்.

    நித்தில்

  20. ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்! ந‌ல்லது நடக்க இறைவனைப் பிரர்த்திப்போம்!
    அன்புடன்
    கமலா

  21. kamala said

    குடிப்பழக்கம் மிக மிகக் கொடுமையானது. வேறு வேலையில்லமல் இருக்கிற வேலையை விடுவது அதை விட கொடிது. குடும்பத்தைக் கலைப்பதும், அதற்காக என்ன வேண்டுமானால் செய்வதும் , உணர்வுப்பூர்வமான அணுகுமுறை இல்லாத போலீசையும் வக்கீல்களையும் தேடிப்போவது அதைவிட மிக மோசமான தீர்வு.
    ஆனால் முதலில் குடிப்பேன் என்று பையன் சொன்னதைப் அந்தப்பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது உண்மை.
    அன்புடன்
    கமலா

kalyanakamala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி